News March 25, 2025

BREAKING: சேனலை மூடுகிறார் சவுக்கு சங்கர்

image

தான் நடத்தும் ’சவுக்கு மீடியா’ யூடியூப் சேனலை மூடுவதாக சவுக்கு சங்கர் அறிவித்துள்ளார். இரு தினங்களுக்கு முன் அவரது வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். தாயின் உயிரை பணயம் வைத்து சேனல் நடத்த விருப்பமில்லை என்று கூறியுள்ள அவர், இது இந்த சமூகத்தின் தோல்வி என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?

News March 25, 2025

டெல்லிக்கு ₹1 லட்சம் கோடிக்கு பட்ஜெட்!

image

டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்த நிலையில், முதல் முறையாக அம்மாநில பேரவையில் CM ரேகா குப்தா நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சுமார் ₹1 லட்சம் கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், டெல்லியில் நீடித்திருந்த ஊழல் மற்றும் திறனற்ற சகாப்தம் இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறினார். கடந்த நிதியாண்டில் தாக்கல் செய்த பட்ஜெட்டை விட, இது 31.5% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2025

கொடூர மனைவிகளுக்கு எதிராக ‘புருஷா கமிஷன்’ வருமா?

image

சமீபகாலமாக, குடும்ப பிரச்னைகளில் ஆண்களும் பாதிக்கப்படும் செய்திகள் வருகின்றன. ஆண்களை பாதுகாக்க யாருமே இல்லையா என்பவர்களுக்கு, ‘புருஷா கமிஷன்’ பற்றி தெரியுமா? கொடூரமான மனைவிகளிடம் இருந்து காக்க, 2018ல் ஆந்திர மகிளா கமிஷனின் தலைவி ராஜகுமாரி இக்கோரிக்கையை வைத்தார். ஆனால், மாதர் சங்கங்கள் இதை எதிர்க்க, கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது. இப்போது அந்த சங்கத்திற்கு உயிர் கொடுக்கலாமே! என்ன சொல்றீங்க?

News March 25, 2025

கூலிப்படையை ஏவி கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி

image

உ.பி. மீரட்டில் காதலனுடன் சேர்ந்து கணவரை பெண் கொலை செய்த வழக்கின் பரபரப்பு அடங்குவதற்குள், அதே போன்ற மற்றொரு சம்பவம் அதே மாநிலத்தில் நடந்துள்ளது. ஆரையா நகரில் திருமணமாகி 15 நாட்களே ஆன நிலையில் கணவர் திலீப்பை கொலை செய்த மனைவி பிரகதி, காதலருடன் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணத்திற்கு முன்பே வேறொருவரை காதலித்து வந்த அவர், ரூ.2 லட்சம் கொடுத்து கூலிப்படை மூலம் கணவனை தீர்த்துக் கட்டியுள்ளார்.

News March 25, 2025

தலைசிறந்த விஞ்ஞானி மரணம்: மத்திய அமைச்சர் இரங்கல்

image

நாட்டின் தலைசிறந்த விவசாய- தோட்டக்கலை விஞ்ஞானி கிருஷ்ண லால் சத்தா(88) காலமானார். காய்கறி, பழங்கள் உற்பத்தியில் உலகின் 2-வது பெரிய நாடாக இந்தியா வளர இவர் முக்கிய காரணமாவார். தேசிய விவசாய ஆய்வு மையத்தில் பணியாற்றினார். இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ‘நாட்டுக்கு நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு என்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்’ எனக் குறிப்பிட்டார்.

News March 25, 2025

அந்த சீன் எல்லாம் என்கிட்ட நடக்காது…!

image

டெல்லி அணி நேற்றைய போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற நிலையில், லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிடம் சிக்கிக் கொண்டதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். அதற்கு காரணம், கடந்த சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த KL ராகுலை, கோயங்கா வசைபாடியதுதான். ஆனால், நேற்றைய போட்டிக்குப் பிறகு பண்ட் மீது கோயங்கா கோபப்படவில்லை. இருவரும் ஜாலியாக பேசிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

News March 25, 2025

ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

image

தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நெல்லை டிஐஜியாக இருந்த மூர்த்தி, ராமநாதபுரம் டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை டிஐஜியாக சந்தோஷ் ஹதிமானி நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் டிஐஜி அபினவ் குமார், மதுரை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் 5 துணை காவல் ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News March 25, 2025

ஆளுநரை புகழ்ந்த பார்த்திபன்; விமர்சித்த வன்னியரசு!

image

நடிகர் பார்த்திபன் ஆளுநர் ஆர்.என்.ரவியை புகழ்ந்து பேசியது தவறு என விசிகவின் வன்னியரசு விமர்சித்துள்ளார். ஆளுநரின் தமிழர் விரோத மற்றும் தமிழ் பண்பாட்டு விரோதப் போக்கு பெருகிக் கொண்டே போகிறது. தமிழ் பண்பாட்டை அழித்தொழிக்க முயற்சிக்கும் அப்படிப்பட்டவர்களை தங்களை போன்ற ஆளுமைகள் புகழ்வது தமிழகத்திற்கு இழைக்கும் துரோகமில்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 25, 2025

+2 தேர்வுகள் முடிந்தது. விட்டாச்சு லீவு!

image

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கிய ப்ளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று மதியத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் இருந்து மாணவ – மாணவிகள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வெளியேறினர். இதனையடுத்து, இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. இனி, படிப்படியாக அனைத்து வகுப்பினருக்கும் விடுமுறை தொடங்கும்.

News March 25, 2025

₹2,300 கோடி மதிப்பிலான 55 பொருள்களுக்கு வரி குறைப்பு?

image

₹2,300 கோடி மதிப்பிலான 55 USA இறக்குமதி பொருள்களுக்கான வரியை குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்ப் அறிவிப்பின்படி, ஏப்ரல் 2 முதல் அமலுக்கு வரும் புதிய USA வரி விதிப்பு முறையால், ₹6,600 கோடி அளவுக்கு இந்திய இறக்குமதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இரு நாட்டு வர்த்தகத்தை சுமூகமாக பேண, இந்த வரி குறைப்பை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!