India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக MPக்களை முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திக்கிறார். இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில், புதிய திமுக MP-க்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

▶ஜூன் – 8 ▶வைகாசி – 26 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, 04.30 PM – 05.30 PM வரை ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 PM, 09:30 PM – 10:30 PM வரை ▶ராகு காலம்: 09:00 AM – 10:30 PM வரை ▶எமகண்டம்: 01:30 PM – 03:00 PM வரை ▶குளிகை: 06:00 AM – 07:30 AM வரை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶ திதி: துவதியை ▶நட்சத்திரம்: இரவு 9.21 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்

மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் தோல்வியை தழுவினார். இதற்கு, பாஜக கூட்டணியில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் N.R.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆதரவு இல்லாததே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அமைச்சரவையில் இருந்து வெளியேறவும், ரங்கசாமி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கலாமா என்பது பற்றியும் பாஜக தலைமைஆ

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘காலம் உள்ளவரை கலைஞர்’ என்ற பெயரில் நவீன கண்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை பார்வையிட்ட நடிகர்கள் விஜயகுமார், நாசர், சத்யராஜ் ஆகியோர் அங்கு உருவாக்கப்பட்டிருக்கும் கருணாநிதி சிலை முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஜூன் 1ஆம் தேதி இந்தக் கண்காட்சியகம் திறக்கப்பட்டது.

மோடி பதவியேற்பு விழாவுக்கு ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட்டான சுரேகா யாதவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் சதாரா பகுதியைச் சேர்ந்த சுரேகா யாதவ், கடந்த 1988ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் ரெயில் ஓட்டுநராக பணியை தொடங்கினார். இவர் மராட்டிய மாநிலம் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் மற்றும் சோலாப்பூர் இடையிலான வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயிலை தற்போது இயக்கி வருகிறார்.

பரபரப்பான இன்றைய வாழ்க்கைச் சூழலில், பலர் தங்களது காலை உணவை உட்கொள்ளாமல் தியாகம் செய்து வருகின்றனர். காலை உணவை கட்டாயம் தவிர்க்கக் கூடாது. இது பற்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அறிக்கைபடி, காலை உணவை உண்பது மூளையின் ஆற்றலை அதிகரிக்க உதவும். மேலும், காலை உணவு மூளைக்கு குளுக்கோஸ் வழங்குவது போன்றது. நமது மூளை சரியாக இயங்க காலை உணவு அவசியமானது. இதனால் நினைவாற்றல் மற்றும் செறிவுத் தன்மை அதிகரிக்கும்.

விருதுநகர் தொகுதியில் வென்ற காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு, பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என குடியரசுத் தலைவரிடம் தேமுதிக முறையிட்டுள்ளது. விருதுநகரில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன், விஜயபிரபாகரன் 4000+ வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். இந்நிலையில், வாக்கு எண்ணிகையின்போது முறைகேடு நடந்ததாக பிரேமலதா குற்றம்சாட்டியிருந்த நிலையில், தற்போது ஜனாதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உயர் பதவியில் இருந்த 2 தமிழர்கள், ஒரே நேரத்தில் (2019) அரசியலில் குதித்தனர். இதில், சசிகாந்த் செந்தில் Ex IAS காங்கிரஸிலும், அண்ணாமலை Ex IPS பாஜகவிலும் இணைந்தனர். இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் திருவள்ளூரில் போட்டியிட்ட சசிகாந்த் வெற்றி பெற்றார். கோவை தொகுதியில் அண்ணாமலை, 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதன் மூலம் சத்தமில்லாமல் சசிகாந்த் சாதித்ததாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

சண்டிகர் ஏர்போர்ட்டில் நடிகை கங்கனாவை, பெண் காவலர் கன்னத்தில் அறைந்தது நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் இருப்பவர்கள் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக பிறரை தாக்குவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேபோல, காவலர்கள் தங்கள் விருப்பத்திற்கு மாறாகப் பேசுபவர்களை தாக்கினால் நாட்டின் பாதுகாப்பு என்னவாகும் என்ற வாதத்தையும் சிலர் முன்வைத்து வருகின்றனர்.

*1783 – இஸ்லாந்தில் உள்ள லாக்கி எரிமலை வெடித்த 8 மாதங்களில் வறட்சி, வறுமை ஏற்பட்டதில் 9,000 பேர் வரை உயிரிழந்தனர்.
*1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி உள்ளிட்ட நகரங்கள் மீது குண்டுவீசி தாக்கின.
*1992 – முதலாவது உலகப் பெருங்கடல்கள் நாள் கொண்டாடப்பட்டது.
*2004 – 1882 ஆம் ஆண்டிற்குப் பிறகு வெள்ளிக் கோள் சூரியனைக் கடந்தது அவதானிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.