India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

18ஆவது மக்களவைத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், எல்.முருகன், ஸ்மிருதி இரானி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் 15 பேர் படுதோல்வி அடைந்துள்ளனர். அதன் விவரம் இதோ:- *அஜய் மிஸ்ரா *அர்ஜூன் முண்டா *கைலாஷ் செளத்ரி *ராஜீவ் சந்திரசேகர் *மகேந்திரநாத் பாண்டே *சாத்வி நிரஞ்சன் ஜோதி *ராவ் சாஹேப் தன்வே *ஆர்.கே.சிங் *சஞ்சீவ் பல்யான் *வி.முரளிதரன் *நிஷித் பிரமனிக் *சுபாஷ் சர்கார்.

காபந்து பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக ஆட்சியமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை நிதிஷ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வழங்கியுள்ளனர். மாலை 4 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் சுமார் 1.30 மணி நேரம் நீடித்த நிலையில், தற்போது நிறைவுபெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைக்கிறது.

1986ல் வெளிவந்த ‘மிஸ்டர் பாரத்’ படத்திற்கு பிறகு, ‘கூலி’ படத்தில் ரஜினியுடன் சத்யராஜ் இணையவுள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக திரை வட்டாரத்தில் பேசப்பட்ட நிலையில், இத்தகவல் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்த கேள்விக்கு பதிலளித்த சத்யராஜ், இருவருக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை எனவும், வலுவான கதாபாத்திரம் அமையாததால், இத்தனை ஆண்டுகளாக இணைந்து நடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ராணுவ வீரர்களுக்குப் பயிற்சியளிக்க உக்ரைனுக்கு வரும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவர்களைத் தாக்குவதற்கான சட்டபூர்வ உரிமை தங்களுக்கு உள்ளதாக தெரிவித்துள்ள ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர், நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் யாருக்கும் விலக்கு அளிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியை சீமான் ஆரம்பித்தது முதல் தனித்தே போட்டியிடுகிறது. ஆனால் இதுவரை ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை. இது சீமானின் உணர்ச்சிகரமான பேச்சை கேட்க திரளும் கூட்டம், அவரின் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்பதையேக் காட்டுகிறது. விஜயலட்சுமியால் ஏற்பட்ட அவப்பெயரும் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இவற்றை சரி செய்து, கட்சியை வெற்றிப்பாதைக்கு எப்படி அழைத்து போகப் போகிறார் சீமான்?

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சி அமைக்க குடியரசு தலைவரிடம் இன்றே உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், நிதிஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு கேபினெட் பதவி, மாநில சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்ததாக கூறப்படுகிறது. ஆட்சி அமைத்தால் போதும் என்ற மனநிலையில் உள்ள பாஜக, அதை ஏற்று இன்றே ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளது.

தமிழக மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்பதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் முடிவு, பாஜகவுக்கு ஒரு படிப்பினை என்ற அவர், இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என, மக்கள் தங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கோவையில் வரலாற்றில் இல்லாத வகையில் பாஜக வாக்குகள் பெற்றுள்ளதாகவும், அதிமுக டெபாசிட் இழக்கும் நிலைக்கு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் இந்தியா, அயர்லாந்து அணிகள் இன்று இரவு 8 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன. 9ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு இது முன்னோட்டமாக கருதப்படுகிறது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால், தனது ஆட்டத்தை சரியாக வெளிப்படுத்தவில்லை என்பதால், இன்றைய போட்டியில் அவருக்கு பதிலாக ரோஹித்துடன் கோலி தொடக்க வீரராக களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தியின் சகோதரியாக இருப்பதை நினைத்து பெருமை கொள்வதாக, பிரியங்கா காந்தி கூறியுள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், யார் என்ன சொன்னாலும், ராகுல் ஒருபோதும் பின்வாங்கவில்லை என்றும், அவர்கள் பொய் பிரசாரம் செய்தாலும் சத்தியத்திற்காக போராடியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அன்பு, உண்மை மற்றும் கருணையுடன் ராகுல் காந்தி தேர்தலில் போராடியதாகவும் அவர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஓராண்டுக்கும் மேல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ரேஷன் அட்டை வழங்கும் பணி, அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2.4 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்து காத்திருந்தனர். தற்போது, தேர்தல் நடத்தை விதி நாளை முதல் விலக்கி கொள்ளப்படுவதால், கார்டு தொலைந்தவர்கள், புதிய கார்டு மற்றும் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.