News March 25, 2025

சென்னையில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்

image

சென்னை தரமணி அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆண் நண்பருடன் வெளியே சென்ற மாணவியை, போதைப்பொருள் கொடுத்து 7 பேர் கொண்ட கும்பல் மாறி மாறி வன்கொடுமை செய்துள்ளது. இதில், அவருக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த கொடூர மிருகங்களிடம் இருந்து தப்பித்து வந்த மாணவி அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 25, 2025

பார்லிமென்டில் திரையிடப்படும் ‘சவ்வா’!

image

நாக்பூரில் முகாலய மன்னர் அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நடந்த போராட்டம், அதன்பின் நிகழ்ந்த வன்முறை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மராட்டிய மன்னர் சத்ரபதி சம்பாஜி மகராஜின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட ‘சவ்வா’ திரைப்படமே கலவரத்துக்கு காரணம் என மஹாராஷ்டிரா CM பட்னாவிஸூம் விளக்கமளித்திருந்தார். தற்போது பார்லிமென்டில் பிரதமர், அமைச்சர்கள், MPக்களுக்காக வரும் 27ல் ‘சவ்வா’ திரையிடப்படுகிறது.

News March 25, 2025

டாஸ்மாக் வழக்கு: நீதிபதிகள் திடீர் விலகல்!

image

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்திய ED சுமார் ₹1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக கூறியது. அரசு அனுமதியின்றி நடந்த இச்சோதனையை சட்டவிரோதமானதாக அறிவிக்கும்படி TN அரசு ஐகோர்டில் வழக்குத் தொடர்ந்தது. அரசு ஊழியர்களிடம் கடினமாக நடக்கலாமா என கேட்ட நீதிபதிகள் ரமேஷ், செந்தில் அடங்கிய அமர்வு விசாரணையை ஒத்திவைத்தது. இந்நிலையில், திடீரென வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

News March 25, 2025

தொடர்ந்து குறையும் தங்கம் விலை

image

ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை ₹680 குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும், பங்குச் சந்தையும் ஏற்றம் கண்டுள்ளதால் வரும் நாள்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

News March 25, 2025

உங்க ஜிமெயில் இன்பாக்ஸ் ரொம்பி வழிகிறதா?

image

எண்ணற்ற மார்க்கெட்டிங் மெயிலால் ஜிமெயில் இன்பாக்ஸ் நிறைந்து விட்டதா? இந்த சிம்பிள் ட்ரிக் யூஸ் பண்ணுங்க: Browserல் ஜிமெயிலை ஒபன் பண்ணி, இன்பாக்ஸைக் கிளிக் செய்க *Searchல் ‘Unsubscribe’ஐ செலக்ட் செய்யவும் *மார்க்கெட்டிங் மெயில்கள் அனைத்தும் வரும்*’Refresh button’க்கு இடதுபுறத்தில் இருக்கும் செக்பாக்ஸ் கிளிக் செய்யவும் *’Trash’ iconஐ கிளிக் செய்தால் மொத்த மெசெஜும் ‘Trash folder’க்கு சென்றுவிடும்.

News March 25, 2025

சாம்சங் நிறுவனத்தின் CEO காலமானார்!

image

தென் கொரியாவின் மிகப்பெரிய நிறுவனமான சாம்சங்கின் CEO ஹான் ஜாங்-ஹீ (63) ஹார்ட் அட்டாக்கின் காரணமாக காலமானார். டிவி மார்க்கெட்டிங்கில் தனது வாழ்க்கையை தொடங்கிய ஹான், சாம்சங் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார். 2022ல் நிறுவனத்தின் CEOவாக நியமிக்கப்பட்ட அவர், சாம்சங்கின் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ், மொபைல் சாதனப் பிரிவுகளை கவனித்து வந்தார். RIP SIR.

News March 25, 2025

மீண்டும் கூட்டணியா? டெல்லி விரைந்தார் இபிஎஸ்!

image

TNல் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் கூட்டணி கணக்குகள் மாறத் தொடங்கி இருக்கின்றன. பாஜகவுடன் கூட்டணி இல்லை; அதிமுக கொள்கை வேறு, கூட்டணி வேறு என கூறி வந்த இபிஎஸ், இன்று திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். பாஜக முக்கியத் தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிமுக – பாஜக இடையே மீண்டும் கூட்டணி மலரும் என்ற பேச்சு வலுவாக எழுந்துள்ளது.

News March 25, 2025

ATM சேவை கட்டணத்தை உயர்த்த RBI அனுமதி

image

ATMகளில் வங்கிகள் இடையேயான பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்த RBI அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கியின் ATMல் பணம் எடுப்பதற்கான கட்டணம் ₹17ல் இருந்து, ₹2 அதிகரிக்கப்பட்டு ₹19ஆக நிர்ணயிக்க வங்கிகளுக்கு RBI ஒப்புதல் அளித்துள்ளது. ரொக்கம் அல்லாத ATM பரிவர்த்தனைகளான மினிமம் பேலன்ஸ் சோதித்தல், மினி ஸ்டேட்மென்ட் எடுத்தல் ஆகியவற்றுக்கு ₹6ல் இருந்து ₹7ஆக கட்டணம் உயருகிறது.

News March 25, 2025

ஓடிடிக்கு வரும் ஜீவாவின் ‘அகத்தியா’!

image

நடிகர் ஜீவா நடித்துள்ள ‘அகத்தியா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகிறது. ஹாரர் அட்வென்ச்சராக எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை பா.விஜய் இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், ராஷி கன்னா, யோகி பாபு, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி என பலர் நடித்துள்ளனர். வரும் 28 ஆம் தேதி SUN NXT ஓடிடியில் அகத்தியா ரிலீஸாகிறது. படம் பார்த்து கமெண்ட் செய்யுங்கள் மக்களே!

News March 25, 2025

29ஆம் தேதி சனி பெயர்ச்சி இருக்கா? இல்லையா?

image

வரும் 29ம் தேதி சனி பெயர்ச்சியா? இல்லையா? என மக்கள் குழப்பமடைந்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி இல்லை. ஆனால், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 29ஆம் தேதி இரவு 10:07 மணிக்கு சனி பெயர்ச்சி ஆகும். கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு சனி நகரப் போகிறார். இதனால், துலாம், ரிஷபம், கடகம் ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு, பண வரவு போன்ற பல நன்மைகள் கிடைக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!