India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டத்தில் தனிப்பட்ட பெண்கள், பெண் குழந்தை (உரிய பாதுகாவலர் மூலம்) இணையலாம். இதற்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதிர்வுகாலம்: 2 Yrs. ஆண்டுக்கு அதிகபட்சம் 7.5% வட்டி வழங்கப்படும். இடையில் குறிப்பிட்ட தொகையை திருப்பி எடுக்கவும், கணக்கை முடிக்கவும் (நிபந்தனையுடன்) அனுமதியுண்டு. மேலும் விவரங்களுக்கு <
மம்முட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் பரவியதை அடுத்து, சபரிமலை கோயிலில் சிறப்பு பூஜை செய்தார் மோகன்லால். ஆனால், மம்முட்டி ஒரு முஸ்லிம். அவருக்காக மோகன்லால் எப்படி இந்து கடவுளிடம் பூஜை செய்யலாம்? என ஒருதரப்பினர் பிரச்னை செய்து வருகின்றனர். இதற்கு விளக்கமளித்த மோகன்லால், ‘மம்முட்டி எனது நண்பர். கடவுளிடம் வேண்டுவது என்பது எனது பெர்சனல். அதை யாரும் கேள்வி கேட்க முடியாது’ எனக் கூறியுள்ளார்.
மாதத்தில் 30 அல்லது 31 நாள்கள் இருக்க, ஏன் 28 நாள் தான் ரீசார்ஜ் பிளான் இருக்கிறது? இதுவும் ஒரு பிசினஸ் ட்ரிக்ஸ் தான். 28 நாள் என்ற விதத்தில், 12 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்தால், 336 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், வருடத்தில் 365 நாள்கள் உள்ளது. பயனருக்கு 29 நாட்கள் குறையும். இதனால், வருடத்திற்கு 13 முறை ரீசார்ஜ் செய்யும் நிலை ஏற்படும். இது டெலிகாம் கம்பெனிகளுக்கு லாபம் தானே.
சீனாவின் ‘மில்லினியம் பேபி’ என அழைக்கப்படும் 25 வயது ‘கிங்க்கியான்’ திடீர் இதய செயலிழப்பால் மரணம் அடைந்தார். 2000-ம் ஆண்டு பிறப்பின்போது, சரியாக புது ஆயிரமாண்டு (மில்லினியம்) தொடக்கத்தில் சீனாவில் பிறந்த முதல் குழந்தை என்று அப்போது உலகப் பிரபலம் ஆனார் கிங்க்கியான். சீன மொழியில் millinium என்பதை குறிப்பிடும் ‘கியான்’ என்ற சொல்லே அவரது பெயரானது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து களமிறங்க விஜய் முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனித்து களமிறங்கி தனது அரசியல் பலத்தை நிரூபிக்க அவர் முடிவு செய்துள்ளாராம். இதனால் திமுக, அதிமுக- பாஜக (உறுதியாகவில்லை), தவெக, நாதக என தமிழக அரசியல் களத்தில் பல முனை போட்டி உருவாகி உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு மாறுபட்ட தேர்தல் களத்தை 2026 சட்டமன்ற தேர்தல் சந்திக்க இருக்கிறது.
ஃபுட்பால் லெஜண்ட் மெஸ்ஸி வரும் அக்டோபரில் இந்தியா வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொச்சியில் நடைபெறும் 2 ஃப்ரண்ட்லி போட்டிகளில் அர்ஜெண்டினா அணியினருடன் மெஸ்ஸி விளையாட இருக்கிறார். இந்தியாவில் ஃபுட்பாலை பிரபலப்படுத்தும் நோக்கில், இந்த போட்டிகள் நடைபெறும் என அர்ஜெண்டினாவின் ஸ்பான்சரான HSBC தெரிவித்துள்ளது. மெஸ்ஸி கடைசியாக கடந்த 2011ல் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் விளையாடினார்.
வீடு கட்டுவது என்பது எளிய மனிதனின் வாழ்நாள் கனவு. நீங்கள் வாங்கும் வீட்டை மனைவி பெயரோடு சேர்த்து வாங்கினால் பல நன்மைகளை பெறலாம். அதாவது பெண்கள் பெயரில் வாங்கும் போது ஸ்டாம்ப் டியூட்டியில் தள்ளுபடி பெறலாம். மனைவி வேலை செய்தால் இருவரின் சம்பளமும் சேர்கையில் அதிக கடன் வரம்பு கிடைக்கும். பெரும்பாலான வங்கிகள் பெண் கூட்டுக் கடன் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த வட்டி வசூலிக்கின்றன. Share it…
நடப்பு ஐபிஎல் சீசனில் வெற்றிக் கனியை இன்னும் பறிக்காத கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் சற்றுநேரத்தில் மோதவுள்ளன. இவ்விரு அணிகளும் இதுவரை 30 போட்டிகளில் விளையாடி தலா 14-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகளுக்கு முடிவில்லை. கவுகாத்தி மைதானத்தில் நடைபெறவுள்ள இன்றைய போட்டியில் வெல்லப் போவது ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தானா? ரஹானேவின் கொல்கத்தாவா? உங்கள் கருத்து என்ன?
100 நாள் வேலை திட்டத்தில் ₹4,034 கோடியை வழங்காமல் மத்திய பாஜக அரசு வஞ்சிப்பதாக கூறி திமுக சார்பில் வரும் மார்ச் 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. அனைத்து ஒன்றியங்களிலும் தலா 2 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்கும் வகையில் மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாடுகளை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.