India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆதரவாக நிற்கும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு நன்றி என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் பிரதமரைச் சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த உரையின் முடிவில் “தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்ற முழக்கத்தையும் முதல்வர் முன் வைத்தார்.
சில மாதங்களாக கடும் சரிவை கண்டுவந்த இந்திய பங்குச்சந்தைகள், கடந்த ஒரு வாரமாக மேல் நோக்கி உயர்ந்து வருகின்றன. இன்றைய வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 23,658 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 77,984 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. வங்கிகளின் பங்கு விலைகள் இன்று கணிசமாக உயர்ந்தன.
அமெரிக்காவின் பிரபல அரசியல்வாதியும், முன்னாள் எம்பியுமான மியா லவ் (49) புற்றுநோய் பாதிப்பால் காலமானார். ஒஹையோ மாநிலத்தின் முதல் கறுப்பின எம்பி, வெள்ளையின ஆதிக்கம் கொண்ட குடியரசுக் கட்சியின் முதல் பெண் கறுப்பின எம்பி.யாகிய தனிச்சிறப்பு கொண்ட இவர் டிரம்ப்பை தொடர்ந்து விமர்சித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே திமுக மீதான விமர்சனங்களை CPM மாநில தலைவர் சண்முகம் தொடர்ந்து வைத்து வருகிறார். அந்த வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த நிதி நிலையை அரசு காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல என அவர் தெரிவித்துள்ளார். மேலும், நெல்லையில் சாதிய மோதல் இல்லை என சபாநாயகர் அப்பாவு சொல்வது உண்மைக்கு புறம்பானது எனவும் விமர்சித்துள்ளார்.
உலகின் உயரமான கட்டடம் எதுவென்று கேட்டால், கண்ணை மூடிக் கொண்டு துபாய் புர்ஜ் கலிஃபா என்று சொல்லி விடுவோம். அதன் உயரம் 2,717 அடி. இந்தியாவின் உயரமான கட்டடம் எங்கு இருக்கிறது தெரியுமா? மும்பை பலாய்ஸ் ராயல் டவர்தான் அது. 2018ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டடம், 1,050 அடி உயரத்தில் 88 தளங்களை கொண்டதாகும். இந்த பில்டிங் மேல இருந்து இன்னைக்கு குதிச்சா, நாளைக்குத்தான் கீழ வந்து சேருவோம் போல!
ஜூலை 14ஆம் தேதி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இதற்கு முன் 2012ஆம் ஆண்டு இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ரோப் கார் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட (₹26 கோடி) அதிக செலவு ஆவதால் (₹32 கோடி) விரைவில் கூடுதல் நிதி ஒதுக்கி திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
TNன் அனுமதியின்றி எந்த கொம்பனாலும் மேகதாது அணை கட்ட முடியாது என சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உறுதி தெரிவித்துள்ளார். நதிநீர் பிரச்னைக்காக 22 வழக்குகள் தொடர்ந்துள்ளதாக கூறிய அவர், தமிழகத்தின் அனுமதி இல்லாமல் ஒரு கல்லைக் கூட எடுத்துச்செல்ல முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் சென்றதாக இதுவரை 21,000 வாகனங்கள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சம்மர் சீசனில், வியர்க்குரு வாட்டி வதைத்து விடும். இந்த வியர்க்குருவை சமாளிக்க, பிரத்யேக பவுடர்களை பலர் பயன்படுத்துவார்கள். அந்த பவுடர்களில் Arrow root starch, Corn starch, Menthol, Zinc oxide போன்றவை இருக்க வேண்டும். அப்போது தான், அவை பயன்படுத்தும் போது, சற்று இதமாக உணர முடியும். இருப்பினும், இதனை அளவுக்கு அதிகமாக யூஸ் செய்தால், அது சருமத்தில் பிரச்னைகளை உண்டாக்கலாம் எனவும் எச்சரிக்கின்றனர்.
ஜாமினுக்குப் பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்று SC அதிருப்தி தெரிவித்துள்ளது. ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று ED வைத்த கோரிக்கைக்கு 10 நாள்களில் பதிலளிக்க வேண்டும் என்றும் செ.பாலாஜிக்கு SC உத்தரவிட்டுள்ளது. 10 நாள்களுக்குள் அமைச்சர் பதிலளிக்காவிட்டால் ஜாமின் ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் கைதாகும் வாய்ப்பு உள்ளது.
தோனி நேற்று 0.12 விநாடிகளில் சூர்யகுமார் யாதவை ஸ்டெம்பிங் செய்ததை அடுத்து, ரசிகர்கள் புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர். ஆனால், இது அவரின் 3வது அதிவேக ஸ்டெம்பிங் தான். தோனியின் அதிவேக ஸ்டெம்பிங் 0.08 விநாடிகள். 2018ல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கீமா பாலை கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டெம்பிங் செய்தார். அதே போல, 2023 ஆம் ஆண்டின் பைனலில் சுப்மன் கில்லை வெறும் 0.10 விநாடிகளில் ஸ்டெம்பிங் செய்தார் தோனி.
Sorry, no posts matched your criteria.