News March 26, 2025

பாஸ் என்கிற பாஸ்கரன் 2ஆம் பாகம் அப்டேட்

image

15 ஆண்டுகளுக்கு பிறகு ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் 2ஆம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் தானும், ஆர்யாவும் ஈடுபட்டுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதற்காக நல்ல கதையை உருவாக்கி உள்ளதாகவும், ஆர்யா- நயன்தாரா- சந்தானம் காம்பினேஷன் மீண்டும் அமைந்தால் செம்மையாக ஒர்க் அவுட் ஆகும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனால், சந்தானத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

News March 26, 2025

ராசி பலன்கள் (26.03.2025)

image

➤மேஷம் – நன்மை ➤ரிஷபம் – செலவு ➤மிதுனம் – ஆதாயம் ➤கடகம் – சுகம் ➤சிம்மம் – பணிவு ➤கன்னி – புகழ் ➤துலாம் – தாமதம் ➤விருச்சிகம் – லாபம் ➤தனுசு – அச்சம் ➤மகரம் – பகை ➤கும்பம் – ஆதரவு ➤மீனம் – வெற்றி.

News March 26, 2025

பெண்கள் அதிகம் வேலை செய்யும் மாநிலம் எது?

image

ஒப்பந்த தொழில்களில், பெண்கள் அதிகம் வேலை செய்யும் மாநிலமாக மகாராஷ்டிரா (28.7%) முதலிடத்திலும், தமிழ்நாடு (14.2%) இரண்டாவது இடத்திலும் இருப்பது TeamLease நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தலைமைப் பொறுப்புகளை வகிக்கும் பெண்கள் விகிதம் 19% குறைந்துள்ளது. 46% பெண்கள் தொடக்கநிலை ஊழியர்களாக இருப்பதாகவும், வேலைவாய்ப்பின்மை 2.9%லிருந்து 3.2% அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

News March 26, 2025

அமித் ஷாவுடன் 2 மணிநேரமாக இபிஎஸ் பேச்சு!

image

டெல்லிக்கு இன்று சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இரவு 8 மணியளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை, 2 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது. முதலில் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோருடன் அமித் ஷாவை சந்தித்த இபிஎஸ், தற்போது தனியாக அவருடன் பேசி வருகிறார். மரியாதை நிமித்தமான சந்திப்பு 2 மணி நேரமாகவா நீடிக்கும் என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

News March 26, 2025

ரேஷன் அட்டைதாரர்களே.. உடனே பண்ணுங்க

image

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் கை ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் அட்டை ரத்தாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக கை ரேகைப் பதிவு நடைபெற்று வந்தாலும், இன்னும் பலர் பதிவு செய்யாமல் உள்ளனர். இதனையடுத்து, வரும் 31ஆம் தேதி அதற்கான கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்கள் ரேகை பதிவாகியிருக்கிறதா என்று செக் பண்ணிக்கோங்க.

News March 26, 2025

நடிகராக விரும்பாத மனோஜ்…!

image

தந்தை பாரதிராஜா இயக்கத்தில் முதன்முதலாக தாஜ்மஹால் படத்தில் நடித்தபோது நடந்த சம்பவத்தை பழைய பேட்டி ஒன்றில் <<15885902>>மனோஜ்<<>> நினைவுகூர்ந்தார். அப்போது, ‘அப்பாவுக்கு என்னை நடிகராக்கி பார்க்க ஆசை இருந்தது. ஆனால், நடிகராக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை’ என அவர் கூறினார். கொஞ்சமும் இஷ்டம் இல்லாமல்தான் தாஜ்மஹால் படத்தில் நடித்ததாகவும் மனோஜ் தெரிவித்தார்.

News March 26, 2025

‘ஆசை’ பட பாணியில் அதிர்ச்சி… கம்பி எண்ணும் கணவர்!

image

அஜித்தின் ஆசை படத்தில் மனைவியின் தங்கை மீது மோகம் கொண்ட பிரகாஷ்ராஜ், மனைவியை கொலை செய்வார். அதே போன்ற சம்பவம் உ.பி.யில் நடந்துள்ளது. திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த அங்கித் குமார், தனது மனைவியின் தங்கையை மணக்க ஆசைப்பட்டுள்ளார். இதற்கு இடையூறாக இருந்த மனைவி கிரணை நண்பர் உதவியுடன் அவர் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளது. கண்ணை மறைத்த ஆசையால் அங்கித் கம்பி எண்ணுகிறார்.

News March 25, 2025

ஜீரோக்களில் ஹீரோ: மோசமான சாதனை படைத்த மேக்ஸ்வெல்!

image

பஞ்சாப் அணியில் விளையாடிவரும் மேக்ஸ்வெல் இன்றைய ஆட்டத்தில் கோல்டன் டக் அவுட் ஆனார். இதன்மூலம், ஐபிஎல் தொடர்களில் அதிகமுறை(19) டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக அவர் மாறியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் மும்பை வீரர் ரோகித் சர்மா (18), முன்னாள் ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக்(18) ஆகியோர் உள்ளனர். இந்த சாதனையை யார் முறியடிப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

News March 25, 2025

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி வேண்டும்: திருமா

image

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியைப் பின்பற்ற வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மெக்வாலிடம் திருமாவளவன் கோரிக்கை அளித்து வலியுறுத்தினார். 2018 முதல் நியமிக்கப்பட்ட 715 ஐகோர்ட் நீதிபதிகளில், SC- 22, ST- 16, OBC-89, சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த 37 பேர் மட்டுமே உள்ளதாகவும், இந்த அப்பட்டமான புறக்கணிப்பு பன்முகத் தன்மைக்கு சவாலாக உள்ளதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

News March 25, 2025

தொடர் விடுமுறை: குவிந்த கூடுதல் பஸ்கள்!

image

ரம்ஜான் பண்டிகை வரும் 31ஆம் தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய சனி, ஞாயிறும் விடுமுறை என்பதால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவுள்ளனர். இவர்களின் வசதிக்காக, கிளாம்பாக்கத்தில் இருந்து 990 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல, கோயம்பேட்டில் இருந்து தி.மலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 100 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!