News March 24, 2025

செக் மோசடி.. பிரபல கிரிக்கெட்டருக்கு சிக்கல்

image

வங்கதேசத்தின் அவாமி லீக் கட்சியின் எம்.பி.யாக பிரபல கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் இருந்தார். அங்கு கலவரம் ஏற்பட்டபோது முன்னாள் பிரதமர் ஹசினா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அதேபோல் நாட்டை விட்டு சென்ற ஷகிப் தற்போது வரை திரும்பவில்லை. இதனிடையே 2.50 கோடி மதிப்பிலான செக் மோசடி வழக்கில் அவர் சிக்கி இருந்தார். தற்போது அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News March 24, 2025

மலையாளப் படத்தில் சேரன்.. காவல்துறை உடையில் அசத்தல்

image

ஆட்டோகிராப் தொடங்கி பல அருமையான படங்களை தமிழில் கொடுத்தவர் சேரன். அவர் தமிழ் சினிமாவில் இருந்து தற்போது மலையாளத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். அனுராஜ் மனோகர் இயக்கும் நரிவேட்டை படத்தில் சேரன் தற்போது நடித்து வருகிறார். படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக டொவினோ தாமஸ் நடிக்கிறார்.

News March 24, 2025

அசுத்தமான ரயில் நிலையங்கள்: டாப் லிஸ்ட்டில் சென்னை!

image

வடமாநிலங்களில்தான் ரயில் நிலையங்கள் மோசமாக இருக்கும் என பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்தியாவின் அசுத்தமான ரயில் நிலையம் இருப்பது சென்னையில் தானாம். தூய்மை அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில், மிகவும் அசுத்தமான ரயில் நிலையமாக பெருங்களத்தூர் தேர்வாகியுள்ளது. அதன் பிறகே, ஷாகஞ்ச்( உ.பி. ), சதார் பஜார்(டெல்லி ) ஒட்டப்பாலம் (கேரளா) உள்ளிட்ட ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

News March 24, 2025

KL ராகுல் ஆப்சென்ட்… இதுதான் காரணமா?

image

ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு டெல்லி அணியின் கேப்டனாக செயல்படுவார் என கணிக்கப்பட்ட KL ராகுல், முதல் போட்டியில் களமிறங்கவே இல்லை. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி பந்துவீசி வருகிறது. ஆனால், பிளேயிங் XI-ல் KL ராகுல் இல்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விளையாடவில்லை என கேப்டன் அக்சர் படேல் தெரிவித்துள்ளார். KL ராகுலின் மனைவி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

News March 24, 2025

சூரிய கிரகணம்: பணமழையில் குளிக்கும் 5 ராசிகள்

image

வரும் 29ஆம் தேதி நிகழவுள்ள இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தன்று, சனி பகவானும் மீனத்திற்கு செல்கிறார். இவ்வாறு இரு அரிய நிகழ்வுகளும் ஒரே நாளில் நடப்பதால் மேஷம், கடகம், துலாம், மகரம், மீனம் ஆகிய 5 ராசிக்கார்கள் பணமழையில் நனையப் போவதாக ஜோதிடம் கூறுகிறது. பணம் மட்டுமல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும் உண்டாகும். மூதாதையர் சொத்துகளால் ஆதாயம் உண்டாகும். சொத்து வாங்குவீர்கள்.

News March 24, 2025

KV பள்ளிகளில் தமிழாசிரியர்கள் ‘0’: கனிமொழி

image

தமிழகத்தில் மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களின் எண்ணிக்கை பூஜ்யமாக உள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். ஆனால், ஹிந்திக்கு 86, சமஸ்கிருதத்துக்கு 65 ஆசிரியர்கள் உள்ளதாக கூறியுள்ள அவர், மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் ஹிந்தியையும், சமஸ்கிருத்தையும் திணிப்பதைதான் காலம் காலமாக திமுக எதிர்க்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

News March 24, 2025

எம்புரான் படத்துக்காக கல்லூரிக்கு விடுமுறை

image

பக்கா மாஸ் படமான லூசிபரை தொடர்ந்து அதன் 2ம் பாகமான எம்புரான் உருவாக்கப்பட்டது. லூசிபரை போலவே இதிலும் மோகன்லாலை பிரித்விராஜ் கெத்தாக காட்டியுள்ளார். இதனிடையே எம்புரான் ரிலீஸ் ஆகும் மார்ச் 27ஆம் தேதி பெங்களூருவில் கல்லூரி ஒன்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலேஜ்னா இப்படி இருக்கனும்…

News March 24, 2025

IPL: லக்னோ அணி முதலில் பேட்டிங்…!

image

லக்னோ – டெல்லி அணிகள் சற்றுநேரத்தில் விசாகப்பட்டினம் மைதானத்தில் மோத உள்ளன. இந்த சீசனில் புது கேப்டன்களுடன் 2 அணிகளும் களமிறங்குகிறது. ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணியும், அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்த ஆயத்தமாகி வருகின்றன. இரு அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் மோதியுள்ள நிலையில், 2-ல் டெல்லியும், 3-ல் லக்னோவும் வெற்றி பெற்றுள்ளன. இன்று வெல்லப் போவது யார்?

News March 24, 2025

விடுமுறையை குறைக்கும் தனியார் பள்ளிகள்

image

வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவர்களைக் காப்பாற்றுவதற்காக ஏப்ரல் மத்தியில் இருந்து மே இறுதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், சில தனியார் பள்ளிகள் இதனை படிப்படியாக குறைத்து வருகின்றன. சென்னையில் இயங்கும் சில பள்ளிகள், ஏப்ரல் 25 வரை சிறப்பு வகுப்புகள் நடத்தவுள்ளன. தனியார் பள்ளி மாணவர்களை வெயிலில் இருந்து காப்பாற்றுமா பள்ளிக்கல்வித்துறை?

News March 24, 2025

வேல் யாத்திரை: ஐகோர்ட் தடையை உறுதி செய்தது SC

image

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் பாரத் இந்து முன்னணி அமைப்பு தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா திரிவேதி, ஐகோர்ட் உத்தரவு சரியானதே என கருத்து தெரிவித்தார்.

error: Content is protected !!