News April 25, 2024

ஆபத்தை விளைவிக்கும் திரவ நைட்ரஜன்

image

திரவ நைட்ரஜன் என்பது மைனஸ் 190 டிகிரி வெப்பநிலையில் திரவ நிலையில் இருக்கும் நைட்ரஜன். நிறமற்ற, வாசனையற்ற நைட்ரஜன், திரவ நிலையில் இருந்து வாயுவாக மாறும் தன்மைக் கொண்டது. இது ஐஸ்கிரீம், இறைச்சி வகைகளைப் பாதுகாக்க பயன்படுகிறது. இது வாயுவாக மாறும்போது அதன் தன்மை மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கும் மருத்துவர்கள், நைட்ரஜன் வாயு உணவுப் பொருள்கள் மூலம் நேரடியாக உடலுக்குள் செல்வது பேராபத்து என்கிறார்கள்.

News April 25, 2024

இந்திரா காந்தி மட்டும் நகையைக் கொடுக்கவில்லை

image

நாட்டிற்காக இந்திரா காந்தி மட்டுமே நகைகளைக் கொடுக்கவில்லை, மக்கள் அனைவருமே நகைகளைக் கொடுத்தனர் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இந்தியா – சீனா போர் (1962) நடந்த சமயத்தில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது நகைகளைக் கொடுத்ததாக காங்கிரசார் கூறி வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, போர் ஏற்பட்டதற்கு காரணமே நேருதான். காங்கிரசார் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

News April 25, 2024

சச்சினுக்கு போஸ்டர் வெளியிட்ட பிசிசிஐ

image

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 51ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிசிசிஐ போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘மாஸ்டர் ஆஃப் பிளாஸ்டர்’ எனப் போற்றப்படும் சச்சின், பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர். பேட்ஸ்மேன்களுக்கு ஊக்குவிப்பாளராகவும், ரசிகர்களுக்கு உற்சாகமளிப்பவராகவும் திகழ்ந்து, 24 ஆண்டுகள் கிரிக்கெட் உலகை கட்டியாண்டவர் என அவரை சொன்னால் அது மிகையல்ல.

News April 25, 2024

வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்

image

வட தமிழக உள் மாவட்டங்களில் இயல்பை விட 3 -5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே, கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெப்பநிலை மேலும் உயர உள்ளது. அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது அசெளகரியம் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், மதிய நேரத்தில் கர்ப்பிணிகள், முதியோர் வெளியே வருவதை தவிர்க்கவும்.

News April 25, 2024

அவர்தான் மிகப்பெரிய ஊழல்வாதி

image

தேர்தல் பத்திரங்கள் மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றி பாஜகவுக்கு நன்கொடைகளைப் பெற்ற மோடி ஊழலை ஒழிப்பாரா என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பெங்களூருவில் பேசிய அவர், ₹150 கோடி லாபத்தை அடையாத நிறுவனம் ₹1,100 கோடி நன்கொடை வழங்குகிறது. இடி, ஐடி மூலம் மிரட்டிப் பெற்ற இந்தத் தொகை குறித்து பதில் சொல்லாமல் கவனத்தை திசை திருப்புகிறார். அவர்தான் மிகப்பெரிய ஊழல்வாதி என விமர்சித்துள்ளார்.

News April 25, 2024

ஒருவேளை பேய் எழுதியதை படித்திருப்பாரோ?

image

ராஜ்நாத் சிங் போன்ற அரசியல்வாதி பொய் பேசுவது ஏமாற்றம் அளிப்பதாக காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். காங்., தேர்தல் அறிக்கையில் இல்லாத ஒன்றை இருப்பதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். காங்., அறிக்கையின் எந்தப் பக்கத்தில் அதைப் படித்தீர்கள் எனக் கேள்வி எழுப்பியதுடன், ஒருவேளை கண்ணுக்குத் தெரியாத மையினால் பேய் எழுதிய அறிக்கையை படித்திருப்பாரோ என கிண்டலாகக் கூறியுள்ளார்.

News April 25, 2024

சூரிய மின் உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனை

image

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மின் தேவையும் அதிகரித்து வருகிறது. அதன்படி, மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவு நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 5,365 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், நேற்று புதிய உச்சமாக 40.50 MU சூரிய மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாகவும், இது மார்ச் 13இல் பதிவான 39.90 MU என்ற முந்தைய சாதனையை முறியடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

News April 25, 2024

அலட்சியம் காட்டும் தனியார் பள்ளிகள்

image

இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இலட்சக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். எனினும், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. மறுபுறம், சில தனியார் பள்ளிகள் ஆர்டிஇ குறித்த சந்தேகங்களுக்கு முறையாக பதில் அளிப்பதில்லை என பெற்றோர் தரப்பில் புகார் எழுந்துள்ளது. இதனால், 2022 – 23 கல்வியாண்டில் 95,946 ஆக இருந்த ஆர்டிஇ மாணவர்கள் சேர்க்கை, கடந்த ஆண்டு 70,553 ஆக குறைந்துள்ளது.

News April 25, 2024

விவிபேட் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

image

EVM, விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100% ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்கக் கோரிய வழக்கில், நீதிபதிகளின் சந்தேகங்களுக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கமளித்தது. தொடர்ந்து, மனுதாரர் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கப்பெற்றதாக கூறி நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

News April 25, 2024

அண்ணாமலை பேனரை அகற்றியதால் வாக்குவாதம்

image

கேரளாவில் அண்ணாமலையை வரவேற்று வைத்த பேனர்களை போலீஸார் அகற்றியதற்கு பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில் கடந்த சில நாள்களாக அண்ணாமலை பரப்புரை செய்து வருகிறார். வயநாடு பாஜக வேட்பாளர் கே.சுரேந்திரனை ஆதரித்து இன்று அவர் பரப்புரை செய்த நிலையில், அவரை வரவேற்று பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அனுமதி இல்லாததால் அந்த பேனர்களை போலீசார் அகற்றினர்.

error: Content is protected !!