News March 25, 2025

தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிங்க

image

▶ரத்த அணுக்கள் உற்பத்தியை தூண்டுவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். ▶மூளைக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்க உதவும். ▶ரத்த நாளங்களை விரிவுபடுத்தும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
▶ இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும். ▶ குறிப்பாக, செரிமானத்திற்கு உதவும்.

News March 25, 2025

சவுக்கு சங்கர் வீடு சூறை: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

image

யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி அவரது வீட்டில் நுழைந்த சிலர் பொருட்களை சூறையாடினர். இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், டிஜிபி சங்கர் ஜிவால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

News March 25, 2025

மார்ச் 25: வரலாற்றில் இன்றைய தினம்

image

1927 – புதுவை முன்னாள் முதல்வர் ப. சண்முகம் பிறந்த தினம்.
1947 – அமெரிக்காவில் நிலக்கரிச் சுரங்க விபத்தில் 111 பேர் உயிரிழந்தனர்.
1954 – முதல் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ஆர்சிஏ நிறுவனம் வெளியிட்டது.
1992 – ரஷ்ய வீரர் செர்கே கிரிக்காலொவ் மீர் 10 மாதங்களுக்கு பிறகு விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பினார்.

News March 25, 2025

வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க டிப்ஸ்

image

தமிழகம் முழுவதும் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பருத்தியால் ஆன ஆடைகளை அணிய வேண்டும். 12PM – 4PM மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. தினமும் 4லி தண்ணீர் குடிக்க வேண்டும். நீர் சத்துள்ள பழங்கள், இளநீர், நுங்கு போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

News March 25, 2025

இன்றைய பொன்மொழிகள்

image

▶சிந்திப்பவன் மனிதன்; சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திக்காதவன் மிருகம்; சிந்திக்கப் பயப்படுகிறவன் கோழை. ▶மனிதன் பிறந்தநாள் முதற்கொண்டு சாகின்ற வரையில் உலகில் மாணவனாக இருக்கிறான். ▶ ஓய்வு, சலிப்பு என்பவற்றை தற்கொலை என்றே கருதுகிறேன். ▶ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும். ▶ஆயுதமும் காகிதமும் பூஜை செய்ய அல்ல, புரட்சி செய்ய.

News March 25, 2025

குணால் கம்ரா மீது தவறில்லை: உத்தவ் தாக்கரே

image

ஸ்டாண்ட்-அப் காமெடியன் குணால் கம்ரா எந்த தவறும் செய்யவில்லை என்று சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பொதுமக்களின் கருத்தை தான் குணால் கம்ரா வெளிப்படுத்தினார் என்றும், தனிப்பட்ட ரீதியில் அவர் யாரையும் விமர்சிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்களால் குணால் கம்ராவின் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சேதத்துக்கு அரசு இழப்பீடு வழங்கவும் அவர் வலியுறுத்தினார்.

News March 25, 2025

இன்றைய (மார்ச். 25) நல்ல நேரம்

image

▶மார்ச் – 25 ▶பங்குனி – 11 ▶கிழமை: செவ்வாய்
▶நல்ல நேரம்: 08:15 AM – 09:00 AM & 04:30 PM – 05:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 07:30 PM – 08:30 PM
▶ராகு காலம்: 03:00 AM – 04:30 PM
▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM
▶குளிகை: 12:00 PM – 01:30 PM
▶திதி: ஏகாதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: திருவாதிரை ▶நட்சத்திரம் : உத்திராடம் அ.கா 12.57

News March 25, 2025

மியாமி ஓபன்: ஜோகோவிச் வெற்றி

image

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜோகோவிச் (செர்பியா), அர்ஜெண்டினாவின் கமிலோ யூகோ காரபெல்லி உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான விளையாடிய ஜோகோவிச் 6-1, 7-6 (6-1) என்ற செட் கணக்கில் கமிலோ யூகோ காரபெல்லியை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

News March 25, 2025

உங்களின் ‘ஐந்து பேர்’ யார்?

image

நீங்கள் எந்த ஐந்து பேருடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறீர்களோ, அந்த ஐந்து பேரின் சராசரியாகத்தான் நீங்கள் விளங்குவீர்கள் என்ற ஒரு வாக்கியம் உண்டு. நம்மை சுற்றி இருப்பவர்கள் தான் நம் எண்ணத்தை தீர்மானிக்கிறார்கள். உத்வேகம் தரும் நபர்களை கண்டறியுங்கள். வாழ்க்கையை நம்பிக்கையுடன் அணுகும் மனிதர்களுடன் நீங்கள் இருந்தால் உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. அப்படியானவர் உங்களுக்கு இருக்கிறாரா?

News March 25, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச்.25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

error: Content is protected !!