News March 25, 2025

மரண பயமா? ஹுசைனி பரிந்துரைத்த 3 புத்தகங்கள்!

image

எப்படிப்பட்ட வீரனும் மரணத்தைக் கண்டு பயப்படுவது உண்டு. ஆனால், கராத்தே வீரர் ஷிகான் ஹுசைனி, சாவை கண்டும் சிறிதும் அஞ்சாமல் இருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில், மரணத்தை துச்சமாக அவர் மதிக்க 3 புத்தகங்களே காரணம் என ஹுசைனி தனது கடைசி வீடியோவில் கூறுகிறார். DIE, அருண் செளரி எழுதிய PREPARING FOR DEATH, வேதியியலில் நோபல் பரிசு பெற்ற வெங்கி எழுதிய WHY WE DIE ஆகிய புத்தகங்கள்தான் அவை.

News March 25, 2025

APPLY NOW: ராணுவ கல்லூரியில் சேர வாய்ப்பு

image

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 2026 ஜனவரி பருவத்திற்கான 8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நடந்து வருகிறது. மார்ச் 31ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்ப படிவங்களை ‘தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை 600 003’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலதிக தகவல்களுக்கு <>இங்கே<<>> க்ளிக் செய்யவும்.

News March 25, 2025

தமிழ்நாட்டில் ஜனசேனா? – பவன் போடும் கணக்கு!

image

ஆந்திர துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், தமிழ்நாட்டில் தனது கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்துள்ள அவர், இங்குள்ள தெலுங்கு பேசும் மக்களின் ஓட்டுகளை பெற பிளான் போட்டுள்ளாராம். திமுகவில் இருந்து சஸ்பெண்ட்டான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தெலுங்கு சமுதாய தலைவர்களிடம் பவன் தரப்பில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

News March 25, 2025

தேவநாதன் யாதவ் சொத்துக்கள் ஏலம்?

image

உங்கள் சொத்துக்களை ஏலம் விட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கலாமா? என்பதற்கு பதிலளிக்கும்படி, தேவநாதன் யாதவிற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி ₹24.50 கோடி மோசடி செய்ததாக அரசியல்வாதியான தேவநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது முதல் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது 2ஆவது முறையாக ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், கோர்ட் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

News March 25, 2025

8வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்

image

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளத்தை உயர்த்துவதற்கான 8வது ஊதியக் குழு விரைவில் அமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இக்குழுவை அமைப்பது தொடர்பான விதிகளுக்கு, மத்திய அமைச்சரவை அடுத்த மாதம் (ஏப்ரல்) ஒப்புதல் அளிக்கவுள்ளது. அதன் பிறகு, 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு, ஊழியர்களின் சம்பள உயர்வை நிர்ணயிக்கும். இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

News March 25, 2025

நாகரிக சமூகம் இதை ஏற்றுக் கொள்ளுமா? முத்தரசன்

image

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சம்பவத்தை, எந்த நாகரிக சமூகமும் ஏற்றுக் கொள்ளாது என CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்ட நடவடிக்கையை எடுக்காமல், வீட்டில் மனித, சாக்கடை கழிவுகளை கொட்டுவது அநாகரிகத்தின் உச்சம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவரையும் தப்ப விடக்கூடாது எனவும் அரசை வலியுறுத்தியுள்ளார்.

News March 25, 2025

தூய நரையிலும் காதல் மலருதே… ❤️❤️

image

பெற்றோரை எதிர்த்து வாழ்க்கையைத் தொடங்கிய தம்பதி, 64 ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆச்சரியமாக இருக்கிறதா? குஜராத்தில் இருவேறு சமூகத்தை சேர்ந்த ஹர்ஸ், மிருது இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர். 64 ஆண்டுகளுக்கு பிறகு, குழந்தைகள், பேரக்குழந்தைகள் சேர்ந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஹர்ஸ் – மிருது தம்பதியின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவை கலக்குகின்றன.

News March 25, 2025

டிரம்ப் எச்சரிக்கையால் இந்தியாவிற்கு புதிய சிக்கல்

image

வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வாங்கும் நாடுகள், USAவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு 25% வரி செலுத்த நேரிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். இது இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் அதிகம் வாங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது. டிரம்பின் அறிவிப்பால், இந்திய இறக்குமதிகளுக்கு கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் அபாயம் உள்ளது.

News March 25, 2025

ஹுசைனின் நிறைவேறாத கடைசி ஆசை

image

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஹுசைனி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, நடிகர் விஜய்யை சந்திக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அவரை சந்தித்து வில்வித்தையை தமிழகம் முழுவதும் பரப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக அவர் இன்று காலமான நிலையில், கடைசி ஆசை நிறைவேறாமலே உயிர் பிரிந்துவிட்டது.

News March 25, 2025

ரோஹித், பாண்டியா எதிர்ப்பு.. ஆனாலும் அசராத தோனி!

image

ஐபிஎல்லில் Impact Player விதி முதலில் அமல் செய்யப்பட்ட போது, அது தேவையில்லாதது என நினைத்ததாக தோனி தெரிவித்துள்ளார். ஆனால் அதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பேட்ஸ்மென்கள் ஆக்ரோஷமாக விளையாட இந்த விதி ஊக்குவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இப்படிதான் டி20 ஃபார்மெட் கிரிக்கெட் மேம்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், ரோஹித், பாண்டியா இந்த விதியினை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!