News March 24, 2025

அக்னிவீரராக வேண்டுமா? அப்போ உடனே இத பண்ணுங்க

image

அக்னிவீரர் ஆள்சேர்ப்பு குறித்து கோவை ராணுவ அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அக்னிவீரர் ஆட்சேர்ப்புக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் www.joinindianarmy.nic.in-ல் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஏப்ரல் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News March 24, 2025

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

image

விக்கிரவாண்டி அருகே பாறை வெடிப்பில் உயிரிழந்த சிறுமி காயத்ரியின் (10) குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வாய்க்கால் வெட்டுவதற்காக பாறைக்கு வெடி வைத்தபோது சிதறிய கல் ஒன்று, அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியின் தலையில் பட்டது. இந்த செய்தியை கேட்டு வருத்தமடைந்தேன் என்று கூறியிருக்கும் முதல்வர், சிறுமியின் குடும்பத்தினருக்கு ₹3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

News March 24, 2025

‘கலக்குறீங்க ப்ரோ’… பிரதீப்பை பாராட்டிய விஜய்…!

image

தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன் வேகமாக வளர்ந்து வருகிறார். அவர் நடித்த லவ் டுடே, டிராகன் என 2 படங்களும் ஹிட் அடித்த நிலையில், கலக்குறீங்க ப்ரோ என நடிகர் விஜய் தன்னை பாராட்டியதாக நெகிழ்ச்சியுடன் பிரதீப் குறிப்பிட்டுள்ளார். விஜய்யுடன் இருக்கும் படத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவர், உங்கள் அனைவருக்கும் தனது உணர்வு புரிந்திருக்கும் எனக் கூறியுள்ளார்.

News March 24, 2025

ஜார்கண்டில் அடுத்தாண்டு சாதிவாரி கணக்கெடுப்பு

image

இட ஒதுக்கீட்டை அதிகரிக்க சாதிவாரி கணக்கெடுப்பு வகை செய்கிறது. பிஹார், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து ஜார்கண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அம்மாநில அமைச்சர் தீபக் பிருவா, அடுத்த நிதியாண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா?

News March 24, 2025

7,535 காலி இடங்கள்… ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டுத் திட்ட அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, 1,915 முதுநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிப்பு ஆகஸ்ட்டிலும், 1,205 பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான அறிவிப்பு செப்டம்பரிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தோராயமாக இந்த ஆண்டில் 7,535 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

News March 24, 2025

IPL: ஒரே ஓவரில் 6, 6, 6, 6

image

டெல்லிக்கு எதிரான இன்றைய IPL போட்டியில் லக்னோ வீரர் நிக்கோலஸ் பூரன், 75 ரன்கள் அடித்து அசத்தினார். குறிப்பாக, 13ஆவது ஓவரில் அவர் 0, 6, 6, 6, 6, 4 என 28 ரன்கள் குவித்தார். ஸ்டப்ஸ் வீசிய இந்த ஓவரில் பந்து நான்கு புறங்களிலும் பறக்க விடப்பட்டது. பின்னர், 15ஆவது ஓவரில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் பூரன் க்ளீன் போல்ட் ஆனார். இருப்பினும், அவரது பங்களிப்பு லக்னோ அணியை வலுவான இடத்தில் நிறுத்தியிருக்கிறது.

News March 24, 2025

இரவில் அரிசி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

image

இரவில் வளர்சிதை மாற்றம் குறைவதால், அப்போது அரிசி சாப்பிட்டால், கொழுப்பு திரட்டலின் காரணமாக உடல் எடை அதிகரிக்கும் என்பார்கள். அறிவியலாக இதை கொஞ்சம் அணுகுவோம். எடை அதிகரிப்பு என்பது மொத்த கலோரி உட்கொள்ளல் to மொத்த கலோரிகளின் எரிப்பாகும். அதே போல, இரவில் உடலின் செயல்பாடு குறையுமே தவிர, நிற்காது. அதனால், உடல் எரிப்பதை விட குறைவான கலோரிகளை எடுத்துக் கொள்வதையே அறிவியல் பூர்வமாக அறிவுறுத்தப்படுகிறது.

News March 24, 2025

அப்பா ஆனார் கிரிக்கெட் வீரர் KL ராகுல் ❤️❤️

image

பெண் குழந்தைக்கு தந்தையாகி இருப்பதாக KL ராகுல், தனது சோஷியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது மனைவி அதியா ஷெட்டி கர்ப்பமாக இருப்பதை அண்மையில் உறுதிப்படுத்தி இருந்த அவர், இன்று நடைபெறும் ஐபில் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடவில்லை. இதனை வைத்து சில யூகங்கள் சோஷியல் மீடியாவில் வலம்வந்தன. இந்நிலையில், அதியா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக KL ராகுல் தெரிவித்துள்ளார்.

News March 24, 2025

அண்ணாமலை மீது வழக்கு பதிவு!

image

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை விவகாரத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மாநிலத் தலைவர் மீது சேலம் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, இதே புகாரின் பேரில் சேலம் காவல்துறையும் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்திருந்தது.

News March 24, 2025

சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்வு

image

தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் 40 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது. சென்னையை அடுத்துள்ள வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு ஆகிய முக்கிய டோல்கேட்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வைத் திரும்பப்பெறுமாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!