India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுதா வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, பாமக வேட்பாளர் ஸ்டாலின், அதிமுக வேட்பாளர் பாபு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.

தேவகவுடாவின் பேரனும், ஜேடிஎஸ் கட்சி எம்பியுமான பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வாக்குப்பதிவிற்கு சில நாள்கள் முன்பு வெளியானது. இதனால், தேர்தல் களத்தில் பரபரப்பு பற்றிக்கொள்ள பாஜக – ஜேடிஎஸ் கட்சிகளுக்கு எதிரான அலை வீசத் தொடங்கியது. அதன் தாக்கம், 2019 மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த காங்., தற்போது 10 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

நாம் தமிழரை விட பாஜக அதிக வாக்குகள் வாங்கினால், கட்சியை கலைப்பதாக சீமான் சவால் விடுத்திருந்தார். அதற்கு அவர், பாஜக வாங்கும் வாக்கில் பாதியளவு கூட நாதகவால் வாங்க முடியாது என பதிலடி கொடுத்து இருந்தார். தற்போது முன்னிலை நிலவரமும், அவரின் கூற்றையே உறுதி செய்துள்ளது. பாஜக 11.61%, நாதக 4.24% வாக்கு பெற்றுள்ளன. இதனையடுத்து, சீமான் கட்சியை கலைப்பாரா என பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே முன்னிலை வகித்த அவர் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளார். அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட SDPI கட்சி 2ஆவது இடத்தையும், பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் திலகபாமா 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் கட்சி 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிராபகரன், விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, அவரை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்த பிரேமலதா, தனது மகன் வெற்றி பெற்றால் விஜயகாந்தின் ஆன்மா சாந்தி அடையும் என்றார். ஆனால், தற்போது அவரது மகன் பின்னடைவை சந்தித்துள்ளார். காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலையில் உள்ளார். இதனால் தேமுதிகவினர் வேதனை அடைந்துள்ளனர்.

‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டார் அண்ணாமலை. பாஜகவை வளர்க்கும் நோக்கில் நடைபயணம் மேற்கொண்ட போதிலும், அதனை வாக்குகளாக அவரால் அறுவடை செய்ய இயலவில்லை என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெல்ல முடியாத நிலை உள்ளது. திமுக மீதான அவரது விமர்சனங்களும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே தெரிகிறது.

ஆந்திராவில் பாஜக, தெலுங்கு தேசம், பவன் கல்யாண் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், 25 தொகுதிகளில் தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும், பாஜக 3, பவன் கல்யாண் கட்சி 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. மீண்டும் ஆட்சியமைக்க பாஜகவுக்கு தெலுங்கு தேசத்தின் ஆதரவு கட்டாயம் தேவை. இல்லையெனில் நெருக்கடி ஏற்படும். இதனால் மீண்டும் கிங் மேக்கராக சந்திரபாபு நாயுடு உருவெடுத்துள்ளார்.

நாகை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரமேஷ், அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா ஆகியோர் தோல்வியை தழுவினார்.

கரூர், குமரி, கிருஷ்ணகிரி, கோவை, சிதம்பரம். மத்திய சென்னை, சென்னை தெற்கு, சென்னை வடக்கு, தஞ்சை, விருதுநகர், நெல்லை, திருப்பூர், தி.மலை, நாமக்கல், புதுச்சேரி, பொள்ளாச்சி, மதுரை, திருவள்ளூர், நாகை ஆகிய தொகுதிகளில் பாஜகவும், நாதகவும் நேருக்கு நேரு போட்டியிட்டன. இதில் பாஜக 11.61%, நாதக 4.24% வாக்குகளும் பெற்றுள்ளன. இதன் மூலம் வாக்கு வங்கியில் நாதகவை பாஜக பின்னுக்கு தள்ளியுள்ளது.

தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு அதிகமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற ப.சிதம்பரத்தின் சாதனையை டி.ஆர்.பாலு சமன் செய்ய உள்ளார். டி.ஆர் பாலு இதுவரை 6 முறை மக்களவை எம்.பியாக இருந்துள்ள நிலையில், தற்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 7ஆவது முறையாக வெற்றியை எதிர்நோக்கியுள்ளார். முன்னதாக, பா.சிதம்பரம் சிவகங்கை தொகுதியிலிருந்து 1984, 1989, 1991, 1996, 1998, 2004, 2009இல் மக்களவைக்கு எம்.பியாக தேர்வானார்.
Sorry, no posts matched your criteria.