India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அஜித்தின் அடுத்த படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாக காட்டுத் தீ போல் செய்தி பரவி வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் கூறியிருந்தார். இந்நிலையில், கார் ரேஸை முடித்துவிட்டு அஜித் தமிழ்நாடு திரும்பியதும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் – தனுஷ் காம்போ எப்படி இருக்கும்?
எத்தனை விழிப்புணர்வு கொடுத்தாலும், இன்னமும் பலர் சமையலுக்கு அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் நம் உணவிலும் அதிக அளவிலான அலுமினிய துகள்கள் கலக்கின்றன. இதனை உட்கொள்வதால் நமது நரம்பு மண்டலங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, கேன்சரும் வரக்கூடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், எலும்புகள், கிட்னி, கல்லீரல் ஆகியவற்றிலும் கூட இது பாதிப்பை ஏற்படுத்துமாம். SHARE IT.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் மலையேறிய பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த பக்தர் சிவா, மலையேறி சிவனை தரிசித்துவிட்டு, திரும்புகையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். வெயிலின் தாக்கத்தினாலும், முறையான மலையேறும் பயிற்சி இல்லாததாலும் பக்தர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
டெல்லியில் பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்தார். கூட்டணி கட்சியான அவர், அதிமுகவை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி செய்வதாகத் தெரிகிறது. இன்று மாலை EPS அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், ஜி.கே.வாசனின் சந்திப்பு அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.
வரும் ஞாயிறு முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறையாகும். மார்ச் 29 (சனி), மார்ச் 30 (ஞாயிறு), மார்ச் 31 (திங்கள்) ரம்ஜான் என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏப்.1 (செவ்வாய்) வங்கிக் கணக்கு முடிவு நாள் என்பதால் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை நாளாகும். இதையும் சேர்த்துக் கொண்டால் மொத்தம் 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த லீவுல உங்கள் பிளான் என்ன?
GT – PBKS அணிகள் அகமதாபாத் மைதானத்தில் சற்றுநேரத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கொல்கத்தாவுக்காக கடந்த முறை கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பஞ்சாப் அணி களமிறங்கவுள்ளது. கில் தலைமையில் குஜராத் அணி விளையாடவுள்ளது. இரு அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் மோதிய நிலையில், குஜராத் 3 முறையும், பஞ்சாப் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய ஆட்டத்தில் வெல்லப் போவது யார்?
மனைவியுடன் இருந்த அந்தரங்க தருணங்களின் வீடியோக்களை, அவரின் ஒப்புதலின்றி மற்றவர்களுக்கு பகிர கணவனுக்கு எந்த உரிமையும் கிடையாது என அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும், கணவன் மீது கிரிமினல் வழக்கு நடத்தவும் அனுமதித்துள்ள ஐகோர்ட், திருமணம் செய்து கொண்டதால் மனைவியின் உரிமையாளராக கணவன் மாறிவிட முடியாது, மனைவியின் தனி உரிமைகளையும் இது எவ்விதத்திலும் பறிக்கவும் முடியாது என்று தீர்ப்பளித்தது.
கோடைக்காலத்தில் குளிர்ந்த நீரைக் குடிக்க பலரும் விரும்புவர். ஆனால், ஃபிரிட்ஜில் இருந்து நேரடியாக குளிர்ந்த நீரை குடித்தால் உடலில் பிரச்னை ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அடிக்கடி குளிர்ந்த நீரை பருகும்போது செரிமான பிரச்னை, ஜலதோஷம், பல் வலி, தலைவலி உள்ளிட்டவை ஏற்படும் என எச்சரிக்கின்றனர். உடலில் நீரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். SHARE IT.
மாத ஊதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக, ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதிய வருமான வரி மசோதா மார்ச் 13ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம், வரும் மழைக்கால கூட்டத்தொடரில் நடைபெறும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
விஜய் அரசியலில் நுழைந்ததால் சினிமாவில் அவரது இடத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்துச் செல்லும் வகையில், கோட் படத்தில் ‘துப்பாக்கிய பிடிங்க சிவா’ என்ற வசனம் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது. விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன், பொங்கலை ஒட்டி 2026 ஜன.9-ல் வெளியாகிறது. அதே நேரத்தில், சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தையும் பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். விஜய் உடனான மோதலை தவிர்ப்பாரா SK?
Sorry, no posts matched your criteria.