India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லி சென்ற இபிஎஸ் அமித் ஷாவை சந்தித்து புதிய அரசியல் கணக்கைத் தொடங்கிய நிலையில், ஜெயலலிதா பாணியில் ஓபிஎஸ் கோயில்களுக்கு படையெடுத்து வருகிறார். சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் ஓபிஎஸ் தரிசனம் செய்தார். ஜெயலலிதாவுக்கு சிக்கல் வரும் நேரத்தில் அவர் இந்த கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில், அதே பாணியை தற்போது OPS கையில் எடுத்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, தன் அடுத்த கட்டத்தை ஸ்ரேயாஸ் உலகறிய செய்தார். நேற்றைய IPL ஆட்டத்திலும் அவர் சிக்சர்களாக பறக்கவிட்டு 97 ரன்களை குவித்தார். கடந்த ஒர் ஆண்டில் அவரின் பேட்டிங் வெகுவாக முன்னேறியுள்ளதாகவும், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தயாராகிவிட்டார் எனவும் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி பாராட்டியுள்ளார்.
சம்மர் சீசனில் வாகனங்களை ஓட்டும் போது, கவனிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து சில பரிந்துரைகள்: டயர்களில் காற்று பிரஷரை சரிபார்த்துக் கொள்ளவும். வெப்பத்தின் காரணமாக டயர்கள் வெடிக்கலாம் *வண்டியின் பேட்டரியை சரிபார்க்கவும் *காரின் ஏ.சி சரியாக வேலை செய்கிறதா என்பதையும் செக் செய்து கொள்ளவும் *முடிந்தளவு வெயில் நேரத்தில் நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. SHARE IT.
கடலூர் அருகே திருமணமான 29 வயது பெண் கத்திமுனையில் மிரட்டி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரத்தை அரங்கேற்றிய சிவக்குமார், அதனை வீடியோ பதிவு செய்து தனது நண்பர் வினோத்திற்கும் அனுப்பியுள்ளார். அந்த வீடியோவை காட்டி மிரட்டிய வினோத், அப்பெண்ணை பலாத்காரம் செய்ததோடு ₹50,000, 3 சவரன் நகையை பறித்துள்ளார். மேலும், பணம் கேட்டு மிரட்டியதால் கம்மாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் அந்தப்பெண் புகார் கொடுத்துள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகிறதா என்ற கேள்விக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது இபிஎஸ் – அமித்ஷா சந்திப்பு. இதில், கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும் என்றும், பிரிந்து சென்றவர்களை சேர்க்க நிர்பந்திக்க மாட்டோம் என்றும் பாஜக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டணி தொடர்பான அறிவிப்பு ஏப்ரலில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
ஜல்லி, எம்சாண்ட் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய அவர், கிரஷர் உரிமையாளர்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்தி வருவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாக கூறினார். தன்னிச்சையாக விலையை உயர்த்தினால் சம்பந்தப்பட்ட கிரஷர் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
அத்திக்கடவு – அவிநாசி 2ஆம் கட்ட திட்டம் குறித்த கேள்விக்கு, பேரவையில் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டால், உறுதி செய்வது போல் ஆகிவிடும். அதனால்தான் ‘நேக்குப் போக்குடன்’ பதில் சொல்கிறோம் என்று துரைமுருகன் பதிலளித்துள்ளார். ஒரு திட்டத்தை செய்வதாக இருந்தால் கூட, செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவதற்கு காரணம் இதுதான். MLAக்கள் அதை புரிந்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
அமித்ஷா – இபிஎஸ் சந்திப்பு குறித்து பேசிய பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான விஜயதாரணி, 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து போட்டியிட்டால், மாற்றம் ஏற்படும் எனக் கூறிய அவர், தவெக தலைவர் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் ( பாஜக, அதிமுக உடன்) ஆளும் அரசில் இடம்பெறுவார் எனவும் தெரிவித்தார்.
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஏப்.2ஆம் தேதி ஊதியம் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏப்.1ஆம் தேதி வருடாந்திர கணக்கை முடிப்பதால் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் சம்பளம் 2ஆம் தேதி வழங்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 9.3 லட்சம் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு, முன்னதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா, உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிகவின் வன்னியரசு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
Sorry, no posts matched your criteria.