News June 1, 2024

இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

image

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல், இன்று 7ஆவது கட்டமாக 57 தொகுதிகளுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது.

News June 1, 2024

யாருடைய கடனையும் தள்ளுபடி செய்யவில்லை: FM

image

காங்., ஆட்சியில் விதிமுறைகளை பின்பற்றாமல், தகுதியற்ற தொழிலதிபர்களுக்குக் கடன்கள் வாரி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக ஆட்சியில் பல வங்கி மோசடிகள் கண்டறியப்பட்டு, திவால் சட்டம் மூலம் விசாரிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், யாருக்கும் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை, பலருக்கு ரைட் ஆஃப் மற்றும் தள்ளுபடிக்கு வித்தியாசம் தெரியவில்லை என்றார்.

News June 1, 2024

பாஜகவின் வெற்றியை கணித்த பிரசாந்த் கிஷோர்

image

2019 மக்களவைத் தேர்தலை விட, இம்முறை சற்று அதிக இடங்களில் பாஜக வெல்லும் என, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், வடக்கு மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது எனவும், அதே நேரம், கிழக்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகள் பாஜகவுக்கு உதவ காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News June 1, 2024

ஃபினிஷிங் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்

image

ஹர்திக் பாண்டியா உலகக் கோப்பையில் தன்னை நிரூபிப்பார் என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். பாண்டியாவின் பேட்டிங் திறன் குறைந்துவிட்டதாக எழுந்த விமர்சனம் கூட, அவர் முன்வரிசை வீரராக களமிறங்கியதால் நடந்ததாக கூறிய அவர், உலகக் கோப்பையில் அவர் பின்வரிசையில் இறங்கி அணிக்கு வலிமை சேர்க்க வேண்டும் என்றார். பாண்டியாவின் ஃபினிஷிங் ஆட்டம் இந்தியாவுக்கு வெற்றியை தரும் என்றும் கூறினார்.

News June 1, 2024

சென்னையில் நேற்று 101 மில்லியன் யூனிட் மின் நுகர்வு

image

இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் மின் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உச்சபட்ச மின் தேவையை பூர்த்தி செய்து வருவதாக தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று இதுவரை இல்லாத அளவில் உச்சபட்ச மின் தேவை 4,769 மெகாவாட்டாக இருந்துள்ளது. அதே போல, மின் நுகர்வு 101.76 மில்லியன் யூனிட்டாக இருந்ததாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

News June 1, 2024

சிறுவனைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்

image

சென்னை கொளத்தூரில் 12 வயது சிறுவனை நாய் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை இரு வளர்ப்பு நாய்கள் (ராட்வைர் & பாக்சர்) கடித்து குதறியதில் உடல் முழுவதும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த சிறுவனை மீட்ட பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சென்னையில் குழந்தைகளை நாய்கள் கடிப்பது தொடர் கதையாகி வருகிறது.

News June 1, 2024

புட்டாலம்மை என்றால் என்ன? (2/2)

image

புட்டாலம்மை பாதிப்பைக் குறைக்கும் சில சிகிச்சைமுறைகளை (அலோபதி & மரபு) எடுத்துக்கொள்ளலாம். பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி வைப்பது கூட தடுப்பு மருந்ததாக சொல்லப்படுகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் உணவுகளை அளிக்கலாம். மஞ்சள், வேப்பிலை அரைத்து பற்றுப்போடுவது, வெந்நீரால் உடலை சுத்தம் செய்வது போன்ற சுகாதார விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

News June 1, 2024

புட்டாலம்மை என்றால் என்ன? (1/2)

image

உமிழ்நீர் சுரப்பிகளை பாதிக்கும் மம்ப்ஸ் வைரஸால் ஏற்படும் அம்மை பாதிப்பை புட்டாலம்மை என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர். இந்த வைரஸ் தாடையடி, நாக்கு & செவியோரம் ஆகிய 3 இடங்களில் அமைந்துள்ள சுரப்பிகளை வீரியமாக தாக்கி, வலியை ஏற்படுத்தும். இந்த வைரஸ் தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ளும் என்பதால் பாதிப்பு அதிகமிருக்காது என்றாலும் ஆஸ்துமா & பிற சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிரமம் ஏற்படலாம்.

News June 1, 2024

பிஹார் அரசியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு

image

INDIA கூட்டணி 300க்கு மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்று ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். Exit Poll முடிவுகள் ஆளுவோருக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாகவே இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும் எனக் கூறிய அவர், இம்முறை தகிடுத்திட்டங்கள் எதுவும் பலனளிக்காது என்றார். அத்துடன், ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு பிஹார் அரசியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.

News June 1, 2024

அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியல்

image

டி20 உலகக்கோப்பை தொடரில் அதிவேக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் யுவராஜ் சிங் முதலிடத்தில் உள்ளார்.
1)யுவராஜ் சிங் – 12 பந்துகளில் vs இங்கிலாந்து
2)ஸ்டீபன் மைபர்க் – 17 பந்துகளில் vs அயர்லாந்து
3)ஸ்டொய்னிஸ் – 17 பந்துகளில் vs இலங்கை
4)மேக்ஸ்வெல் – 18 பந்துகளில் vs பாகிஸ்தான்
5)கே.எல் ராகுல் – 18 பந்துகளில் vs ஸ்காட்லாந்து
6)ஷோயப் மாலிக் – 18 பந்துகளில் vs ஸ்காட்லாந்து

error: Content is protected !!