India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IPLல் இன்று RR – KKR அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில், KKR RCBயிடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும், RR 44 ரன்கள் வித்தியாசத்தில் SRHயிடமும் தோல்வி அடைந்தன. இதனால், 2 அணிகளும் முதல் வெற்றியை குறிவைத்துள்ளன. போட்டி நடக்கும் கவுகாத்தி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. மேலும், 2 அணியும் சரிசம பலத்துடன் இருப்பதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. இன்று யார் வெற்றி பெறுவார்கள் என நினைக்கிறீர்கள்?
பெண்ணின் மார்பைப் பிடிப்பதோ, ஆடையை கிழிப்பதோ பாலியல் வன்கொடுமை அல்ல என சிறார் பாலியல் தாக்குதல் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் எனவும் கோரியிருந்தனர். இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக, தாமாக முன் வந்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனராக கடந்தாண்டு ஜூலையில் பொறுப்பேற்ற அருண் ஐபிஎஸ், ஓராண்டுக்குள் 4ஆவது என்கவுன்டரை நடத்தியுள்ளார். ரவுடிகள் திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி, ராஜா ஆகியோர் வரிசையில், நள்ளிரவில் செயின் பறிப்பு கொள்ளையன் <<15888455>>ஜாபர் குலாம் ஹூசைன்<<>> என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார். இதனை பலர் வரவேற்ற நிலையில், கமிஷனர் அருணை சிலர் விமர்சித்தும் வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
பஞ்சாப் வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி மெகுல் சோக்ஷி, பெல்ஜியத்தில் தஞ்சமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை பெல்ஜியம் அரசுடன் இணைந்து இந்திய அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே வழக்கில் தேடப்பட்டு வரும் அவரது உறவினரான நிரவ் மோடியும் விரைவில் லண்டனில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளார்.
அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கருப்புசாமி பாண்டியன் (76) உடல்நலக்குறைவால் காலமானார். MGR காலம் தொட்டு அ.தி.மு.கவில் பணியாற்றிய இவர் ‘கானா’ கருப்பசாமி பாண்டியன் என அழைக்கப்பட்டார். அதிமுகவில் நெல்லை மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய இவர், அதிமுகவிலிருந்து விலகி 2006 – 2011 தென்காசி தொகுதியில் திமுக MLAஆக இருந்தார். பின்னர், மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
எம்ஜிஆர் காலத்தில் இருந்து அரசியலில் ஈடுபட்டுள்ள திருப்பரங்குன்றம் MLA ராஜன் செல்லப்பா, அதிமுகவில் தனக்கு உரிய அங்கீகாரம் இல்லததால் பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை; அதற்கான அவசியமும் இல்லை. தேவையில்லாமல் திட்டமிட்டு இதுபோன்ற வதந்தி பரப்பப்படுவதாக விளக்கமளித்துள்ளார்.
அரசு பஸ்ஸில் ஏப்.1- ஜூன் 15 வரை புக் செய்து பயணிப்பவர்களுக்கு, இலவச பயண சலுகைகள் வழங்கப்பட உள்ளன. சிறப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்து, முதல் பரிசை வெல்லும் 25 பேருக்கு, வரும் ஜூலை 1 முதல் ஜூன் 30 2026 வரை, அனைத்து அரசு முன்பதிவு பஸ்களிலும் 20 முறை இலவசமாக பயணிக்கலாம். 2ஆம் பரிசு – (25 பயணிகள்) 10 முறை, 3ஆம் பரிசு – (25 பயணிகள்) 5 முறை இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
PBKS அணிக்கு எதிரான ஆட்டத்தில் GTல் தமிழக வீரர்களே சிறப்பாக செயல்பட்டனர். சாய் கிஷோர் 4 ஓவர்களில் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார். அதேபோல, 244 ரன்களை துரத்திய போது, 41 பந்துகளில் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் சாய் சுதர்ஷன் 74 ரன்களை விளாசினார். அவர் இன்னும் கொஞ்சம் விளையாடி இருந்தால், GT வெற்றி பெற்று இருக்குமோ என்னவோ. யாரெல்லாம் இவர்களின் ஆட்டத்தை பாத்தீங்க!
சிறுபான்மை மக்களுக்காக தான் செய்ததை திமுகவால் கூற முடியுமா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்துக் கட்சிகளிலும் சிறுபான்மை தலைவர்கள் இருப்பதாகவும், திமுக மட்டுமே முஸ்லிம்களுக்கு நல்லது செய்வதை போல பொதுமக்களை ஏமாற்றுவதாகவும் விமர்சித்துள்ளார். இதுவரை பாஜக கூட்டணி இஸ்லாமிய மக்களுக்கு எதிராக எந்த விதத்திலும் செயல்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோடைக்காலத்தில் சர்பத், ஜூஸ் போன்றவற்றில் ஊற வைத்த பாதாம் பிசினை சேர்த்துக் குடிப்பதால் உடல் குளிர்ச்சியடையும். வடமாநிலங்களில் பிரசவமான பெண்களுக்கு கோந்து லட்டு கொடுப்பது வழக்கம். இது பெண்களின் உடல் வலிமைக்கும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. இதை எந்த வயதினரும் எடுத்து கொள்ளலாம். ஆனால் அடிக்கடி சளி, வீஸிங் பிரச்னைகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு பாதாம் பிசினை கொடுப்பதை தவிர்க்கலாம்.
Sorry, no posts matched your criteria.