India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஒடிஷாவில் 25 ஆண்டுகால நவீன் பட்நாயக் ஆட்சிக்கு முடிவுரை எழுதியுள்ள மக்கள், பாஜகவுக்கு முதல் முறையாக வாய்ப்பளித்துள்ளனர். மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பாஜக 81 தொகுதிகளில் வெற்றி முகத்துடன் உள்ளது. கடந்த முறை 112 தொகுதிகளில் வென்றிருந்த ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் இந்த தேர்தலில் 48 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. காங்., 14 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், சென்னையில் திடீரென கனமழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. இதனால், அலுவலகம் சென்றோர் வீடு திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். திடீர் கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை, கிண்டி, நந்தனம், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

தேனி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளரான டிடிவி தினரகரனை வீழ்த்தி திமுகவின் தங்கத் தமிழ்செல்வன் அபார வெற்றிபெற்றுள்ளார். 2ஆவது இடத்தை அதிமுக பிடித்துள்ள நிலையில், டிடிவி தினகரன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதனையடுத்து, தேனியில் திமுக தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 16 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடுவின் ஆதரவு தேவைப்படுவதால், அவரின் நீண்ட நாள் கோரிக்கையான ஆந்திராவிற்கான சிறப்பு அந்தஸ்தை தருவதாக, தங்களது தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2014 தேர்தலில் மோடிக்காக பிரசாந்த் கிஷோர் மற்றும் I-Pac குழுவினர் பணியாற்றினர். அந்தத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சியமைத்தது. இதையடுத்து பல மாநிலங்களில் I-Pac குழுவினர் தேர்தல் பணி செய்தனர். இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 300க்கும் மேல் வெற்றி பெறும் என பிரசாந்த் கிஷோர் கணித்திருந்தார். ஆனால் அந்த கணிப்பு பொய்யாகும் வகையில், பாஜக அணி 290-295 தொகுதிகளிலேயே முன்னிலையில் உள்ளது.

INDIA கூட்டணி இந்த அளவிலான முடிவுகளை பெற சமூக வலைதள ஈர்ப்பாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், குறிப்பாக யூடியூபர் துருவ் ரதே, பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகித்தார். அதேபோல், ராண்டிங் கோலா, நேஹா சிங், அர்பித் ஷர்மா போன்றவர்களும் பொதுப் பிரச்சனைகள், நிர்வாகத் தோல்விகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் முன்னணியில் உள்ளனர்.

திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வென்றுள்ளார். இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், சசிகாந்த் செந்தில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை வீழ்த்தினார்.

காஷ்மீரின் பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் 4,33,213 வாக்குகளைப் பெற்ற சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷீத் ஷேக் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 2,38,087 வாக்குகள் பெற்ற தேசிய மாநாட்டு கட்சியின் ஒமர் அப்துல்லாவை 1,95,126 வாக்குகள் வித்தியாசத்தில் அப்துல் ரஷீத் ஷேக் வீழ்த்தியுள்ளார். இதில் சுவாரசியம் என்னவென்றால், 5 ஆண்டுகளாக சிறையில் உள்ள அப்துல் ரஷீத் ஷேக் அங்கிருந்தவாறே வெற்றி பெற்றுள்ளார்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி மிகக்குறைவான தொகுதிகளிலேயே முன்னிலை வகிக்கிறது. ஜேடியு, தெலுங்கு தேசம் கட்சிகள் ஆதரவில்லையெனில் பாஜகவால் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், அக்கட்சிகளின் ஆதரவை பெற்று, ஆட்சியமைக்கும் முனைப்பில், INDIA கூட்டணி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் என்டிஏ கூட்டணி 350+ தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவித்திருந்தன. அதிலும், ஒரு சில ஊடகங்கள் 400+ தொகுதிகளில் வெற்றி பெறும் என கணித்திருந்தன. ஆனால், தற்போதைய நிலவரப்படி அக்கூட்டணி 295+ தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதனால், பெரும்பான்மையை எளிதாக பெறுவோம் என்ற கற்பனையில் இருந்த பாஜகவுக்கு இந்த முடிவு இடியாய் அமைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.