India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

INDIA TODAY செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, இமாச்சலில் உள்ள 4 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே போல, உத்தராகண்டில் உள்ள 5 தொகுதிகளிலும் பாஜக வெல்லும் என INDIA TODAY கணித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளது. படகில் மொத்தமாக 25 பேர் பயணம் செய்த நிலையில், 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 5 பேர் காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படகில் பயணித்தவர்களில், பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவார்கள். உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சத்தீஷ்கரில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 10-11 இடங்களை பெறும் என சி வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆளும் காங்கிரஸ் கூட்டணி 0-1 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

TIMES NOW செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளில்,
பாஜக : 11 தொகுதிகள்
காங்கிரஸ் : 0
YSRCP : 14 தொகுதிகள் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 3-4 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று REPUBLIC வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 4 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் இருமுனை போட்டி (INDIA கூட்டணி, NDA கூட்டணி) நிலவுகிறது. INDIA கூட்டணி 1 இடத்தில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 26-29 இடங்களை பெறும் என சி வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆளும் காங்கிரஸ் கூட்டணி 0-3 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

TIMES NOW செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, பஞ்சாப்பில் உள்ள 13 தொகுதிகளில்,
பாஜக : 4 தொகுதிகள்
ஆம் ஆத்மி : 4 தொகுதிகள்
காங்கிரஸ் : 5 தொகுதிகள் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

INDIA TODAY செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, பஞ்சாப்பில் உள்ள 13 தொகுதிகளில்,
பாஜக : 2 – 4 தொகுதிகள்
ஆம் ஆத்மி : 0 – 2 தொகுதிகள்
காங்கிரஸ் : 7 – 9 தொகுதிகள்
SAD : 2 – 3 தொகுதிகள்
மற்றவை : 0 – 1 தொகுதி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் கே.சி.ஆரின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி அம்மாநிலத்தில் 3 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாக REPUBLIC வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 17 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் நான்கு முனை போட்டி (INDIA கூட்டணி, BRS, AIMIM, NDA கூட்டணி) நிலவுகிறது. INDIA கூட்டணி 5-8, NDA கூட்டணி 6-9, AIMIM -1 இடத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் பாஜக தலைமையிலான தேஜ கூட்டணி 5 முதல் 7 இடங்களில் வெல்லும் என்று நியூஸ் 18 செய்தி நிறுவனம் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி, அதிகபட்சம் 2 இடங்களை மட்டுமே வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NDA: 5 – 7
INDIA: 0 – 2
Sorry, no posts matched your criteria.