India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இன்று (ஜூலை 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

2024-25ஆம் நிதியாண்டில் முதல் 3 மாதங்களில், தமிழக அரசு வணிக வரித்துறையில் ₹3,727 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். வணிகவரித் துறை நுண்ணறிவுப் பிரிவினரின் சிறப்பு சோதனையில் ₹1,040 கோடி மதிப்பிலான போலி உள்ளீட்டு வரியினை கண்டறிந்துள்ளதாகக் கூறிய அவர், போலியான பில் வழங்கிய 316 பதிவுச் சான்றுகளை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

கதுவா தீவிரவாதத் தாக்குதல் குறித்து மக்களவையில் பேசுவேன் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். லக்னோ விமான நிலையத்தில் கதுவா விவகாரம் குறித்து ராகுலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தன்னலமற்ற சேவையை தேசம் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்” எனத் தெரிவித்தார்.

*ரஷ்யாவின் உயரிய விருதான ‘தி அப்போஸ்தலர்’ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது
*மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் – ராமதாஸ்
*2026இல் திமுகவின் வெற்றியை தடுக்கவே விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் – திருச்சி சூர்யா
*இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம்.
*2024-25ஆம் நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் ₹3,727 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளது.

இன்று (ஜூலை 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஸ்டாம்ப்ஃல் என்ற மலையேற்ற வீரர் 22 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன நிலையில், தற்போது அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் 2002இல் பெரு நாட்டில் உள்ள ஹுவாஸ்கரன் மலையில் ஏறும்போது பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். தற்போது பனிப்பாறைகள் உருகிய நிலையில், அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 22 ஆண்டுகளாக பனியில் இருந்ததால் அவரது உடல் சிதையாமல் இருந்துள்ளது.

‘கருடன்’ படத்தையடுத்து சசிகுமாருக்கு புதிய வாய்ப்புகள் குவிந்துவருகிறது. அந்தவகையில், ஒரு சில படங்களில் கமிட்டாகியுள்ள அவர், ராஜு முருகன் இயக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார். சிறிய பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் நடைபெற்றுவருகிறது. இப்படம் மூலம் கன்னட நடிகை சைத்ரா ஆச்சார் தமிழுக்கு அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

அசாமில் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் முதல் அங்கு கனமழை பெய்துவரும் நிலையில், பிரம்மபுத்திரா, பராக் நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ள நீர் 30 மாவட்டங்களை சூழ்ந்துள்ள நிலையில், 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பலி எண்ணிக்கை 72 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 7 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மின்சார களப்பணியாளர்களுக்கு புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்தாமல் உள்ள இணைப்புகள், கட்டணம் செலுத்திய இணைப்புகள், மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்ட & கணக்கெடுக்கப்படாத விவரங்களையும், மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் பளு குறைப்பு, மின்னகம் சேவை மையம், நுகர்வோர் அளிக்கும் புகார் மற்றும் அதன்மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

பிரபல நடிகை ஊர்வசி ரெளதலா, படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் ‘NBK 109’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் அவர், படம் தொடர்பான சண்டைக் காட்சியில் நடித்தபோது படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து, சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழில் ‘லெஜண்ட்’ படத்தில் அவர் நடித்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.