News March 22, 2025

ஒன்றாக போராடுவோம்: ஸ்டாலினிடம் ரேவந்த் உறுதி

image

மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதில் சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனையே, தொகுதி மறுவரையறை என்று, தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சி வேறுபாடுகளை களைந்து ஒன்றாக போராடுவோம் என அழைப்பு விடுத்த அவர், BJP நம்மை பேசவே அனுமதிப்பதில்லை. அவர்கள் நினைப்பதையே முடிவாக எடுக்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படும் என்றார்.

News March 22, 2025

பன்முகத்தன்மையே நாட்டின் பலம்: பினராயி விஜயன்

image

மாநிலங்களுடன் மத்திய அரசு பேச வேண்டும் என பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என தெரிவித்தார். பன்முகத்தன்மையே நாட்டின் பலம். எனவே, தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு அவசியம் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

News March 22, 2025

புதிய ரேஷன் கார்டுகளுக்கு ₹1,000 மகளிர் உரிமை தொகை!

image

புதிதாக ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்த 57,327 பேருக்கு ‘Smart Card’ அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், தகுதி வாய்ந்த நபர்கள் ₹1,000 மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை விரைவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக, அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் கூறியிருந்த நிலையில், விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 22, 2025

சுந்தர்.சி – நயன்தாரா மோதல்?

image

பொள்ளாச்சியில் நேற்று நடந்த மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பின் போது, உதவி இயக்குநர் ஒருவரை நயன்தாரா திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் டென்ஷனான சுந்தர்.சி, ஷூட்டிங்கை ரத்து செய்ததோடு, நயன்தாராவுக்கு பதிலாக தமன்னாவை நடிக்க வைக்க முடிவு எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்ததால், பிரச்னை முடிவுக்கு வந்ததாம்.

News March 22, 2025

வல்லுநர் குழு அமைக்க முன்மொழிந்த ஸ்டாலின்

image

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை வரையறுக்க, வல்லுநர் குழு அமைக்க வேண்டும் என, ஆலோசனைக் கூட்டத்தில் CM ஸ்டாலின் முன்மொழிந்தார். மேலும் இன்று கூட்டப்பட்டுள்ள குழுவுக்கு நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு எனப் பெயரிடவும் பரிந்துரைத்துள்ளார்.

News March 22, 2025

புதிய IPL RULES

image

மாபெரும் கிரிக்கெட் திருவிழாவான IPL இன்று தொடங்கும் நிலையில், அதன் RULES குறித்து பார்ப்போம். ➤IPL தொடரில் இம்முறை, பந்தில் எச்சில் பயன்படுத்த அனுமதி ➤கூடுதலாக ஒரு மாற்று வீரரை களமிறக்கும் இம்பேக்ட் விதி தொடரும் ➤11 ஓவரில் வேறு பந்தை மாற்றிக்கொள்ளலாம், புதிய பந்துக்கு அனுமதியில்லை ➤அணிகள் தாமதமாக பந்து வீசினால் கேப்டன்களுக்கு தடை விதிக்கப்படாது; தகுதி இழப்பு புள்ளி, அபராதம் மட்டும் விதிக்கப்படும்.

News March 22, 2025

ஒன்றுபட்ட போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்த ஸ்டாலின்

image

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூட்டத்தில் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அறைகூவல் விடுத்துள்ளார். தமிழகத்தில் 8 – 12 தொகுதிகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் தொகுதிகள் குறைந்தால் நமது பண்பாடு, அடையாளம், முன்னேற்றம், சமூக நீதி ஆபத்தை சந்திக்கும். மாணவர்கள், பெண்களின் வளர்ச்சி தடைபடும். இந்திய ஜனநாயகத்தையும், கூட்டாட்சியையும் காப்பதற்கான முன்னெடுப்புதான் இது என்றார்.

News March 22, 2025

தொகுதிகள் குறைந்தால் அதிகாரம் பறிபோகும்

image

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; நியாயமான மறுசீரமைப்பையே நாங்கள் கோருகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொகுதிகள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல; நமது அதிகாரம். மக்களின் பிரதிநிதிகள் குறைந்தால் நமது எண்ணங்களை சொல்வதற்கான வலிமையும் குறையும். சொந்த நாட்டிலேயே அதிகாரம் அற்றவர்களாக இந்த மறுவரையறை மாற்றிவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

News March 22, 2025

மாநிலங்களுக்கு தண்டனையா? உதயநிதி கேள்வி

image

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பட்டியலிட்டு Dy CM உதயநிதி பவர் பாயிண்ட் மூலம் விளக்கினார். மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு தண்டனையா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மத்திய அரசின் முடிவால் அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.

News March 22, 2025

16 ஆண்டுகளாக கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த அவலம்!

image

உ.பி.யில் கல்லூரி மாணவிகளை மிரட்டி பேராசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புவியியல் பேராசிரியரான ரவ்னீத், அதிக மதிப்பெண் போடுவதாக ஆசை காட்டியும், பெயில் ஆக்கிவிடுவேன் என மிரட்டியும் 16 ஆண்டுகளாக இந்த கொடூரத்தை செய்து வந்துள்ளார். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், மாணவிகளுடன் தனிமையிலிருந்த பல வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். So Sad!

error: Content is protected !!