India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சோர்வு, தலைச்சுற்றல், கை, கால்கள் நடுக்கம், இருமல், சளி போன்றவற்றால் பலரும் கடந்த ஒரு வாரமாக அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால், பருவகாலம் மாற்றம் மற்றும் சூரிய வெப்ப தாக்கம் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். உடலில் நீர்ச்சத்து குறையவிடாமல் பார்த்துக் கொள்ளவும், மிகவும் முடியவில்லை என்றால் டாக்டரை அணுகவும் அறிவுறுத்துகின்றனர். உங்களுக்கும் இதே ஃபீலிங் இருக்கா?
2009ல் LTTEக்கு எதிரான போரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக, இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகள் உட்பட 4 பேருக்கு இங்கிலாந்து பொருளாதார தடை விதித்துள்ளது. முன்னாள் ராணுவ தளபதிகள் ஷவேந்திர சில்வா, கரண்ணகோடா, ஜகத் ஜெயசூர்யா, LTTEயில் இருந்து பின்னர், இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டு துணை அமைச்சரான விநாயகமூர்த்தி ஆகியோர் அந்நாட்டிற்கு வர தடை மற்றும் அவர்களது சொத்துக்களை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் EPS சந்தித்து வருகிறார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இதில், தம்பிதுரை, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகிய அதிமுக முக்கியத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பாஜகவுடனான கூட்டணிக்கு மீண்டும் அச்சாரமிடும் விதமாக இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது.
எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள திருமாவளவன், 5 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து நீட் தேர்வுகளிலும் முறைகேடு நடைபெற்றதா என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக குறிப்பிட்டுள்ளார். ‘நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சிபிஐ விசாரணை நடத்த மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டது’ என மத்திய இணையமைச்சர் மஜும்தார் பதில் அளித்ததாகவும் திருமா தெரிவித்துள்ளார்.
குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களை பதம்பார்த்த பஞ்சாப் அணி 244 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக 97 ரன்கள் குவித்தார். குஜராத் அணி தரப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். எந்த அணி வெல்லும்? உங்கள் கணிப்பு என்ன?
நடிகர் மனோஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட மனோஜ், சிறு வயதில் மறைந்தது பேரதிர்ச்சியளிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குஜராத் அணியில் விளையாடிவரும் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதுவரை 122 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் யுஸ்வேந்திர சஹால், 205 விக்கெட்டுகளுடன் இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் இல்லாமல் நம் சமையலே இல்லை. இந்நிலையில், ஈரோடு சந்தையில் ஒரே மாதத்தில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ₹1500 உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் வரை குவிண்டால் ₹13,500 என்று விற்பனையான மஞ்சள் விலை, தற்போது ₹15,000ஆக உயர்ந்துள்ளது. இதனால், சில்லரை சந்தையில் கிழங்கு மஞ்சள், மஞ்சள் தூள் ஆகியவற்றின் விலை உயர வாய்ப்புள்ளதால், பொதுமக்களுக்கு கஷ்டம் தான்.
கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று நிறைவடைந்தது. மொத்தம் 8.21 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதியுள்ளனர். இந்நிலையில், இந்த பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு மே 5இல் வெளியாகவுள்ளது.
புதன் பகவான் வரும் 29ஆம் தேதி மீன ராசியில் சஞ்சரிப்பதால் 3 ராசிகளுக்கு ராஜ யோகம் அடிக்கப் போகிறது. 1) விருச்சிகம்: புதிய சொத்து வாங்குவீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்தி வரும். 2) கும்பம்: நிதி நிலைமை மேம்படும். தொட்ட காரியம் வெற்றியில் முடியும். புதிய முதலீடு லாபம் கொடுக்கும். 3) மிதுனம்: புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வு வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
Sorry, no posts matched your criteria.