India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில் கோவை, குமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. அதேபோல், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் IMD குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.
பாஜக, அதிமுக கூட்டணி அமையலாம் என பரவலாக பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து இபிஎஸ்சிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், திமுகவை தவிர அதிமுகவுக்கு வேறு எந்தக் கட்சியும் எதிரி இல்லை. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். இதுவே அதிமுகவின் நிலைப்பாடு. தேர்தல் நெருங்குகையில் அதிமுக கூட்டணி அமைக்கும். திமுக வேண்டுமானால், அவர்களுடன் (பாஜக) கூட்டணி அமைக்கலாம் என்றார்.
90களில் தமிழ், தெலுங்கு படங்களில் நாயகியாக கொடிக்கட்டி பறந்தவர் வினிதா. இவர் பெரிய குடும்பம், கட்டபொம்மன், சின்ன ஜமீன், வியட்நாம் காலனி, மிஸ்டர் மெட்ராஸ் உள்பட 70 படங்களில் நடித்து தன் அழகாலும், திறமையாலும் ரசிகர்களை ஈர்த்தார். காலத்தின் கோலம், அவர் விபச்சார வழக்கில் சிக்கி கைதானார். பின் நிரபராதி என வெளியே வந்தாலும், 8 ஆண்டுகளுக்கு பின் ஒரே படத்துடன் அவரின் கரியர் முடிவுக்கு வந்தது சோகம் தான்.
ஐபிஎல் யுத்தம் நாளை தொடங்க இருக்கிறது. இந்நிலையில், குரூப் A, B-ல் உள்ள அணிகள் பற்றி பார்ப்போம். A பிரிவில் CSK, KKR, RR, RCB, PBKS அணிகள் இடம்பெற்றுள்ளன. B பிரிவில் MI, SRH, GT, DC, LSG அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இருக்கும் அணிகள், மற்றொரு பிரிவில் இருக்கும் 1 அணியுடன் மட்டும் 2 முறை மோதும். A பிரிவில் உள்ள CSK, B பிரிவில் உள்ள MI உடன் 2 முறை மோதவுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் இதுவரை 26% நிறைவடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் கூறியுள்ளார். ஜப்பான் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி வரும் 2026 அக்டோபரில் எய்ம்ஸ் மருத்துவமனை முழுவதும் கட்டி முடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து எவ்வித தொய்வும் இல்லாமல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொலை நடக்காத தினமே இல்லை எனும் அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். நெல்லையில் ஜாகிர் உசேன், ஈரோடு நசியனூரில் ஜான், காரைக்குடியில் மனோஜ் என தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொலைகள் நடப்பதாகவும், காவல்துறை நினைத்திருந்தால் அதைத் தடுத்திருக்கலாம் எனவும் விமர்சித்துள்ளார். போலீசாரின் அலட்சியமே கொலைகளுக்கு முக்கிய காரணம் என்றும் சாடியுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து 6 மாதங்களுக்கு 18 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஹனி ட்ராப் விவகாரத்தை எழுப்பி, சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் தொடர் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்டப்பேரவை அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டி பாஜகவைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
IPL 2025 போட்டிகள் நாளை (மார்ச் 22) தொடங்கி மே 25 வரை நடைபெறவுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கி, அதே மைதானத்தில் போட்டிகள் முடியும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 70 லீக் போட்டிகள், 2 குவாலிஃபையர் போட்டிகள், ஒரு எலிமினேட்டர் போட்டி, ஒரு இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் இரவு நேரம் எனில் 7.30 மணிக்கும், பகல் நேரமெனில் 3.30 மணிக்கும் தொடங்கும்.
IPL 2025 போட்டிகள், கொல்கத்தாவில் நாளை இரவு தொடங்குகின்றன. இதையடுத்து மே மாதம் 25ஆம் தேதி வரை போட்டி நடைபெறவுள்ளன. இப்போட்டிகளை நேரலையாக ஒளிபரப்பும் உரிமத்தை ஸ்டார் குழுமம் பெற்றுள்ளது. இதனால் ஸ்டார் குழும டிவி சேனல்களில் பல்வேறு மொழிகளிலும் போட்டிகளை நேரலையாகக் கண்டு களிக்கலாம். போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். செயலி எனில் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையாக காணலாம்.
அமெரிக்காவின் உயரமான மனிதரும், முன்னாள் போலீசுமான ஜார்ஜ் பெல் (67) காலமானார். 7 அடி 8 அங்கும் உயரம் கொண்ட அவர், அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி படம், சில சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் வர்ஜீனியா காவல்துறையில் துணை செரீப்பாக பணிபுரிந்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு வரை உலகின் உயரமான மனிதர் என்ற கின்னஸ் சாதனையையும் அவர் புரிந்திருந்தார். இவரது மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.