India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரயில் நிலையங்களில் சலுகை விலையில் உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் கீழ் லெமன் சாதம், பூரி ₹20, மசால் தோசை ₹50, 200 மிலி தண்ணீர் கேன் ₹3க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரயில் நிலைய நடைமேடையில் இதற்கான கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னாள் டிஎன்பிஎஸ்சி தலைவர் டி. லட்சுமி நாராயணன் இன்று காலமானார். 1987-93 ஆண்டு வரை டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த போது மிகுந்த நேர்மையுடன் பணியிடங்களை நிரப்பினார். அரசியல் அழுத்தங்கள் தரப்பட்ட போதும், அவர் பணியவில்லை. முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இருவரிடமும், நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்ற பெயரைப் பெற்றவர். அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் உதயசந்திரன் அஞ்சலி செலுத்தினார்.
ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் மேலும் சில சந்தேகங்கள் இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒப்புகைச் சீட்டு அனைத்தையும் எண்ணக் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று காலை இடைக்கால தீர்ப்பளிப்பதாக இருந்த நிலையில், இந்த கேள்வியை முன் வைத்துள்ளனர். மேலும், மதியம் 2 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் கொத்துக் கொத்தாக வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளதாக தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார். பல லட்சம் வாக்குகள் விடுபட்டிருப்பது வேதனை அளிக்கிறது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறு நடக்காத வகையில் தேர்தல் ஆணையம் கவனமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய அவர், முக்கியமான தேர்தலின்போது நாட்டு மக்களுடன் இல்லாமல் ராகுல் வெளிநாட்டில் இருக்கிறார் என விமர்சித்தார்.
வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டேன் என்பதே மோடியின் கேரண்டி என காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். ரூ.15 லட்சம் தருவதாக கூறிய பிரதமர் இதுவரை ஏன் தரவில்லை? வெளிநாட்டில் காங்கிரஸ் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பதாகக் கூறிய அவர், இதுவரை எவ்வளவு பணத்தை மீட்டுள்ளார் என்று கேள்வி எழுப்பினார். மேலும், பொய்களை திரும்பச் சொல்லி அதை மோடியின் உத்தரவாதம் என பாஜக கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நடிகை அபர்ணா தாஸ், தனது நீண்ட நாள் காதலனை கரம் பிடித்தார். டாடா, பீஸ்ட் படங்கள் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இவர், ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் நடித்த தீபக் பரம்பொல் என்பரை காதலித்து வந்தார். திருமணம் அறிவிப்பை வெளியிட்ட அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வந்த நிலையில், இன்று இருவீட்டார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதமர் என்ற உயர்ந்த இடத்திற்கு வந்த பிறகும் தனது முஸ்லிம் வெறுப்பை மோடி கக்கியிருக்கிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காட்டமாக விமர்சித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான விஷம் தோய்ந்த கருத்துகளை வெளியிட்ட மோடியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருக்கலாம்; ஆனால் மக்கள் அப்படி இருக்க மாட்டார்கள்; சரியான பாடம் புகட்டுவார்கள் என எச்சரித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடிக்கு திமுக காரணமாக இருக்குமோ என்று சந்தேகிப்பதாக தமிழிசை தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் இதை சீரியசாக விசாரிக்க வேண்டும். INDIA கூட்டணியோ அல்லது முதல்வரோ இது தொடர்பாக எவ்வித கருத்தும் இதுவரை கூறாதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், முதல்வரின் கனத்த மௌனம் இந்த விவகாரத்தில் திமுகவுக்கு பங்கு இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ₹1,160 குறைந்த நிலையில், இன்று ரூ.240 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,840க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,730க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.86.50க்கு விற்பனையாகிறது.
தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாவட்டத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து கரூர் மாவட்டத்திலும் வெப்ப அலை வீசும் என்பதால் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.