News March 24, 2025

மார்ச் 24: வரலாற்றில் இன்றைய தினம்

image

*1947- மவுண்ட்பேட்டன் இந்தியாவின் கவர்னர் ஜெனரலானார். *1988 – பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் மறைந்த நாள். *1993 – ஷூமேக்கர்- லேவி வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டது. *காங்கிரஸ் கட்சி உறுப்பினரல்லாத, முதல் பிரதமராக மொரார்ஜி தேசாய் தேர்ந்தெடுக்கப்பட்டார் (1977) *பூடான் மக்களாட்சிக்கு மாறியது. முதல் பொதுத் தேர்தல் நடந்தது (2008) *2020 – கொரோனா வைரஸ்: இந்தியாவில் முழு ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார்.

News March 24, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 216
▶குறள்: பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்.
▶பொருள்: ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.

News March 24, 2025

மகிழ்ச்சியான மனநிலைக்கு தினமும் 10 நிமிடம் ஓடுங்கள்

image

தினமும் 10 நிமிடம் ஓடுவதன் மூலம் மகிழ்ச்சியான மனநிலை ஏற்படும் என்கின்றனர் ஜப்பானிய ஆய்வாளர்கள். ஓடுவதால் பெருமூளை தமனியில் ரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரித்து, மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது, மூலையில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. மேலும் மூளையின் முன்புரணியை தூண்டுவதன் மூலமாக, மூளை சிறப்பாக செயல்பட்டு மகிழ்ச்சி ஏற்படும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

News March 24, 2025

பார்க்கில் பிணமாக தொங்கிய ஜோடி… தலைநகரில் அதிர்ச்சி

image

பூங்காவில் வாக்கிங் சென்று கொண்டிருக்கும்போது, அங்குள்ள மரத்தில் 2 பேர் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? இந்த சம்பவம் டெல்லி மான் பூங்காவில் நடந்துள்ளது. 17 வயது சிறுவன், சிறுமி ஆகியோர் நைலான் கயிற்றில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளனர். தகவல் அறிந்து சென்ற போலீசார், 2 பேரின் உடல்களையும் கைப்பற்றியுள்ளனர். தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

News March 24, 2025

இன்றைய (மார்ச் 24) நல்ல நேரம்

image

▶மார்ச் – 24 ▶பங்குனி – 10 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 06:30 AM – 07:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 01:30 AM – 02:30 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 01:30 PM- 03:00 PM ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.

News March 24, 2025

திருமணமான ஆண்களுக்கு மட்டும்…

image

கல்யாணமான ஆண்களுக்கு தொப்பை வளர்வதை நாம் கிண்டல் செய்வதுண்டு. ஆனால், அது உண்மைதான் என்கிறது போலந்து ஆய்வு. பேச்சிலர் ஆண்களைவிட, திருமணமான ஆண்களுக்கு உடல்பருமன் அதிகரிக்கும் வாய்ப்பு 3.2 மடங்கு அதிகமாகிறதாம். ஆனால், பெண்கள் குண்டாவதற்கும் திருமணத்துக்கும் பெரிய தொடர்பில்லையாம். அதனால் என்ன என்கிறீர்களா? உடல்பருமன் அதிகரித்தால் BP முதல் கிட்னி பிரச்சனை வரை எண்ணற்ற நோய்கள் வரும் வாய்ப்பு அதிகமாகும்.

News March 24, 2025

எந்த ராசிக்கு எந்தக் கல்?

image

ஒருவர் தனது ஜென்ம ராசிக்குரிய ரத்தினக் கல்லை ஜாதக ரீதியாக ஆராய்ந்து அணிந்து கொண்டால் நன்மைகள் ஏற்படும் என சாஸ்திரம் கூறுகிறது. அதன் விவரம் இதோ: ➤மேஷம் – பவளம் ➤ரிஷபம் – பச்சை ஜிர்கான் ➤மிதுனம் – மரகதம் ➤கடகம் – நீல முத்து ➤சிம்மம் – மாணிக்கம் ➤கன்னி – மரகதம் ➤துலாம் – பச்சை மணிக்கல் ➤விருச்சிகம் – செவ்வந்திக்கல் ➤தனுசு – புஷ்பராகம் ➤மகரம் – ஆம்பர் கல் ➤கும்பம் – கோமேதகம் ➤மீனம் – கனக புஷ்பராகம்.

News March 24, 2025

நிதிஷ் குமாருக்கு மனநிலை சரியில்லை – PK

image

பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தேசிய கீதத்தை அவமதித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அவரது மனநிலை சரியில்லை என பிரசாந்த் கிஷோர்(PK) விமர்சனம் செய்துள்ளார். நிதிஷுக்கு அவரது அமைச்சரவையில் இருப்பவர்களின் பெயர்களே தெரியாது என தெரிவித்த அவர், நிதிஷ் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். நிதிஷின் மனநிலை சரியில்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரிந்திருக்கும் என்றும் PK குறிப்பிட்டார்.

News March 24, 2025

மாணவி கூட்டு பலாத்காரம்.. 4 கொடூரர்கள் கைது

image

மத்திய பிரதேச மாநிலம் அனுப்பூரில் கல்லூரி மாணவி வீடு திரும்பும் போது 4 பேர் பின் தொடர்ந்துள்ளனர். திடீரென மாணவியை வாயை பொத்தி தூக்கிச் சென்றனர். மறைவான இடத்தில் வைத்து 4 பேரும் சேர்ந்து அவரை பலாத்காரம் செய்துள்ளனர். படுகாயம் அடைந்த மாணவி நடக்க முடியாமல் தட்டுத்தடுமாறி வீடு சென்றார். மாணவியை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 4 பேர் கைதாகியுள்ளனர்.

News March 24, 2025

விவசாயிகளுக்கு ₹6,000: மார்ச் 31க்குள் விண்ணப்பிக்கவும்

image

விவசாயிகள் அடையாள எண் பெற மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. விவசாயிகள் தனி அடையாள எண் பெறாவிட்டால், மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் ₹6,000 பெற முடியாது என கூறியுள்ளது. ஏற்கெனவே, PM கிசான் திட்டத்தில் இப்போது இணைந்தாலும், உதவித் தொகை வழங்கப்படும் என்றும், தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்குமாறும் மத்திய அரசும் அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!