India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக மக்களின் பிரச்னைக்காகவே அமித் ஷாவை சந்தித்ததாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இருமொழிக் கொள்கை விவகாரம், தொகுதி மறுசீரமைப்பு, டாஸ்மாக் முறைகேடு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தே அமித் ஷாவிடம் பேசியதாக கூறினார். 45 நிமிடங்களும் தமிழகத்தில் கிடப்பில் இருக்கும் திட்டங்கள் குறித்தே விளக்கமாக எடுத்துரைத்ததாக கூறினார்.
சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் சேர்ந்துகொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்று 2 நாளுக்கு முன் கூட, இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்த சூழலில் அமித்ஷா உடனான சந்திப்பு மூலம் அதிமுக – பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி எனத் தெரிகிறது. ஆனால் பாஜக கூட்டணியில் இருக்கும் டிடிவி (அமமுக), ஓபிஎஸ் ஆகியோர் குறித்து எந்த தகவலும் இல்லை. அவர்களை பாஜக எப்படி கையாளப் போகிறது என்ற கேள்வி எழுகிறது.
சென்னையில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ஜாபர் பற்றி புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஓசூர் பகுதிகளில் மட்டும் 12 நகை பறிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர் என போலீஸ் தெரிவித்துள்ளது. 6 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடந்த வழிப்பறி சம்பவங்களிலும் தேடப்பட்ட குற்றவாளி என கூறப்படுகிறது. பல மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் ஜாபர் மீது நிலுவையில் இருப்பதாகவும் போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது.
அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் நேற்று டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் கூட்டணி உருவாகலாம் என தகவல் வெளியானது. அதற்கேற்றபடி 2026ல் தமிழகத்தில் ஊழல் களையெடுக்கப்படும் என அமித் ஷாவும் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தச் சந்திப்பு குறித்து ஓபிஎஸ்ஸிடம் கேட்டதற்கு, ‘‘எல்லாம் நன்மைக்கே’’ என ஒற்றை சொல்லை மட்டும் உதிர்த்துவிட்டுச் சென்றார்.
அந்தமான் கடலில் சற்றுமுன் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 75 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. முதல் கட்டத் தகவல்களின்படி, இந்த நிலநடுக்கத்தில் பொருள் சேதமோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. நேற்று முன்தினமும் அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 4.9 வரை பதிவாகியிருந்தது.
கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக மாநிலத் தலைவர்கள் மாற்றப்பட்ட நிலையில், பாஜக தலைமை அண்ணாமலையை மட்டும் மாற்றவில்லை. எப்போது வேண்டுமானாலும், புதிய தலைவர் அறிவிக்கப்படலாம் என செய்திகளும் வந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில், அமித்ஷா உடனான சந்திப்பில் அண்ணாமலையை மாற்றினால்தான் கூட்டணி என்று இபிஎஸ் கெடுபிடி காட்டியதாகவும், அதற்கு அமித்ஷா சம்மதம் தெரிவித்ததாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 26) சவரனுக்கு ₹80 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,195க்கும், சவரன் ₹65,560க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து, ஒரு கிராம் ₹111க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,11,000க்கும் விற்பனையாகிறது. கடந்த 5 நாள்களாகத் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று மீண்டும் ஏறுமுகத்தைக் கண்டுள்ளது.
சாஹல் – தனஸ்ரீ விவாகரத்து பெற்றதை தொடர்ந்து, தனஸ்ரீயை ‘கோல்டு டிக்கர்’ என கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் ஒருவர் இவ்வாறாக தனஸ்ரீயை விமர்சித்த பதிவை, ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா லைக் செய்துள்ளார். இது பலரின் கவனத்தையும் பெற்று வைரலாகியுள்ளது. ‘கோல்டு டிக்கர்’ என்பது, பணம் அல்லது சொத்துக்காக ஒருவருடன் உறவில் இருக்கும் பெண்ணை விமர்சிக்க பயன்படுத்தப்படும் சொல்.
ADMK கூட்டணியில் ராஜ்யசபா சீட்டைப் பெற DMDK, PMK இடையே கடும் போட்டி நிலவுகிறது. வரும் ஜூன் மாதம் காலியாக உள்ள 6 இடங்களில், 4 திமுகவுக்கு உறுதியானது. மீதமுள்ள இரண்டில் ஒரு சீட்டை அதிமுகவும், மற்றொன்றை கூட்டணிக் கட்சிக்கும் ஒதுக்க உள்ளது. கடந்த முறை PMK பெற்ற நிலையில், இம்முறை DMDK தீவிரமாக காய்நகர்த்தி வருகிறது. ஆனால், ADMK மீண்டும் NDAவில் இணைவது உறுதியானதால், PMK அந்த சீட்டைப் பெற முயல்கிறதாம்.
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப். 6 ஆம் தேதி தமிழகம் வருகிறார். முன்பாக 5 ஆம் தேதி இலங்கை செல்லும் பிரதமர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்து பாம்பன் வருகிறார். புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் ஆளுநர் ரவி, CM ஸ்டாலின், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சிக்குப் பின் ராமேஸ்வரத்திற்கும் பிரதமர் செல்கிறார்.
Sorry, no posts matched your criteria.