News March 23, 2025

அதிக புரத சத்து உணவுகளை தவிருங்கள்

image

கோடை வெயில் வெளுத்து வாங்குவதால், அதிக புரத சத்து உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மேலும், கால் சதைப்பிடிப்பு ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தால், மயக்க நிலை போன்றவை இருந்தால், உடனே ஹாஸ்பிடலில் சேர்க்க வேண்டும். மதிய நேரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களின் அருகே, குழந்தைகளை விடக்கூடாது. செயற்கை குளிர்பானங்கள், காபி, டீ, மது அருந்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

News March 23, 2025

மேட்ரிமோனி தளங்களில் புதிய மோசடி.. உஷார் மக்களே!

image

மேட்ரிமோனி தளங்களில் புதிய பண மோசடி நடைபெறுவதால், உஷாராக இருக்கும்படி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். போலி கணக்கு மூலம் திருமண விருப்பம் தெரிவிக்கும் இக்கும்பல், மணப்பெண் (அ) மணமகனிடம் பேசி, ஆன்லைனில் முதலீடு செய்ய ஆசையை தூண்டுகின்றனர். பின் போலி இணையதளங்கள் மூலம் பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு, தொடர்புகளை துண்டித்துவிட்டு தப்பிவிடுகின்றனர். TNல் இதுபோல் 379 மோசடி புகார்கள் பதிவாகியுள்ளன.

News March 23, 2025

RCB-யே கோப்பையை வெல்லும்: பதான் கணிப்பு

image

RCB-யின் ‘ஈ சாலா கப் நமதே’ கனவு நடப்பு IPL தொடரில் நிறைவேற வாய்ப்புள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கணித்துள்ளார். RCBக்கு நல்ல பவுலிங் யூனிட் உள்ளதாகவும், அவர்கள் கண்டிப்பாக டாப்-4க்குள் இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். முதல் போட்டியிலேயே கிடைத்த வரவேற்பை அவர்கள் தக்க வைப்பார்கள் என தான் நம்புவதாகவும், கேப்டன் படிதார் ரிஸ்க் எடுப்பது தனக்கு பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

News March 23, 2025

சிக்கன் விலை குறைந்தது

image

வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ₹104க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ₹8 குறைந்து ₹96க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் சிக்கன் விலை குறையும் என கூறப்படுகிறது. மேலும், முட்டை கொள்முதல் விலை 415 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ₹70 ஆகவும் நீடிக்கிறது.

News March 23, 2025

கனமழையால் வெள்ளக்காடான ஸ்பெயின்!

image

ஸ்பெயினில் பெய்து வரும் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் பல நகரங்களில் அவசர நிலை அமலாகியுள்ளது. மன்ஜனாரேஸ் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், கரையோரங்களில் உள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளன. அங்கிருந்து 48 பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News March 23, 2025

நள்ளிரவில் திமுக நிர்வாகி கொடூர கொலை

image

மதுரையில் நள்ளிரவில் திமுக நிர்வாகி கொடூரமாக கொலை செய்யப்பட்டதால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மதுரை தனக்கன்குளம் பகுதியில் முன்னாள் திமுக மண்டலத் தலைவர் வி.கே.குருசாமியின் ஆதரவாளர் காளீஸ்வரனை, ஓட ஓட பல இடங்களில் அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்துள்ளது. இதனையடுத்து, அசம்பாவிதங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News March 23, 2025

தமிழன் ‘தமிழ்நாட்டை’ உருவாக்கவில்லை: சிபிஆர்

image

தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது; எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை என்று சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. சமண மதம் தோன்றியபோது, மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள், அதைப் பின்பற்றினர்; இன்று 40,000 தமிழ் சமணர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்கள், வரலாற்றை சிபிஆர் திரித்து சொல்வதாக விமர்சிக்கின்றனர்.

News March 23, 2025

கிரிக்கெட் ரசிகர்கள் Safetyக்கு ‘சென்னை சிங்கம்’

image

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் CSK – MI இடையே நடக்கும் எல் கிளாசிக்கோ போட்டியை காண திரளான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரசிகர்களின் பாதுகாப்புக்காக ‘சென்னை சிங்கம் IPL QR-CODE’ என்ற நவீன வசதியை சென்னை போலீஸ் அறிமுகம் செய்திருக்கிறது. ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், இந்த QR-CODE மூலம் மக்கள் போலீஸிடம் புகார் தெரிவிக்கலாம்.

News March 23, 2025

நெல்லை, குமரி, தூத்துக்குடியில் மழை தொடரும்: IMD

image

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. நெல்லையில் அம்பை, மணிமுத்தாறு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News March 23, 2025

போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ்?

image

கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நிமோனியாவால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸூக்கு ஒரு மாதத்திற்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். எனினும் 2 மாதங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!