News August 18, 2025

துலீப் டிராபி தொடரில் இருந்து இஷான் கிஷன் நீக்கம்

image

துலீப் டிராபி தொடர் 2025, செப்.28-ல் தொடங்குகிறது. இதில் கிழக்கு மண்டல அணிக்கு இஷான் கிஷன் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் இத்தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஆசிர்வாத் ஸ்வைன் சேர்க்கப்பட்டுள்ளதாக ஒடிசா கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இவர் 11 முதல்தர போட்டிகளில் விளையாடி 615 ரன்கள் எடுத்துள்ளார். இஷான் நீக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

News August 18, 2025

4 ஆண்டுகளில் முடியாதது, 7 மாதங்களில் முடியமா? இபிஎஸ்

image

கடன் வாங்குவதில் சூப்பர் முதல்வராக ஸ்டாலின் உள்ளார் என்றும், ₹5.38 லட்சம் கடன் திமுக அரசு வைத்துள்ளதாகவும் இபிஎஸ் விமர்சித்தார். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் மக்களுக்கு 46 பிரச்னைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதனை 45 நாள்களில் தீர்க்கப்படும் என்கின்றனர். 4 ஆண்டுகளில் முடியாததை 7 மாதங்களில் நிறைவேற்ற முடியமா என கேட்டார். மக்களின் ஆசையை தூண்டி வாக்குகள் பெறவே இத்திட்டம் என்றார்.

News August 18, 2025

1 கோடி கையெழுத்து இயக்கம்: செல்வப்பெருந்தகை

image

தேர்தல் ஆணையத்தை (ECI) வைத்து பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக காங்., குற்றஞ்சாட்டியது. ECI, ஒரு தன்னாட்சி அமைப்பு என தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்தார். இதனிடையே, ‘வாக்காளர் அதிகார நடைபயணத்தை’ ராகுல் காந்தி தொடங்கினார். இந்நிலையில், ECI முறை​கேடு தொடர்பாக ​மக்களிடம் விழிப்​புணர்வு ஏற்படுத்துவதற்காக, 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்​தப்​படும் என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

News August 18, 2025

SPORTS ROUNDUP: இந்திய அணியில் சுனில் சேத்ரி இல்லை!

image

◆சின்சினாட்டி ஓபன்: ஆண்கள் இரட்டையரில் பிரிவில் ராஜீவ் ராம்(USA)- நிகோலா மெக்டிக்(குரோஷியா) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
◆T20 பேட்டிங்கில் பாபர் அசாம் முன்னேற்றம் காண வேண்டி இருப்பதால், Asia Cup-ல் இடம் கிடைக்கவில்லை: PAK பயிற்சியாளர்.
◆தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமி நடத்தும் புச்சிபாபு தொடர் இன்று தொடங்குகிறது.
◆நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: இந்திய அணியில் சுனில் சேத்ரிக்கு தேர்வு செய்யப்படவில்லை.

News August 18, 2025

‘6 அதிமுக தலைகளை தூக்கும் திமுக’

image

தேர்தல் வந்துவிட்டாலே ‘ஸ்பெஷல் ஆயுதம்’ ஒன்றை கையிலெடுப்பது திமுகவின் வழக்கம். அந்தவகையில், தற்போது இபிஎஸ் வலது கையாக இருக்கும் தங்கமணி, செங்கோட்டையன், ராஜேந்திரபாலாஜி, காமராஜ், செல்லூர் ராஜு, மணிகண்டன் ஆகிய 6 முக்கிய தலைவர்களை அதிமுகவில் இருந்து தூக்க திமுக பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வேலை செய்கிறதாம். இந்த செய்தி வெளியான உடனே தங்கமணி மறுத்த நிலையில், மற்ற தலைவர்கள் சைலண்டாக இருக்கின்றனர்.

News August 18, 2025

2 திருத்த மசோதாக்கள் மக்களவையில் தாக்கல்

image

விண்வெளி நாயகர் சுபான்ஷு சுக்லா, நேற்று இந்தியா திரும்பினார். இந்நிலையில், இன்று லோக் சபாவில் சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. அதில் ‘விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் – 2047 வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான விண்வெளி திட்டத்தில் முக்கிய பங்கு’ என்ற தலைப்பில் விவாதங்கள் நடைபெறவுள்ளன. அத்துடன் ஜன் விஷ்வாஸ் திருத்த மசோதா & இந்திய மேலாண்மை மையங்கள் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளன.

News August 18, 2025

11 விநாயகர் சபை இருக்கும் அதிசய கோயில்!

image

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் வாசீஸ்வரர் திருத்தலத்தில் ‘11 விநாயகர் சபை’ உள்ளது. புராணங்களின்படி, திரிபுராந்தர்களை அழிக்கச்சென்ற சிவன், விநாயகரை வணங்காமல் புறப்பட்டதால், வழியில் தேர் சக்கரத்தின் அச்சு முறிந்தது. விநாயகர் சபை அமைத்தும் விசாரணை மேற்கொண்டாராம். அதனடிப்படையில்தான், இங்கு 11 விநாயகர் சபை உள்ளது. இக்கோயிலில் வந்து வழிபட்டால், வாழ்வில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

News August 18, 2025

மிஸ்ஸான ஹாலிவுட் வாய்ப்பு: ஃபஹத் சொன்ன காரணம்

image

ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் இயக்குநர் Alejandro González Iñárritu-வின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது குறித்து ஃபஹத் பாசில் பேசியுள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், தான் வீடியோ காலில் ஆடிஷன் செய்தபோதே அவருக்குப் பிடிக்கவில்லை என்றார். இதற்கு தனது ஆங்கில உச்சரிப்பே காரணம் என்ற அவர், சம்பளமே இல்லாமல் 4 மாதங்கள் USA-ல் இருக்கச் சொன்னதால், அப்படத்தை கைவிட முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளார்.

News August 18, 2025

அதிமுக கூட்டணியில் தமமுக இணைந்தது.. ஜான்பாண்டியன்

image

பாஜக – அதிமுக (NDA) கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்துவிட்டதாக அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என முன்னர் கூறிவந்தார். சமீபத்தில் நெல்லைக்கு சென்ற EPS உடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், NDA கூட்டணியில் இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.

News August 18, 2025

நாடகம் நடத்தும் காங்கிரஸ்: ஜி.கே.வாசன் தாக்கு

image

வாக்கு திருட்டு விவகாரத்தில் காங்., கடந்த ஒருவாரமாக EC-க்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய ஜி.கே.வாசன், EC-ஐ காங்., கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள்; பொய்யை தொடர்ந்து கூறினால் உண்மையாகிவிடும் என நினைப்பது மிகப்பெரிய தவறு என்று விமர்சித்துள்ளார். மேலும், காங்., கூட்டணி பலவீனமாக உள்ளதால், அதனை மூடி மறைக்க ஒரு மிகப்பெரிய நாடகம் நடத்தப்படுவதாகவும் சாடினார்.

error: Content is protected !!