News March 25, 2025

ராகு தோஷம் உள்ளவர்கள் செல்ல வேண்டிய ஆலயம்

image

திருமணஞ்சேரி திருத்தலம் திருமண தடைகளை நீக்க வல்லது. இந்த புனித தலத்தில் பூஜை செய்து வழிபட்டால் திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம். ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் அவர்கள் இங்குள்ள ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்ய அது நீங்கும். மேலும், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் கூட இத்தலத்தில் உள்ள திருக்குளத்தில் நீராடி ராகு பகவானை மனதார வழிபட விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு.

News March 25, 2025

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விலகலா?

image

அமைச்சராக தொடர்வதால் <<15871953>>செந்தில் பாலாஜி<<>>க்கு, ஜாமின் தரக்கூடாது ED எதிர்ப்பு தெரிவித்தது. இதன்பின், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால், ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்த உடனே அமைச்சராக்கப்பட்டார். இந்நிலையில், இதை கண்டித்ததோடு விளக்கம் கொடுக்கவும் SC உத்தரவிட்டுள்ளது. இதனால், மீண்டும் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவார் என அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.

News March 25, 2025

இஸ்லாமியர்கள் அதிமுகவை மன்னிக்க மாட்டார்கள்: முதல்வர்

image

அதிமுகவை இஸ்லாமிய மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என முதல்வர் ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார். இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் பேசிய அவர், ஆபத்து நேரத்தில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக செயல்பட்ட இபிஎஸ், தற்போது இஃப்தார் நோன்பில் குற்ற உணர்ச்சியே இல்லாமல் கலந்து கொள்வதாகவும் விமர்சித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்த அதிமுகவை இஸ்லாமியர்கள் ஏற்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

News March 25, 2025

கனிமொழி குற்றச்சாட்டுக்கு வானதி சீனிவாசன் பதில்

image

தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கொண்டு வந்ததே பிரதமர் மோடிதான் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். KV பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இல்லை என்ற கனிமொழி குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர்,
புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு, நிரந்தர தமிழாசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றார். அந்தெந்த மாநில மொழி பாடங்கள் KV பள்ளிகளில் கற்றுத்தரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

News March 25, 2025

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக் கூடாது: அண்ணாமலை

image

அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். ஜாமீன் கிடைக்க பொய் சொல்லி உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிய செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது எனவும் சாடியுள்ளார். முதல்வர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது செந்தில் பாலாஜி மீது கூறிய குற்றச்சாட்டுக்களை மறந்து அவரை அமைச்சராக தொடர வைப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 25, 2025

முகம் பளிச்சிட இதை ட்ரை பண்ணலாமே…

image

✦மசித்த பப்பாளி மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து சுமார் 15 – 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ சருமம் பொலிவாகும். ✦கடலை மாவை தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு பின் முகம் கழுவ முகம் பளிச்சிடும். ✦மசித்த வாழைப்பழம், தேன் மற்றும் பால் கலந்து பேஸ் மாஸ்க் போட நல்ல பலன் கிடைக்கும்.

News March 25, 2025

யஷ்வந்த் வர்மாக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம்

image

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத்திற்கு பணியிடமாற்றம் செய்ய அம்மாவட்ட வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீதிபதியை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், அலகாபாத் நீதிமன்றத்தில் பணியாற்ற கூடாது என வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். முன்னதாக, நீதிபதி வீட்டில் இருந்து பலகோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

News March 25, 2025

சவுக்கு சங்கரின் வீட்டின் மீதான தாக்குதல்: திருமா கண்டனம்

image

சவுக்கு சங்கரின் வீட்டின் மீது நடைபெற்ற தாக்குதல் அநாகரிகத்தின் உச்சம் என விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் காவல்துறை நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News March 25, 2025

கடும் நடவடிக்கை தேவை: வைகோ

image

சவுக்கு சங்கரின் வீட்டை தாக்கியவர்கள் தண்டிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். தூய்மை பணியாளர் போர்வையில் அவரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்கள் அராஜகத்தை அரங்கேற்றி இருப்பதாகவும், தமிழகத்தில் இத்தகைய விபரீதங்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். குற்றமிழைத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 25, 2025

காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பது நல்லதா?

image

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி அருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. இந்த பழக்கம் நமது உடல் நலனை கடுமையாகப் பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். காபியில் உள்ள கஃபைன் கார்டிசோலின் அளவு மற்றும் சில ஹார்மோன்களின் அளவையும் அதிகரித்து உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துமாம். எனவே, காபிக்கு பதிலாக மோர் போன்ற நீராகாரங்களை அருந்தலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.

error: Content is protected !!