News June 1, 2024

கெஜ்ரிவால் ஜாமின் மனு மீது ஜூன் 5இல் தீர்ப்பு

image

கெஜ்ரிவால் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஜூன் 5இல் வழங்கப்பட உள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஜாமின் கோரி டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். கெஜ்ரிவால் உடல்நிலையில் தவறான தகவல்களை கூறி ஜாமின் பெற முயற்சிப்பதாக அமலாக்கத்துறை குற்ற சாட்டுக்களை முன்வைத்தது. இந்நிலையில், நாளை காலை கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைய உள்ளார்.

News June 1, 2024

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

image

நேற்று ஏற்பட்ட திருவள்ளூர் பெயிண்ட் ஆலை விபத்தில் 3 தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது ஆலையின் சுவர் விழுந்து உயிரிழந்தார். இவர்கள் நான்கு பேரின் குடும்பத்தினருக்கும் முதல்வர் ஸ்டாலின் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். இவர்களது குடும்பத்தினருக்கு தேவையான நிவாரணத்தை அரசு செய்யும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

News June 1, 2024

ராக்கெட்டின் செலவுகளை குறைக்கும் 3டி தொழில்நுட்பம்

image

விண்வெளித் துறையில் 3டி அச்சுத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், ராக்கெட் என்ஜினைத் தயாரிக்கும் செலவும், காலமும் பன்மடங்கு குறைவதாக குறிப்பிடும் விஞ்ஞானிகள், இம்முறையில் என்ஜினைத் தயாரிக்க 3 மாதங்களுக்கு பதிலாக, 72 மணி நேரமே தேவைப்படுவதாக தெரிவிக்கின்றனர். வழக்கமான என்ஜினுடன் ஒப்பிடும் போது, 3டி என்ஜினை தயாரிக்க 10இல் ஒரு மடங்கு தொகையே செலவாவதாகவும் கூறுகின்றனர்.

News June 1, 2024

உலக செஸ் போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு விருப்பம்

image

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான திட்ட அறிக்கையை சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் அரசு சமர்ப்பித்துள்ளது. டெல்லி, சிங்கப்பூர் அரசுகளும் விருப்பம் தெரிவித்துள்ளதால், 3 விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு அடுத்த வாரம் முடிவெடுக்கப்படவுள்ளது. உலக செஸ் சாம்பியன் டிங் லிரன், தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மோதவுள்ளனர்.

News June 1, 2024

தமிழகத்தில் வரலாற்று வெற்றியை பாஜக பெறும்

image

தமிழகத்தில் யாருமே பெற்றிராத வரலாற்று திருப்புமுனை வெற்றியை பாஜக பெறும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மோடியின் அலை வீசுவதாகவும், பாஜக 3ஆவது முறையாக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது என்று குற்றம் சாட்டிய அவர், ஸ்டாலின் முதல்வராக இருக்கிறாரா? என்பதே சந்தேகமாக இருப்பதாக தெரிவித்தார்.

News June 1, 2024

மோடியின் தியானத்துக்கு எதற்கு 14 கேமரா?

image

பிரதமர் மோடி தேர்தலுக்காக அரசியல் தியானம் செய்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். முந்தைய காலத்தில் மக்கள் நலனுக்காகவும், நாட்டு நலனுக்காகவும் மகான்கள் தியானம் செய்ததாக கூறிய அவர், இன்றைக்கு பிரதமர் மோடி 14 கேமராக்களை வைத்துக்கொண்டு தியானம் செய்து வருவதாக விமர்சித்தார். வாக்கு அரசியலுக்காக செய்யும் தியானம் மக்கள் முன் வெளிப்பட்டு விடும் என்றும் அவர் விமர்சித்தார்.

News June 1, 2024

தீவிர பயிற்சியில் இந்திய அணி

image

இந்தியா – வங்கதேசம் இடையேயான டி20 உலகக் கோப்பை பயிற்சி போட்டி, இன்றிரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக, இந்திய அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை நியூயார்க் வந்தடைந்த விராட் கோலி, போட்டியில் பங்கேற்பாரா? ஐபிஎல்லில் சரியாக விளையாடாத ஹர்திக் பாண்டியா கம்பேக் கொடுப்பாரா, சஞ்சு சாம்சன்/ரிஷப் பண்ட் இருவரில் யார் அணியில் இடம்பெறுவார்? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

News June 1, 2024

நேரில் வராமலே முதல்வருக்கு புகார் அனுப்புவது எப்படி?

image

தலைமைச் செயலகத்தில் மக்களிடம் மனுக்கள் பெற முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் உள்ளது. இங்கு நேரில் வந்து மக்கள் தங்களின் கோரிக்கை, புகார் மனு அளிக்கலாம். நேரில் வர முடியவில்லையெனில், அதற்கும் தனி வசதி உள்ளது. 1100 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொண்டோ, cmhelpline@tn.gov.in. என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமோ புகாரை முன்வைக்கலாம். இதற்கு உடனுக்குடன் பதில் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

News June 1, 2024

தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி

image

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் மூன்று நாள்களாக தியானத்தில் இருந்த பிரதமர் மோடி அதனை சற்றுமுன் நிறைவு செய்தார். காவி உடையணிந்து, ருட்திராட்ச மாலையுடன் தியானம் செய்துவந்த அவர், மூன்று நாள்களாக நீராகாரம் மட்டுமே எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, திருவள்ளுவர் சிலைக்கு மோடி மரியாதை செய்யவுள்ளார்.

News June 1, 2024

ரயிலில் ஜெனரல் பெட்டி முதல், கடைசியில் இருப்பது ஏன்?

image

ரயிலில் உடனடி டிக்கெட் மூலம் பயணிக்கும் பொதுவகுப்பு (ஜெனரல்) பெட்டிகள் முதலிலும், கடைசியிலும் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது ஏன் தெரியுமா? ஸ்லீப்பர், ஏசி பெட்டிகளை விட இவற்றில் கூட்டம் அதிகமிருக்கும். ரயிலின் நடுப்பகுதியில் இப்பெட்டிகளைச் சேர்த்தால், அதிக எடையினால் சமநிலை இருக்காது. ஏறும் போதும் இறங்கும் போதும் சிரமம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டே முதலிலும் கடைசியிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!