News June 8, 2024

மீன் குழம்புடன் விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்

image

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார். போயிங் ஸ்டார்லைனர் மூலம் விண்ணுக்கு புறப்பட்ட அவர், 27 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு பத்திரமாக சென்றடைந்தார். இதுகுறித்து பேசிய அவர், விண்வெளி நிலையத்தை தன் வீடு போல் நினைத்துக் கொள்வதற்காக, ஒரு விநாயகர் சிலை மற்றும் சூடான மீன் குழம்பை தன்னுடன் எடுத்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

News June 8, 2024

பாண்டியன் மீதான விமர்சனம் துரதிஷ்டவசமானது: நவீன்

image

தேர்தல் தோல்விக்கு வி.கே.பாண்டியன் காரணமல்ல என, ஒடிஷா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உறுதிபட தெரிவித்துள்ளார். தேர்தல் தோல்வி குறித்து முதல்முறையாக பேட்டி அளித்த அவர், வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லையென்றும், அவர் மீதான விமர்சனம் துரதிஷ்டவசமானது என்றும் கூறினார். கொரோனா பெருந்தொற்று, புயல் போன்ற நெருக்கடியான காலங்களில் பாண்டியன் ஒரு அதிகாரியாக சிறப்பாக பணியாற்றியதாகவும் பாராட்டினார்.

News June 8, 2024

முடிவுக்கு வரும் ‘எதிர்நீச்சல்’ தொடர்

image

சின்னத்திரை தொடர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று ‘எதிர்நீச்சல்’. இத்தொடரில் நடித்துவந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பால் காலமானதால், இத்தொடரின் டிஆர்பி சரியத் தொடங்கியது. அதன்பின் மாரிமுத்துவுக்குப் பதிலாக வேல ராமமூர்த்தி நடித்துவந்த நிலையில், தற்போது இத்தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இத்தொடரின் க்ளைமேக்ஸ் காட்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்

News June 8, 2024

தீபாவளியை குறிவைக்கும் முக்கிய திரைப்படங்கள்

image

விடாமுயற்சி, கங்குவா, விடுதலை 2 ஆகிய 3 படங்களையும், வரும் அக்டோபர் 29ஆம் தேதி தீபாவளி அன்று வெளியிட படக்குழுக்கள் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை 2 மற்றும் கங்குவா படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல், விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

News June 8, 2024

நீட் தேர்வுக்கு எதிராக வலுக்கும் குரல்கள்

image

நீட் தேர்வில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய கோரி மகாராஷ்டிரா அரசு வலியுறுத்தியுள்ளது. நீட் தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டுமென, உச்ச நீதிமன்றத்துக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் ஸ்டாலின், இபிஎஸ், ராமதாஸ், சீமான் உள்ளிட்ட தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

News June 8, 2024

ரோஹித் ஷர்மாவுக்கு மீண்டும் காயம்

image

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால், ஐசிசி நிர்வாகத்திடம் ஆடுகளம் குறித்து பிசிசிஐ புகார் அளித்துள்ளது. நியூயார்க் மைதானம் சரியான முறையில் அமைக்கப்படாததால், பந்தின் வேகத்தை கணிக்க முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர். இதனால், முதல் லீக் போட்டியில், ரோஹித் ஷர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, இன்று பயிற்சியின் போது விராட் கோலியும் அதே சிரமத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.

News June 8, 2024

இன்று முதல் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்துள்ளதால் இன்றுமுதல் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் https://www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், இ-சேவை மையம் மூலமாகவும் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் தங்கள் நிலையை தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று முதல் கார்டில் திருத்தங்களும் மேற்கொள்ளலாம்.

News June 8, 2024

பாண்டிச்சேரியில் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு நிறைவு

image

பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்த ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள விமான நிலையத்தில், நடிகர்கள் கமல், சிம்பு, அசோக் செல்வன் கொண்ட சண்டைக் காட்சி படமாக்கப்பட்டதாகவும், இதனால் படத்தின் 60% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அடுத்தகட்ட படப்பிடிப்பை கேரளாவிலும், வெளிநாடுகளிலும் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

News June 8, 2024

3 மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ்?.. விளக்கம்!

image

நாடு முழுவதும் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த மக்களுக்கு, பாஜக சார்பில் 3 மாதங்களுக்கு ‘இலவச ரீசார்ஜ்’ வழங்கப்படுவதாக சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அந்த செய்தியுடன் வரும் லிங்கை க்ளிக் செய்தால், மொபைல் எண்ணை கேட்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இது பொய்யான தகவல் என தெளிவுபடுத்தியுள்ள போலீசார், அந்த லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

News June 8, 2024

இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா ஒன்றிணைவது சாத்தியமா?

image

இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா ஆகியோரிடம் பேசி அதிமுகவை ஒருங்கிணைக்க இருப்பதாக, அதிமுக ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. ஆனால், இதற்கான வாய்ப்பு குறைவுதான் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதிமுகவில் இணைய ஓபிஎஸ், சசிகலா தயாராக இருப்பதாக கூறும் அரசியல் வட்டாரங்கள், அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர் இபிஎஸ் தான் எனவும், அவர்களை கட்சியில் இணைக்க இபிஎஸ் சம்மதிக்க மாட்டார் என்றும் ஆருடம் கூறுகின்றனர்.

error: Content is protected !!