India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளை இரு பெரிய படங்கள் ட்ரீட் கொடுக்க காத்திருக்கின்றன. ‘சித்தா’ அருண்குமார் விக்ரம் கூட்டணியில் ‘வீர தீர சூரன்’ படம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. அதே நேரத்தில், மலையாள சினிமாவே பெரிய அளவில் எதிர்பார்க்கும் படமாக உள்ளது ‘எம்புரான்’. தமிழகத்திலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல டாக் இருக்கிறது. இரண்டுமே பெரிய எதிர்பார்ப்புகளை கொண்டுள்ள படங்கள். உங்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் எது?
உ.பியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் எந்தவொரு மதக்கலவரமும் நடக்கவில்லை என CM யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருப்பார்கள். 100 இந்து குடும்பங்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம் குடும்பம் பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால், 100 முஸ்லிம் குடும்பங்கள் மத்தியில் 50 இந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா? வங்கதேசமே சிறந்த உதாரணம் என்றார்.
ஹரியானாவில் மாயமான யோகா டீச்சர் ஜெகதீப் 3 மாதங்களுக்குப் பின் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 7அடி ஆழ போர்வெல் பள்ளத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் டேப் ஒட்டப்பட்ட நிலையில் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கிறார். இந்த கொடூரமான கொலையை செய்தவர் ஜெகதீப் குடியிருந்த வீட்டு ஓனர் ஹர்தீப். தனது மனைவியுடன் தகாத உறவில் இருந்ததால் தீர்த்துக் கட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
ஒரு பிரபலம் மரணமடைந்து விட்டால், அன்று அவர்கள் வீட்டில் கூட்டம் அலைமோதும். அஞ்சலி செலுத்த வருகிறார்களோ, இல்லையோ, வரும் மற்ற பிரபலங்களைக் காணவே கூட்டம் குவிகிறது. இதில், யாராவது வந்தால், கூச்சலிட்டு கோஷமும் எழுப்புவார்கள். அங்கே வேதனையில் தவிப்பவரின் நிலை, கொஞ்சம் கூட உணர முடியாதா. அவர்களும் மனிதர்கள் தானே. இனியாவது கொஞ்சம் கண்ணியம் காப்போமே. துக்க வீட்டில், ரசிகர்களின் கோஷமும் எதற்கு?
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் இந்தி, தமிழ், ஆங்கிலம் என பல இந்திய மொழிகளில் ஒளிப்பரப்பாகி வருகின்றன. இதில் ஹிந்தி Commentary அறிவு சார்ந்ததாக இல்லாமல், வெறுமனே கிண்டல், கேலியாக மட்டும் உள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சாடினர். இதனிடையே ரசிகர் ஒருவரின் கருத்துக்கு பதில் அளித்துள்ள ஹர்பஜன், “உங்களது கருத்துக்கு நன்றி.. கண்டிப்பாக மாற்றிக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
முன்னாள் MLA கருப்பசாமி பாண்டியன் மறைவையொட்டி, ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். 1977இல் ஆலங்குளம், 1980இல் பாளையங்கோட்டை, 2006இல் தென்காசி தொகுதியில் இருந்து MLA-ஆக தேர்வாகி மக்களுக்காக உழைத்தவர். நீண்டகாலம் சட்டப்பேரவையின் உறுப்பினராக இருந்த அவரது மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
2026 உலகக்கோப்பைக்கான தகுதி சுற்றுப் போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, பிரேசிலை எதிர்கொண்டது. இதில் 3வது நிமிடத்திலேயே முதல் கோலை அர்ஜென்டினா அடித்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய அந்த அணி 4 கோல்களை அடித்து பிரேசிலை நிலைகுலைய வைத்தது. பதிலுக்கு ஒரு கோல் மட்டுமே பிரேசிலால் அடிக்க முடிந்தது. இதன் மூலம் 4 – 1 என்ற நிலையில் வெற்றி பெற்று அர்ஜென்டினா 2026 ஃபிஃபா உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது.
அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு இபிஎஸ் சற்று பதற்றமானார். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதற்குள் ஊடகங்களுக்கு விறுவிறுப்பான செய்தி வேண்டும் என்பதற்காக, இப்படி கேட்பதா? என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப கூட்டணி மாறும் எனவும், தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் விளக்கமளித்தார்.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி, நாளை முதல் எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட தென் மாநிலங்கள் முழுவதும் இந்த ஸ்டிரைக் நடைபெறுகிறது. இதனால், கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மறைந்த நடிகர் மனோஜ் ‘சாதுரியன்’ படத்தில் நடித்தபோது உடன் நடித்த கேரள நடிகையான நந்தனாவுடன் காதலில் விழுந்தார். நந்தனா தமிழில் ABCD, சக்சஸ், சாதுரியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த ஜோடிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மனோஜின் பிரிவால் அவரது மனைவி, மகள்கள் கண்ணீர் சிந்தும் காட்சி காண்போரையும் கண்கலங்க வைக்கிறது.
Sorry, no posts matched your criteria.