News March 25, 2025

டிரம்புக்கு பரிசு அனுப்பிய புதின்

image

ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையேயான நட்புறவு நாளுக்கு நாள் வலுவடைகிறது. இம்மாத தொடக்கத்தில் நடந்த சந்திப்புக்குப் பிறகு டிரம்பின் தூதரிடம், அவரது உருவப்படத்தை புதின் பரிசாக வழங்கியுள்ளார். இந்த பரிசைக் கண்டு டிரம்ப், மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது. எப்போதும் எதிரும், புதிருமாக இருந்த அமெரிக்கா-ரஷ்யா உறவு, டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு மேம்பட்டு வருகிறது.

News March 25, 2025

பணப்பிரச்னை அல்ல; இனப்பிரச்னை: ஸ்டாலின்

image

சட்டப்பேரவையில் மும்மொழிக் கொள்கை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய ஸ்டாலின், தமிழகத்திற்கு இருமொழிக் கொள்கையே போதும் என தெரிவித்தார். மாநிலத்தின் சுயாட்சி, உரிமைகளை நிலைநாட்டுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். நிதி தரவில்லை என்பதற்காக இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெரும் கொத்தடிமைகள் அல்ல. மீண்டும் சொல்கிறேன்; இது பணப் பிரச்னை அல்ல; நம் இனப் பிரச்னை என்றார்.

News March 25, 2025

திமுக உடன் கூட்டணியா? பிரேமலதா பதில்

image

மாநிலங்களவை சீட் விவகாரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி திமுக பக்கம் செல்ல தேமுதிக விரும்புவதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, திமுக கூட்டணியில் இல்லாதவர்களிடம் இப்படி கேள்வி கேட்பது சரியா?. திரித்துக் கூறப்படும் செய்திகள், யூகங்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது என்று பொட்டில் அறைந்தது போல் நேரடியாக பதிலளித்துள்ளார்.

News March 25, 2025

நாளை OTTயில் வெளியாகிறது ‘முஃபாசா’

image

‘தி லயன் கிங்’ திரைப்படத்தின் முன்கதையான (Prequel) ‘முஃபாசா’ நாளை OTTயில் வெளியாகவுள்ளது. Jio Hostarல் தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்திய அளவில் வசூல் சாதனை படைத்த இப்படம், OTTயில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

News March 25, 2025

விமானத்தில் தப்ப முயன்ற செயின் பறிப்பு திருடர்கள்!

image

சென்னை திருவான்மியூர் பகுதியில் இன்று காலை ஒரு மணி நேரத்தில் 7 பெண்களிடம் இருந்து 2 இளைஞர்கள் செயின் பறித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரம், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சென்னை ஏர்போர்டுக்குள் விரைந்த போலீஸ், அங்கே டிப்–டாப் உடையில் இருந்த 2 பேரை கைது செய்தது. அவர்கள் வேறு யாருமல்ல; செயின் பறிப்பு கொள்ளையர்கள் தான். விமானத்தில் எஸ்கேப் ஆகும் அளவுக்கு காஸ்ட்லியான திருடர்கள்!

News March 25, 2025

ஆவின் நெய்: அமைச்சர் கொடுத்த அதிரடி பதில்!

image

ஆவின் நெய் உலகத் தரம் வாய்ந்தது. அதனை அமெரிக்கர்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள் என சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மற்ற நெய்களை விட, ₹50 அதிகமாக இருந்தாலும், அமெரிக்கர்கள் ஆவின் நெய்யை தான் விரும்புகிறார்கள் என கூறியுள்ளார். மேலும் ஆவின் மூலம் தரமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

News March 25, 2025

இஸ்ரேல் ராணுவத்தால் தாக்கப்பட்ட ஆஸ்கர் வென்ற இயக்குநர்!

image

ஆஸ்கர் விருது வென்ற பாலஸ்தீன இயக்குநர் ஹம்தான் பல்லால், இஸ்ரேல் ராணுவத்தால் தாக்கப்பட்டு கைதாகி இருக்கிறார். இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனின் ‘வெஸ்ட் பேங்க்’ பகுதியில் இத்தாக்குதல் நடந்துள்ளது. தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ஹம்தான் தற்போது எங்கு இருக்கிறார் என்ற தகவல் இல்லை என்றும் கூறப்படுகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலின் கொடூரங்களை மையமாக கொண்ட ‘No Other Land’ படத்தை ஹம்தான் இயக்கினார்.

News March 25, 2025

அமித்ஷாவை சந்திக்கிறார் இபிஎஸ்?

image

டெல்லியில் இன்று மாலை அமித்ஷாவை இபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டும் உள்ள நிலையில், பேரவைக் கூட்டம் நடைபெற்று வரும் சூழலில் அமித்ஷாவை அவர் சந்திப்பது முக்கித்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குறித்து புகார் அளிக்க சென்றதாக ஒருதரப்பினரும், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக சென்றதாக மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர்.

News March 25, 2025

‘கூகுள்’ பற்றி உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா?

image

கூகுள் தனது ஊழியர்களின் குடும்ப நலனுக்காக செயல்படுத்தும் திட்டங்களால் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஊழியர் இறந்தால், 10 ஆண்டுகளுக்கு அவரது சம்பளத்தில் 50%-ஐ இறந்தவரின் மனைவிக்கு செலுத்துகிறது. அத்துடன், ஒவ்வொரு குழந்தைக்கும் 19 வயது வரை மாதத்திற்கு ₹84,000 வழங்குகிறது. பணியாளரின் குடும்பம் கடினமான காலங்களில் இருக்கும்போது, நிறுவனம் துணை நிற்பது சிறப்பானது என நெட்டிசன்கள் பாராட்டுகின்றனர்.

News March 25, 2025

153 ஆண்டுகால சாதனை படைத்த ரொனால்டோ!

image

153 ஆண்டுகால கால்பந்து விளையாட்டில், நட்சத்திர ஆட்டக்காரர் ரொனால்டோ மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். சர்வதேச தேச போட்டிகளில் அவர் 218 போட்டிகளில் விளையாடி, இதுவரை 132 வெற்றிகளை பதிவு செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 200 போட்டிகளுக்கு மேல் விளையாடிய ஒரே வீரரும் அவரே. இதற்கு முன்னர் ஸ்பெயினின் செர்ஜியோ ராமோஸ் 180 போட்டிகளில் விளையாடி 131 வெற்றிகளை பதிவு செய்திருந்தார்.

error: Content is protected !!