India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வரும் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி இல்லை என திருநள்ளாறு கோயில் தேவஸ்தானம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026ல் தான் சனிப்பெயர்ச்சி நடக்கிறது என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது. இதனால் வரும் 29ம் தேதி வழக்கமான பூஜைகளே நடக்கும் என அறிவித்துள்ளது. அதேநேரம் திருக்கணிதத்தின்படி வரும் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடப்பதாக ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் CM ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நாளை மறுநாள் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி இதுவரை 250 பேரிடம் விசாரித்துள்ளது.
தன்னை ட்ரோல் செய்ய சிலர் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்வதாக நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். ட்ரோல் செய்யும் மீம்ஸ் பக்கங்களைத் தொடர்பு கொள்ளுமாறு தனது குழுவினரிடம் அறிவுறுத்தியதாகவும், அவர்கள் விசாரித்தபோது, இந்தப் பணியை செய்ய லட்சக்கணக்கில் சம்பளம் பெறுவது தெரியவந்ததாக கூறினார். மேலும், ட்ரோல் செய்வதை நிறுத்த, அதே அளவு தொகையை தருமாறு அவர்கள் தன்னிடம் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
CSK vs MI மேட்சில், ராபின் மின்ஸ்(22) MI அணியில் அறிமுகமாகி, IPLல் விளையாடிய முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையை பெற்றார். ஏழ்மை சோதித்த போதிலும், சிறு வயது முதலே ராபின் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டு இருந்துள்ளார். கடந்த ஆண்டு, GT அணியில் இடம் பெற்ற போதிலும், சாலை விபத்தால் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் ராபின், அடுத்த ஸ்டாராக வருவார் என MI நம்புகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 3வது நாளாக குறைந்ததால், நகை பிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹240 குறைந்து ₹65,480க்கும், கிராமுக்கு ₹30 குறைந்து ₹8,185க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ₹110க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2025ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை டிஆர்பி வெளியிட்டுள்ளது. அதன்படி, 1,915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு ஆகஸ்ட்டில் வெளியிடப்பட்டு, நம்பரில் தேர்வு நடத்தப்படும். அதேபோல், 1,205 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்யும் அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்பட்டு, டிசம்பரில் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், டெட் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது. ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் (37) என்பவரை கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார் எமி ஜாக்சன். தங்களுக்கு பிறந்துள்ள ஆண் குழந்தையுடன் இருக்கும் அழகிய போட்டோவை எமி தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். குழந்தைக்கு ஆஸ்கார் அலெக்சாண்டர் வெஸ்ட்விக் என பெயர் சூட்டியுள்ளனர். இருவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
ஜார்கண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இது பற்றி பேசிய, போக்குவரத்து அமைச்சர் தீபக், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கடந்த ஆண்டே முடிவு செய்யப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறினார். தெலங்கானா, பீஹாரை போல், அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில் சர்வே நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வெயில் வரும் நாள்களில் இன்னும் தீவிரமடையலாம். எனவே பொதுமக்கள் பிற்பகல் நேரத்தில் வெளியே வர வேண்டாம். வெயிலில் மயக்கம் அடைந்து, சுய நினைவை இழந்து இருப்பவர்களை, குப்புற அல்லது மல்லாக்காக படுக்க வைக்க வேண்டும். மருத்துவ ரீதியில் பார்க்கும்போது, இதுபோன்ற நிலையில் இருப்பவர்களை இடது பக்க வாட்டில் படுக்க வைக்கும் முறை தான் சிறந்தது என்று சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.
மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் 40% வரை பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியை, தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பெண்கள் குறைந்தது ₹1,000ல் இருந்து ₹2 லட்சம் வரை FD ஆக முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 7.5% நிலையான வட்டி; அதுவும் காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிட்டு வழங்கப்படும். FDல் உள்ள பணத்தை 40% வரை எடுத்துக்கொள்ளலாம், மார்ச் 31க்கு முன் முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும்.
Sorry, no posts matched your criteria.