India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு திரிபுராவில் உள்ள 4 பகுதிகளில் ஏறத்தாழ 100%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பதாக சிபிஎம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து பேசிய திரிபுரா சிபிஎம் செயலாளர் ஜிதேந்திர சௌத்ரி, மஜ்லிஷ்பூரில் (44வது பகுதி) 105%, மோகன்பூரில் (38வது பகுதி) 109% என கூடுதல் சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கிறது. முறைகேடு செய்தால் மட்டுமே இதுபோன்ற பொருந்தாத வாக்குச் சதவீதம் நிகழும் என்றார்.
மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 100 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோழிக் கழிவுகளை சுத்திகரிக்கும் ஆலையால் காற்று, நீர் மாசுபடுவதாகக் கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விதிகளுக்கு உட்பட்டே ஆலை செயல்படுவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தும் போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம், ஏப்.28 அல்லது 29ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், ரோஹித் ஷர்மா, அஜித் அகர்கர், டிராவிட் தலைமையிலான ஆலோசனைக் குழு, 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்ந்தெடுக்க உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால், முன்னணி வீரர்கள் தங்களுக்கான உத்தேசப் பட்டியல்களை வெளியிட்டு வருகின்றனர்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கன்ட்ரோலரில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்கக் கோரிய வழக்கில், வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவி என மூன்றுக்கும் தனித்தனி மைக்ரோ கன்ட்ரோலர்கள் உள்ளன. தேர்தல் முடிந்தபிறகு அந்த மூன்று கருவிகளுக்கும் சீல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீட்டை அதிகரிக்க INDIA கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் சமூக நீதி மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்த அவர், சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் இடஒதுக்கீட்டிற்கான அச்சுறுத்தலை திராவிட இயக்கம் எதிர்த்து வந்ததாகக் கூறினார். மேலும், இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தல் கொடிகட்டி பறப்பதாக ஓபிஎஸ் உள்ளிட்ட பலர் குற்றம் சாட்டுகின்றனர். இதனையடுத்து, ரேஷன் கடைகளில் அரிசி வாங்காத ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி வாங்கியதாக கணக்கெழுதி அரிசியை கடத்துகின்றனர். இதை அரசு உடனே தடுக்க வேண்டும். கடத்தல் தொடர்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் புகார் தெரிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருப்பு மணல் ஊழலில் கேரள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து செயல்படுவதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். பல்வேறு ஊழல் விவகாரங்களில் பினராயி விஜயனின் குடும்ப உறுப்பினர்களுக்கும், அவரின் அலுவலகத்துக்கும் நேரடி தொடர்பு உள்ளது. இது குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற அவர், வெளிப்படை தன்மைப் பற்றி பேசும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தனது முதல்வரை பற்றிப் பேசத் தயங்குகிறா்கள் என்றார்.
வாக்காளர்களை அச்சுறுத்தியதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹமீதுல் ரஹ்மானுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்தியப் படைகள் ஏப்ரல் 26-ஆம் தேதி வரைதான் இருக்கும், அதன் பிறகு மாநிலப் படைகள் தான் எப்போதும் இருக்கும் எனத் தேர்தல் பரப்புரையில் அவர் கூறியிருந்தார். இந்த பேச்சு தொடர்பாக அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஒரு பாடலுக்கு, பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இளையராஜா இசையமைத்த 4,500 பாடல்கள் மீதான சிறப்பு உரிமையை எதிர்த்து, எக்கோ நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பாடல்கள் ஏதேனும் விற்கப்பட்டிருந்தால் அது இந்த மேல்முறையீட்டுக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவித்து வழக்கை ஜூன் 2ஆவது வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் நிலையில், தமிழக எல்லையில் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எல்லையில் உள்ள கோழி, வாத்துப் பண்ணைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கூடலூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கேரளாவில் இருந்து வரும் கோழிகளுக்கு முற்றிலும் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.