India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியல்:
▶சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்) – 5,72,155 ▶டி.ஆர்.பாலு (திமுக) – 4,87,029 ▶சச்சிதானந்தம் (கம்யூனிஸ்ட்) – 4,43,821 ▶கனிமொழி (திமுக) – 3,92,738 ▶அருண் நேரு (திமுக) – 3,89,107 ▶கலாநிதி வீராசாமி (திமுக) – 3,39,222 ▶முரசொலி (திமுக) – 3,19,583 ▶துரை வைகோ (மதிமுக) – 3,13,094 ▶ஜெகதரட்சகன் (திமுக) – 3,06,559 ▶சுதா (காங்கிரஸ்) – 2,71,183

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அண்ணாதுரை, 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 2ஆவது இடத்தையும், பாஜக சார்பில் போட்டியிட்ட அஸ்வத்தாமன் 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் ரமேஷ் பாபு 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, திமுக சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் புதிய சாதனை படைத்துள்ளார். திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், 7,96,956 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பாலகணபதியை விட 5,72,155 வாக்குகள் அதிகம் பெற்று மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளார்.

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை
▶குறள் எண்: 140
▶குறள்: உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
▶பொருள்: உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள், பல நூல்களைப் படித்திருந்தும் கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.

கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், 1.85 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் சிவகொழுந்து 2ஆவது இடத்தையும், பாமக சார்பில் போட்டியிட்ட இயக்குநர் தங்கர்பச்சான் 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் மணிவாசகம் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன், 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் 2ஆவது இடத்தையும், பாஜக சார்பில் போட்டியிட்ட ஏ.பி.முருகானந்தம் 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் 2ஆவது இடத்தையும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட பார்த்தசாரதி 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகேயன் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (அதிகாலை 4 மணி வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கன்னியாகுமரி, வேலூர், விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 2ஆவது இடத்தையும், பாஜக சார்பில் போட்டியிட்ட பால் கனகராஜ் 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் அமுதினி 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இன்று (ஜூன் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
Sorry, no posts matched your criteria.