India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேர்ள் ஃபிரண்ட் இல்லையே என ஏங்கும் பலருக்கு மத்தியில், சீன கல்லூரி பேராசிரியரான லூ(35) போட்டுள்ள கண்டிஷன் தலைசுற்ற வைக்கிறது. ஆண்டுக்கு ரூ.1.16 கோடி சம்பாதிக்கும் அவர், Slim ஆன 2k kid பெண்தான் துணையாக வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், உயரம் 165 – 171 செ.மீ. இருக்க வேண்டும் என்றும், ஒரு டிகிரியாவது படித்து இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். லூ எதிர்பார்த்த பெண் கிடைக்குமா?
கடந்த 3ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 தேர்வுகள் நாளையுடன் முடிவடைகின்றன. இந்நிலையில், அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர் சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பிளஸ்1, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடியும் நாளன்று மாணவர்கள் அமைதியான முறையில் பள்ளி வளாகத்தை விட்டுச் செல்ல, உள்ளூர் காவல் நிலையங்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது.
கல்வியை RSS கட்டுப்பாட்டில் எடுத்தால் இந்தியாவின் எதிர்காலம் அழிந்துவிடும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் பேசிய அவர், RSS கையில் கொஞ்சம் கொஞ்சமாக கல்விமுறை செல்வதாகவும், அப்படி சென்றால் யாருக்கும் வேலை கிடைக்காது எனவும் எச்சரித்தார். வேலையின்மை குறித்து பிரதமர் பேசுவதே இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
தவெக பொதுக்குழுக் கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்தக் கூட்டத்துக்கு முன்பாக, மாவட்ட வாரியாக மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை உடனடியாக பட்டியலிட்டு சமர்ப்பிக்க தவெக மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், 2021 தேர்தலில் திமுக சார்பில் கொடுக்கப்பட்டு, இதுவரை நிறைவேற்றப்படாமல் இருக்கும் வாக்குறுதிகளின் பட்டியலையும் வழங்குமாறு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
ஆயிரம் உறவுகள் நம்முடன் இருந்தாலும், அப்பாவின் இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது. அவ்வாறு, உ.பி.யைச் சேர்ந்த லாய்க் அகமது (74) என்பவர் வயோதிகத்தால் இறந்து போக, இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்த அவரது மகன் அடிக் அகமதும் (34) ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, இருவரின் உடல்களையும் ஒரே இடத்தில் உறவினர்கள் தகனம் செய்தனர். அடிக் அகமதுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் நடிகர் விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’, 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி (ஜன. 9) வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. அரசியல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில், ரிலீஸ் அறிவிப்பை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
<<15869033>>சவுக்கு சங்கரின்<<>> வீட்டிற்குள் ஒரு கும்பல் நுழைந்து சாக்கடையை வீசிய சம்பவத்திற்கு இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள யாரும், இந்த தாக்குதலை சகித்துக் கொள்ள மாட்டார்கள் எனக் கூறிய இபிஎஸ், உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இச்செயலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
IPL வீரர்களின் சம்பளம் குறித்து பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் அம்பயர்கள் பெறும் சம்பளம் எவ்வளவு என யோசித்தது உண்டா? IPL தொடரில் அம்பயர்கள் Elite மற்றும் Developmental Umpires என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, சம்பளம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில், Elite Umpires ஒரு போட்டிக்கு ₹1,98,000 பெறுகின்றனர். Developmental Umpires ஒரு போட்டிக்கு ₹59,000 பெறுகின்றனர். இதுல சேர்ந்துடலாம் போலயே.
ஒரு நடிகர் உடனடியாக முதல்வராகி விட முடியாது என நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், NTR-க்கு நடந்தது போல எல்லாருக்கும் நடக்காது எனவும் அவர் கூறியுள்ளார். அரசியல் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் என்றும் முதலில் நிலைத்து நிற்க வேண்டும் என்றும் கூறினார். விஜய்க்கு அனுபவம் உள்ளது. நான் சொல்ல ஒன்றும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
கிருஷ்ணகிரி அருகே டிராக்டர் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் பெண்ணும், மாணவன் அர்னீஷும் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 2 மாணவர்கள் படுகாயங்களுடன் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் திடீரென பிரேக் அடித்ததால் விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தப்பியோடிய டிராக்டர் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.