India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் பாஜக கூட்டணி இறுதி செய்யப்படும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கூட்டணி அறிவித்தவுடன் வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்படும் என்றார். மேலும், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக பாஜக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல. தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக நாங்கள் பட்டியல் கொடுக்கவும் தயார் என்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில் 11ஆம் வகுப்பு மாணவி காதலித்து வந்ததால், அவரை பெற்றோர் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பொதுத்தேர்வு எழுதி வந்த மாணவி கடந்த 3 நாள்களுக்கு முன் காணவில்லை. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், காதலை கைவிட மறுத்ததால், மாணவியை ஏரியில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் மகள் காணாமல் போனதாக பெற்றோர் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான மலையாளப் படமான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ வசூலில் கலக்கி வருகிறது. இப்படம் உலகம் முழுவதிலும் சேர்த்து ரூ.200 கோடியை நெருங்கியதுடன், அதிகம் வசூலித்த முதல் மலையாளப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் ரூ.200 கோடியைத் தாண்டும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 – 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக அசெளகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்குவது தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை காலை இவ்வழக்கை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கொடுத்த நிதியை விட பிரதமர் மோடி அளித்த நிதியே அதிகம் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழகத்திற்கு பல சிறப்பு திட்டங்களை மோடி அறிவித்துள்ளதாக கூறிய அவர், பிரதமரை விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கிடைக்கும் என்றும் தெரிவித்தார். முன்னதாக, பிரதமரை அமைச்சர் உதயநிதி 28 பைசா என விமர்சனம் செய்திருந்தார்.
டெஸ்டில் பல சாதனைகள் படைத்த அஷ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சிறப்பு பரிசு வழங்கியுள்ளது. 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியதை கௌரவிக்கும் பொருட்டு அவருக்கு தங்க நாணயங்களால் 500 என வடிவமைக்கப்பட்ட சிறப்பு பரிசை வழங்கி கௌரவித்துள்ளது. டெஸ்டில் 500 விக்கெட்டுகள் என்ற சாதனையை நிகழ்த்திய அஷ்வினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் 21 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சி, அரக்கோணம், தி.மலை, வேலூர், கடலூர், தருமபுரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், கரூர், நீலகிரி, பொள்ளாச்சி, தஞ்சை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதில் மாற்றமும் இருக்கலாம்.
திண்டுக்கல் எம்.பி தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் அபார வெற்றி பெறுவார் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் சிபிஎம்-க்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கியதாக கூறிய அவர், நாளைக்கு தேர்தல் வைத்தாலும் வெற்றியை பெற்றுத் தருவோம் என்று சூளுரைத்தார். முன்னதாக 2019 தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனை வழிபட்டால், பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமையன்று, ராகு கால நேரமான காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலான நேரத்தில் கோயிலுக்கு சென்று துர்க்கை அம்மன் முன்பு நல்லெண்ணெய், நெய்யில் பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதுபோல வழிபட்டு வந்தால், பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும். தீராத துன்பங்களும் விலகும்.
Sorry, no posts matched your criteria.