News June 11, 2024

“காஷ்மீரில் 50 பேரை தீவிரவாதிகள் கொன்றிருப்பர்”

image

காஷ்மீரின் ரிசி பகுதியில் 3 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 10 பேர் பலியானதுடன், 41 பேர் காயமடைந்தனர். இதில் உயிர் தப்பிய பயணி அளித்த பேட்டியில், பள்ளத்தில் பேருந்து கவிழவில்லை எனில் 50 பேரையும் தீவிரவாதிகள் சுட்டு கொன்றிருப்பர் என்றும், அதேபோல் பேருந்து பாறை, மர இடுக்கில் சிக்கிக் கொண்டதால் 41 பேரும் காயத்துடன் தப்பியதாகவும் கூறியுள்ளார்.

News June 11, 2024

தமிழகத்தில் குழந்தை விற்பனை

image

கோவையில் குழந்தை விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை ஒன்றும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் பிஹாரில் வறுமையில் இருப்போரிடம் குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதாகக் கூறி வாங்கிவந்து, தமிழகத்தில் ₹5 லட்சம் வரை விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

News June 11, 2024

சவுக்கு சங்கர் வழக்கில் பரபரப்பு

image

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டர் சட்டத்தை நீதிபதி GR.சுவாமிநாதன் அவசர அவசரமாக ரத்து செய்தது சரியானது அல்ல என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கரால் பொது அமைதிக்கு எந்த வகையில் குந்தகம் வந்துவிடும் என்று விளக்க போலீசாருக்கு அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், இல்லாவிட்டால் வழக்கில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று காட்டமாக விமர்சித்துள்ளார்

News June 11, 2024

மோடி 3.0 அரசில் இலாகா மாறிய அமைச்சர்கள் (2/2)

image

3) ஜோதிராதித்ய சிந்தியா – தகவல் தொடர்பு, வடகிழக்கு விவகாரம் (விமானப் போக்குவரத்து, உருக்குத் துறை) 4) கஜேந்திர சிங் செகாவத் – கலாசாரம், சுற்றுலாத் துறை (ஜல்சக்தி) 5) கிரண் ரிஜிஜு – நாடாளுமன்ற விவகாரம், சிறுபான்மைத் துறை (புவி அறிவியல்) 6) மன்சுக் மாண்டவியா – தொழிலாளர், இளைஞர் நலன், விளையாட்டு (சுகாதாரம், ரசாயனம், உரம் 7) கிஷண் ரெட்டி – நிலக்கரி, சுரங்கம் (கலாசாரம்).

News June 11, 2024

மோடி 3.0 அரசில் இலாகா மாறிய அமைச்சர்கள் (1/2)

image

பிரதமர் மோடி தலைமையில் தொடர்ந்து 3ஆவது முறையாக மத்தியில் அமைந்துள்ள அமைச்சரவையில், முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்ற 7 பேரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. 1) பிரகலாத் ஜோஷி – உணவு, நுகர்வோர் விவகாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (முன்பு, நிலக்கரி சுரங்கம், நாடாளுமன்ற விவகாரம்) 2) கிரிராஜ் சிங் – ஜவுளித்துறை (முன்பு, கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ்)

News June 11, 2024

இபிஎஸ் அணியில் இணையும் கு.ப.கிருஷ்ணன்?

image

ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியாக இருந்த கு.ப.கிருஷ்ணன், இரு தினங்களுக்கு முன் அவரிடம் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, கட்சி ஒன்றிணைய வேண்டும் என எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் பிரார்த்தனை செய்யப் போவதாக அறிவித்த அவர், இதுவரை செய்யவில்லை. அவர் இபிஎஸ் அணியில் இணைய இருப்பதால் பிரார்த்தனை முடிவை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

News June 11, 2024

மத்திய அமைச்சரவையில் 33 புதுமுகங்கள்

image

மத்திய அமைச்சரவையில் 33 புதுமுகங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கியமானவர்களை தெரிந்து கொள்வோம். *சிவ்ராஜ் சிங் செளஹான் * கட்டார் *ராம் மோகன் நாயுடு *குமாரசாமி *ஜிதன் ராம் மாஞ்சி *லலான் சிங் * சிராக் பாஸ்வான் *சிஆர் பாட்டீல் *அன்னபூர்ணா தேவி *பிரதாபிராவ் யாதவ் *ஜெயந்த் செளதரி *சுரேஷ் கோபி ஆவர். இதில் செளஹான், கட்டார், மாஞ்சி, குமாரசாமி ஆகியோர் முன்னாள் மாநில முதல்வர்கள் ஆவர்.

News June 11, 2024

குலதெய்வ வழிபாட்டை தவற விடாதீர்கள்

image

கடன் தொல்லைகளிலிருந்து மீள, குலதெய்வ வழிபாடு துணை செய்யும். மூன்று பெளர்ணமிகள் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்துவந்தால் கடன் தொல்லைப் படிப்படியாகக் குறையும். ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் குலதெய்வ கோயிலுக்கு சென்றும் வரவேண்டும். குலதெய்வ கோயில் தூரமாக இருப்பவர்கள் அல்லது குலதெய்வமே தெரியாதவர்கள் ஐந்துமுக விளக்கு வைத்து தீபமேற்றி வழிபட வேண்டும்.

News June 11, 2024

பாஜகவில் இணைய மாட்டேன்: ஓபிஎஸ்

image

எக்காரணம் கொண்டும் நான் பாஜகவில் இணைய மாட்டேன் என்று ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், “என் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம். இப்படி சொன்ன பிறகும் நான் பாஜவில் இணையப் போவதாக யாராவது பேசுகிறார்கள் என்றால் அவர்கள் சுயநலத்துக்காக சொல்கிறார்கள். எனது அணியில் இருந்து விலகுவோர் இக்கரைக்கு பச்சை என்று செல்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

News June 11, 2024

காஷ்மீரில் 3 தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை

image

ஜம்மு -காஷ்மீரின் ரீசி பகுதியில் உத்தர பிரதேச யாத்ரீகர்கள் ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து மீது ராணுவ வீரர்கள் போல உடையணிந்து வந்து நேற்று முன்தினம் 3 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் டிரைவர் மீது குண்டுபாயவே, பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9 பேர் பலியாகினர். மேலும் 40 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த 3 தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!