News March 21, 2025

முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்!

image

கர்நாடக அரசியல் தலைவர்களை ஹனி டிராப் மூலம் சிக்க வைக்க சதி நடப்பதாக, சட்டப்பேரவையில் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு நடுவே, அரசு ஒப்பந்தப்பணிகளில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, ஆளும் காங்கிரஸ் நிறைவேற்றியது. மசோதா தாள்களை கிழித்து எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர், இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

News March 21, 2025

இன்று மாலைக்குள்.. வங்கி வாடிக்கையாளர்களே அலர்ட்

image

வங்கி ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24, 25இல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், நாளை 4-ஆவது வார சனிக்கிழமை விடுமுறை, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என தொடர்ந்து 4 நாள்கள் வங்கி சேவை பாதிக்கப்படும். எனவே, வங்கி தொடர்பான பிரச்னைகளை இன்று மாலைக்குள் முடித்து விடுங்கள். மேலும், வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பணப் பரிவர்த்தனைகளை செய்து கொள்வதும் நல்லது.

News March 21, 2025

ரேஷன் கடைகளில் புகார் பதிவேடுகள்

image

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களின் வசதிக்காக புகார் பதிவேடுகள் வைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 37,299 ரேஷன் கடைகளில் இந்த பதிவேடுகள் வைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகள் நடந்தாலோ, உணவுப் பொருட்கள் எடை குறைவாக அளந்து விநியோகித்தாலோ மக்கள் தயங்காமல் புகார் தெரிவிக்கலாம். மேலும், 1967, 18004245901 என்ற கட்டணமில்லா எண்களிலும் புகார் அளிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

News March 21, 2025

கூட்டணி.. இபிஎஸ் புதுக்கணக்கு

image

அரசியல் ரீதியாக திமுக மட்டுமே அதிமுகவிற்கு எதிரி, மற்ற யாரும் (பாஜக) எதிரி இல்லை என இபிஎஸ் மீண்டும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். அதிமுக ஒருபோதும் தன்மானத்தை இழக்காது; மக்கள் விரோத திமுக அரசை அகற்ற வேண்டும் என்பதே எங்களின் இலக்கு எனக் கூறிய அவர், தேர்தல் வரும்போது கூட்டணியை முடிவு செய்வோம் என தெரிவித்தார். அவரது இந்த பேச்சு BJP- ADMK கூட்டணிக்கு அச்சாரமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

News March 21, 2025

அதிமுகவில் இருந்து டி.ஜெ., விலகலா? விளக்கம்

image

இபிஎஸ் வலது கையாக செயல்படும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அதிமுகவில் இருந்து விலகியுள்ளதாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் செய்தி பரவி வருகிறது. அதில், இபிஎஸ் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது; மீண்டும் அவர் பாஜக உடன் கூட்டணி வைத்தால், மீண்டும் இணைவேன் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இது முற்றிலும் தவறான செய்தி; இதை யாரும் நம்ப வேண்டாம் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

News March 21, 2025

IPL: வெற்றியாளர்கள் இவர்கள்தான்.. வீரர்கள் கணிப்பு

image

IPL 2025ல் எந்த அணி வெற்றி பெறும் என்று பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கணித்துள்ளனர். * சேவாக்- LSG, * கில்கிறிஸ்ட்- PBKS, * ரோஹன் கவாஸ்கர்- RCB, * பொல்லாக்- MI/SRH * திவாரி- SRH * சைமன் டவுல்- PBKS * எம்பாங்வா- GT * ஹர்ஷா போக்லே, மைக்கேல் வாகன் – MI. எந்த அணி வெற்றி பெறும் என்று நீங்க நினைக்கிறீங்க? கமெண்ட் பண்ணுங்க.

News March 21, 2025

கடன் வாங்கியதில் திமுக சாதனை: இபிஎஸ்

image

திமுக ஆட்சிக்கு வந்த 4 வருடங்களில் ₹4.53 லட்சம் கோடி பெற்றுள்ளது. ஆனால், அதிக கடன் வாங்கியதை மறைத்து சதவீத கணக்கு காட்டி தங்கம் தென்னரசு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். நிதியமைச்சர் பட்ஜெட் பதிலுரையில் வெறும் வார்த்தை ஜாலங்கள் மட்டுமே இருந்ததாக விமர்சித்த அவர், நிதி மேலாண்மை குழு அமைத்து கடன் வாங்கியது தான் திமுகவின் சாதனை என்று சாடினார்.

News March 21, 2025

சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி

image

சின்ன வெங்காயம் விலை கடும் சரிவைக் கண்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். திண்டுக்கல் மொத்த சந்தைக்கு வழக்கமாக வரும் 4,000 மூட்டைகளுக்கு பதிலாக இன்று 7,000 மூட்டைகள் வந்ததே இதற்கு காரணமாம். இதனால் விலை குறைந்து 1 கிலோ ₹15- ₹30க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் சின்ன வெங்காயம் கிலோ ₹70 வரை விற்பனையானதாகவும், இந்த விலை குறைவு ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

News March 21, 2025

FactCheck : கோயில் அறங்காவலராக இஸ்லாமியரா?

image

தஞ்சை பெருமாள் கோயில் அறங்காவலராக இஸ்லாமியரை அறநிலைத்துறை நியமித்ததாக எச்.ராஜா குற்றம் சாட்டியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியது. இந்நிலையில் பெருமாள் கோயில் அறங்காவலராக தேர்வான நர்க்கீஸ்கான் இஸ்லாமியர் இல்லை. மிகச் சிக்கலான பிரசவத்தில் பிறந்ததால், பிரசவம் பார்த்த மருத்துவர் நர்க்கீஸ்கான் பெயரை, அவருக்கு பெற்றோர் வைத்துள்ளனர் என்று TNFactCheck தெரிவித்துள்ளது.

News March 21, 2025

10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

image

தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் நாளை (மார்ச் 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், 2 – 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!