News March 24, 2025

ஒரு டம்ளர் மோர் குடிங்க..

image

✦கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் வறட்சி நீங்கும். மோரில் வைட்டமின் பி2 இருப்பதால் கல்லீரல் நன்றாக செயல்பட வைக்கிறது. ✦மோருடன் இஞ்சி, சீரகம் சேர்த்து குடித்து வர வயிறு உப்புசம் நீங்கும். ✦மாதாவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி, ரத்தப்போக்கை சமாளிக்க மோருடன் வெந்தயம் சேர்த்து குடிக்கலாம். ✦உடலில் உள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது.

News March 24, 2025

பணம் கையில் தங்க வேண்டுமா? 3 சூப்பர் டிப்ஸ்

image

உங்களிடம் பணம் எப்போதுமே செழிப்பாக இருக்க இந்த 3 டிப்ஸை மட்டும் ஃபாலோ பண்ணுங்கள். 1) பட்ஜெட்: மாதந்தோறும் சம்பளம் வந்ததும் அந்த மாதத்திற்கான வரவு செலவு பட்ஜெட்டை தயாரித்து, அத்தியாவசிய செலவு, பொழுதுபோக்கு செலவுகளை பட்டியலிடுங்கள். இந்த பட்ஜெட்டை மீறாதீர்கள். 2) யுபிஐக்கு பதிலாக பணத்தை கையில் கேஷாக எடுத்து செலவிடுங்கள். இது செலவை குறைக்கும். 3) அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவதை தவிருங்கள்.

News March 24, 2025

இன்று கூடுகிறது சட்டப்பேரவை: என்னென்ன எதிர்பார்க்கலாம்?

image

தமிழக பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து 4 நாட்கள் விவாதம் நடந்தது. இந்நிலையில், 2 நாட்கள் விடுமுறைக்கு பின், இன்று காலை 9:30 மணிக்கு பேரவை கூடுகிறது. அப்போது துறைவாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துடன், உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 30 வரை நடைபெறும். இன்று எதிர்க்கட்சிகள் பேசுவார்களா? வெளிநடப்பு செய்வார்களா?

News March 24, 2025

செவ்வாய் தோஷம் போக்கும் முருக வழிபாடு!

image

பூர்வ ஜென்மத்தில் பெற்றோரை சரியாகக் கவனிக்காதவர், மறுஜென்மத்தில் செவ்வாய் தோஷத்துக்காளாவர் என்கிறது ஜோதிட சாஸ்திரம். செவ்வாய் தோஷத்தால் மனம் வாடுவோர், அந்த கிரகத்திற்குரிய அதிதேவனான முருகனுக்கு விரதமிருந்து, விருட்சிப்பூ சாற்றி, ஆறுமுக விளக்கேற்றி, கந்தசஷ்டி கவசம் பாடி, தேன் கலந்த தினைமாவு படைத்து வணங்குங்கள். அவர் அருளால் செவ்வாய் தோஷ பாதிப்புகள் குறைந்து, வாழ்வு செம்மையுறும் என்பது ஐதீகம்.

News March 24, 2025

சிறிய இலக்கை நிர்ணயிங்கள்…

image

வெற்றியாளர்கள் என்ன வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருப்பார்கள். அப்போது தான் அவர்களுக்கு வேண்டாத விஷயங்களில் கவனத்தை சிதற விடாமல் இருக்க முடியும். அதேபோன்று உங்கள் இலக்கு அடையும் அளவில் இருக்க வேண்டும். யதார்த்தமில்லாத பெரிய இலக்கை நிர்ணயித்து, அடைய முடியவில்லை என்று வருந்தாமல் சிறிய சிறிய இலக்கை நிர்ணயித்து, வெற்றிபெற்று, முன்னேறுங்கள்!

News March 24, 2025

பறிபோன 17 பிஞ்சு உயிர்கள்… பாகிஸ்தானில் பரிதாபம்

image

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஜனவரி – மார்ச் வரை நடத்திய கணக்கெடுப்பில் தட்டம்மை பாதிப்பால் 17 குழந்தைகள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் தட்டம்மையால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

News March 24, 2025

தினமும் இரு வேளை அவசியம்!

image

பல் வலி, ஈறுகள் அழற்சி போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபட தினமும் ஆயில் ஃபுல்லிங் செய்வது நல்ல பலனைத்தரும். 1 டீஸ்பூன் உப்பை லேசான சுடு தண்ணீரில் கலந்து காலை, மாலை இரு வேளைகளிலும் வாய் கொப்பளியுங்கள். நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயையும் எடுத்துக்கொள்ளலாம். பேக்கிங் சோடாவை பேஸ்டாக்கி ஈறுகளின் மீது தடவுவதால் அழற்சி தடைபடும். வீக்கம் குறையும்.

News March 24, 2025

திமுக கூட்டணியில் விரிசலா?

image

திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து தவாக தலைவர் வேல்முருகன் பேசியிருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. சட்டப்பேரவையில் அவருக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. இந்நிலையில், திமுக கூட்டணியில் தொடர்வதோ, விலகுவதோ குறித்து தனித்து முடிவெடுக்க முடியாது என வேல்முருகன் தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியாக முடிவெடுத்து வெளிப்படையாக அறிவிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 24, 2025

வள்ளலார் பொன்மொழிகள்

image

*உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக, பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும். *பிறருடைய பசியைப் போக்குவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் முடிந்து விடாது. பிறருக்கு ஏற்படும் துன்பங்களை களையவும் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். *உடலை வருத்தி விரதம் இருப்பதைவிட, யாரையும் துன்புறுத்தாமல் இருப்பதே சிறந்தது.

News March 24, 2025

6 நாட்களுக்கு பின் கலவரம் ஓய்ந்தது

image

மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி சில அமைப்புகள் தொடங்கிய போராட்டம் பின் கலவரத்தில் முடிந்தது. குறிப்பாக நாக்பூரில் கடந்த 17-ம் தேதி பெரும் வன்முறை வெடித்தது. இதனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பதற்றம் தணிந்துள்ளதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதால் நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்படுவதாகவும், முதல்வர் பட்னவிஸ் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!