News April 25, 2024

தமிழக அமைச்சரவை மாற்றப்படுகிறதா?

image

தேர்தல் முடிவு வந்த உடன் அமைச்சரவையை மாற்றம் செய்ய திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலில் அமைச்சர்களின் செயல்பாடு, வாங்கிக் கொடுக்கும் வாக்குகள், பொறுப்பு அமைச்சராக கடந்த இரண்டரை ஆண்டுக்காலச் செயல்பாடு, சமூக ரீதியான பிரதிநிதித்துவம் அடிப்படையில் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமாம். தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு முக்கிய துறைகளும் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 25, 2024

டெல்லி அணிக்கு பதிலடி தருமா குஜராத் அணி?

image

ஐபிஎல் தொடரில் 40ஆவது லீக் போட்டியில் டெல்லி அணியை குஜராத் அணி இன்று எதிர்கொள்கிறது. டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ள இரு அணிகளும் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோற்ற குஜராத் அணி இந்த போட்டியில் பதிலடி தருமா என ரசிகர்கள் கமெண்டில் கூறலாம்.

News April 25, 2024

அஜித் ரசிகர்களை குறிவைத்து பெயர் வைக்கவில்லை

image

படத்திற்கு தேவைப்பட்டதாலேயே ‘ரெட்ட தல’ என்று பெயரிட்டுள்ளதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார். அஜித் ரசிகர்களுக்கு என்னை பிடிக்கும் என்பது உண்மை என்றாலும் அஜித் ரசிகர்களை கவர இந்த டைட்டிலை வைக்கவில்லை. படம் வெளியான உடன் அது புரியும் வரும் என்ற அவர், இந்த தலைப்பை ஈடு செய்யும் வகையில் உழைத்திருப்பதாகவும் தெரிவித்தார். ‘ரெட்ட தல’ படத்தின் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டிருந்தனர்.

News April 25, 2024

தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்துள்ளது

image

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குளறுபடியாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார். பல தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நீக்கப்பட்டுள்ளார்கள். எதையுமே தேர்தல் ஆணையம் முறையாகச் செய்யவில்லை. வாக்குப்பதிவை கூட தினமும் மாற்றி அறிவிக்கிறார்கள் என்ற அவர், 2 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்றும் கூறினார்.

News April 25, 2024

சென்னைக்கு எதிரான 2 போட்டிகளிலும் வெற்றி

image

CSK-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், மார்கஸ் ஸ்டாய்னிஸின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. இதுவே, சென்னைக்கு எதிராக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ஏப்ரல் 19ஆம் தேதி நடந்த முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிரான 2 போட்டிகளிலும் மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

News April 25, 2024

பேரிடர் அபாயத்தில் இந்தியா

image

இயற்கை பேரிடர்களால் 2023இல் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்தியா, மேலும் பல இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் அபாயத்தில் இருப்பதாக உலக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஆய்வாளர்கள், இந்தியாவில் பழுப்பு நிலக்கரி, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை அதிகம் பயன்படுத்துவதால் வெப்ப அலை வீசுகிறது. பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை நிறுத்தும் வரை வெப்பநிலை மென்மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கின்றனர்.

News April 25, 2024

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

image

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனு ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரி சிவகங்கையை சேர்ந்த கருப்பையா காந்தி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, மனுதாரர் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

News April 25, 2024

சிலிண்டர் சோதனை இனி இலவசம்

image

வீடுகளில் சிலிண்டர் பாதுகாப்பு சோதனையை இலவசமாக மேற்கொள்ளும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் ரப்பர் குழாயின் தன்மை, ரெகுலேட்டர் இயக்கம், சிலிண்டர் இயக்கம் போன்றவற்றை ஆய்வு செய்ய ஏஜென்சி ஊழியர்கள் ₹200 கட்டணமாக வசூலித்தனர். ஆனால், இனி சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்களே, இலவசமாக சோதனைச் செய்து, தங்களின் மொபைல் போன் செயலியில் பதிவு செய்வர்.

News April 25, 2024

நிதிஷ்குமாரின் சர்ச்சை பேச்சுக்கு தேஜஸ்வி பதிலடி

image

அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு பலர் அரசியலில் இருக்கிறார்கள் என்ற நிதிஷ்குமாரின் கருத்துக்கு தேஜஸ்வி யாதவ் பதிலளித்துள்ளார். நிதிஷ் எதைச் சொன்னாலும் அதை ஆசிர்வாதமாகவே கருதுவோம். ஏனெனில், அவர் வயதில் மூத்தவர். ஆனால், இதைச் சொல்வதால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை எனக் கூறினார். முன்னதாக லாலுவை குறிவைத்து நிதிஷ் தேர்தல் பரப்புரையில் இவ்வாறு பேசினார். லாலுவுக்கு 7 மகள் 2 மகன்கள் உள்ளனர்.

News April 25, 2024

CSK-க்கு எதிராக புதிய சாதனை

image

சென்னைக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், லக்னோ வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த அவர், 13 Four, 6 Six என விளாசி அசத்தினார். 63 பந்துகளில் 124* ரன்கள் குவித்த அவர், CSK அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார். ஒற்றை ஆளாகப் போராடி அணிக்கு வெற்றித் தேடித் தந்த அவருக்கு, ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

error: Content is protected !!