India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாழ்க்கை மீண்டும் ஒரு காதல், ரிலேஷன்ஷிப் வாய்ப்பைக் கொடுத்தால், அதை ஏற்க தயாராக இருப்பதாக நடாஷா ஸ்டான்கோவிக் தெரிவித்துள்ளார். சரியான நேரம் வரும் போதுதான் இருவருக்குள்ளான உறவு மலரும் எனவும், வாழ்க்கை கொண்டு வருபவற்றை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். செர்பியன் மாடலான நடாஷா, ஹர்திக் பாண்டியாவை கடந்த 2020ல் திருமணம் செய்த நிலையில், 2024ல் இருவரும் பிரிந்தனர்.
தமிழ்நாட்டில் தற்போது 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. அதோடு, மேலும் 2 மாநகராட்சிகளை உருவாக்க இருப்பதாக, அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். அதன்படி, பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படவுள்ளன. மேலும், நகராட்சிகளின் எண்ணிக்கையையும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
2026 தேர்தலுக்கு, அதிமுக – தவெக கூட்டணி அமைக்கும் என செய்திகள் வெளியாகின. தொகுதி பங்கீடு பற்றி பேசியதாகவும் கூறப்பட்டது. ஆனால், இன்று இபிஎஸ் டெல்லி சென்றுள்ளதை அடுத்து, அதிமுக – பாஜக கூட்டணி அமையும் எனப்படுகிறது. இதனால், தவெக – அதிமுக கூட்டணி இல்லையா என்ற கேள்வி எழுகின்றன. அப்படி திமுக கூட்டணியும், அதிமுக – பாஜக கூட்டணி அமைத்தும், விஜய் தனியாகவும் 2026 தேர்தலில் போட்டியிட்டால், யாருக்கு லாபம்?
பிரபல கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹூசைனியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த இரங்கல் பதிவில், அவரிடம் தான் கராத்தே பயிற்சி பெற்ற நினைவுகளை பவன் கல்யாண் பகிர்ந்து கொண்டுள்ளார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நள்ளிரவு 1.45 மணியளவில் ஹுசைனி காலமானார். அவருக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நம்மூரில் மைனா, துப்பாக்கி படங்களை அடிக்கடி டிவியில் போட்டதற்கே டென்ஷனானவர்கள் அதிகம். ஆனால், தெலுங்கில் ‘அத்தடு’ என்ற படத்தை ஒரே சேனலில் 1500 முறை ஒளிபரப்பி உள்ளனர். 2005ல் வெளியான மகேஷ் பாபுவின் இந்த படம், அந்த ஊர் மக்களுக்கு அவ்வளவு பிடிக்கும் போல. இத்தகவலை Siasat ஊடகம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் TRP நன்றாகவே வந்துள்ளதாம். இந்த ரெக்கார்டை நம் ஊரில் எந்தப் படமாவது பிரேக் பண்ணுமா?
நகர்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் மே மாதம் நடத்தப்படவுள்ளது. மொத்தம் காலியாகவுள்ள 448 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளும் தொடங்கியுள்ளன. சென்னையில் 4 வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது.
பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் மனைவி சோனாலி சாலை விபத்தில் படுகாயமடைந்தார். மும்பை- நாக்பூர் நெடுஞ்சாலையில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்த முழு தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தாலும், கொரோனா காலத்தில் மக்களுக்கு நல உதவிகளை செய்த ஹீரோ சோனுவின் குடும்பத்திற்கா இப்படி என ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் 2025-ன் வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து இர்ஃபான் பதான் நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. IND-வின் முன்னாள் வீரர் பதான், ஓய்வு பெற்றது முதல் பல ஆண்டுகளாக இந்தி மொழியில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக, அவரின் வர்ணனை சில வீரர்களுக்கு எதிராகவும், ஒரு சார்புடையதாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்தது. இதனால் அவர் வர்ணனையாளர் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே CM ஸ்டாலின் குறிப்பிட்டு வருகிறார். அப்போது முதலே பாஜக, திமுகவுக்கு இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், பேரவையில் இன்று பேசும்போது ஒன்றிய அரசு என்பதற்கு பதில் மத்திய அரசு என 3 முறை குறிப்பிட்டு பேசியுள்ளார். ஒருவேளை தனது கருத்தை மாற்றிக் கொண்டாரா? இல்லையென்றால் குழம்பிவிட்டாரா? தெரியவில்லை.
சொத்து வரி உயர்வு குறித்து சட்டப்பேரவையில் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கே.என்.நேரு, அதிமுக ஆட்சியில் 50%, 100%, 200% என சொத்து வரி உயர்த்தப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 25%, 50%, 100% என்ற அளவில் அதிகரிக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார் எனக் கூறிய அவர், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.