India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2024 மக்களவைத் தேர்தலில் தேசியக் கட்சிகளுக்கு அடுத்து மாநிலக் கட்சிகள் அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. இதுவரை வெளியான முன்னணி நிலவரப்படி, உ.பி.யில் மொத்தம் உள்ள 80 இடங்களில் சமாஜ்வாதி 34 தொகுதிகளிலும் ஆந்திராவில் உள்ள 25 இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 16 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

பிஹாரில் ஜேடியு 13 தொகுதிகளிலும், ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி 5 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 10 தொகுதிகளிலும், ஏக்நாத் சிண்டேயின் சிவசேனா 7 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. தமிழ்நாட்டில் திமுக 22 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில் சிபுசோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதுபோல் மக்களவைத் தேர்தலில் பெரும்பாலான மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகளே அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. இதனால் பாஜகவோ, காங்கிரசோ மாநில கட்சிகளின் தயவின்றி மத்தியில் ஆட்சியமைக்க முடியாத சூழல் மீண்டும் உருவாகியுள்ளது.

புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் ஆகியோர் தோல்வியை தழுவினர்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோர் தோல்வியை தழுவினர்.

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் NDA கூட்டணி 295 இடங்களிலும், INDIA கூட்டணி 231 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பொய்யாக்கும் வகையில், பாஜக கூட்டணிக்கு INDIA கூட்டணி கடும் போட்டியை அளித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, NDA கூட்டணிக்கு 46%, INDIA கூட்டணிக்கு 42% வெற்றி வாய்ப்புள்ளதாக NDTV கணித்துள்ளது.

ஆந்திர சட்டசபை தேர்தலில் YSR காங்கிரஸ் கட்சியின் முக்கிய வேட்பாளர்களில் ஒருவரான அமைச்சர் ரோஜா தோல்வியடைந்துள்ளார். நகரி தொகுதியில் போட்டியிட்ட அவர் தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் காலி பானு பிரகாஷிடம் தோல்வியைத் தழுவி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். சொந்தக் கட்சிக்காரர்களே தனது தொகுதியில் சரியாக பணியாற்றவில்லை என்பது ரோஜாவின் குற்றச்சாட்டாக உள்ளது.

பாஜகவின் ராமர் கோயில் அரசியல் எடுபடவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியில், பாஜகவின் லல்லு சிங்கைவிட, சமாஜ்வாதியின் அவதேஷ் 47,935 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், வட இந்தியாவில்மேலும், வட இந்தியாவில் மோடி அலை வீசவில்லை, மாற்றத்திற்கான அலை வீசுவதாக தெரிவித்துள்ளார்.

நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை எதிர்த்து போட்டியிட்ட, பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான எல்.முருகன் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த ஆ.ராசா, 4.50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று 2ஆவது முறையாக அந்தத் தொகுதியில் தனது வெற்றியை பதிவு செய்தார். 3ஆவது, 4ஆவது இடங்களை முறையே அதிமுக, நாதக கைப்பற்றின.

ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியிடம், பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட்ட ஓபிஎஸ் படுதோல்வியடைந்தார். காலையில் இருந்தே பின்னடைவை சந்தித்த ஓபிஎஸ் தோல்வியடைந்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக அதிமுக 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
Sorry, no posts matched your criteria.