News April 25, 2024

உங்கள் சொத்துகளை காங்கிரஸ் பறித்துவிடும்

image

இந்திய மக்களிடமிருந்து வாழும்போதும் சரி இறந்த பின்னரும் சரி கொள்ளையடிக்க காங்கிரஸிடம் ஒரு மந்திரமுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். சத்தீஷ்கரில் பேசிய அவர், பரம்பரை வரி விதிக்கப்போவதாக காங்கிரஸ் கூறுகிறது. பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட பரம்பரை சொத்து மீதும் வரி விதிக்கும். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், காங்கிரஸ் பறித்துவிடும் எனத் தெரிவித்தார்.

News April 25, 2024

₹66,364 கோடியை திரட்டிய மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள்

image

கடந்த நிதியாண்டில், 185 புதிய நிதிச் சலுகைகள் மூலம் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் ₹66,364 கோடி திரட்டியுள்ளதாக பங்கு தரகு நிறுவனமான ‘பையர்ஸ்’ தெரிவித்துள்ளது. அதன் ஆய்வறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சி குறித்த கருத்துகள் வேகமாக பரவி வரும் நிலையில், முதலீட்டு வாய்ப்புகள் விரிவடைந்து வருகின்றன. இதனை, மூலதனச் சந்தையில் வளர்ச்சியை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் வாய்ப்பாக கருதுவதாக கூறப்பட்டுள்ளது.

News April 25, 2024

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்

image

திமுக ஆட்சியில் போதைப்பழக்கம், வெடிகுண்டு கலாச்சாரம் தலைவிரித்தாடுவதாக இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி அருகே ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்டவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக கூறிய அவர், மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக ஸ்டாலின் இருப்பதாக சாடினார். மேலும், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கவும் அவர் வலியுறுத்தினார்.

News April 25, 2024

30 இலட்சம் புதிய வேலை வாய்ப்புகள் சாத்தியமா?

image

காங்கிரஸின் அறிக்கையில் புதிதாக 30 இலட்சம் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அரசுத் துறையில் வேலைவாய்ப்பினை தேடும் இளையோர்களை இந்த வாக்குறுதி ஈர்த்துள்ளது. ஆனால், அனுமதிக்கப்பட்ட மொத்த மத்திய அரசுப் பணியிடங்களே 40 இலட்சம் தான் எனக் கூறப்படுகிறது. இவர்களை எந்தெந்த துறைகளில் வேலைக்கு அமர்த்துவார்கள்? எவ்வளவு சம்பளம் கொடுப்பார்கள்? என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

News April 25, 2024

நடிகர் விஜய்க்கு காயம்.. வெளியான புகைப்படம்

image

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘THE GOAT’ பட ஷூட்டிங் சமயத்தில் நடிகர் விஜய்க்கு விபத்து ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்றதாகவும் தகவல் வெளியானது. இதனிடையே, மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வரும் போது அவர் கையில் காயம் இருந்ததும், அதற்கு பிளாஸ்திரி போட்டு இருந்ததும் தெரிந்தது. இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படம் மூலம் அவருக்கு கையில் சற்று பலமாக அடிப்பட்டது தெரியவந்துள்ளது.

News April 25, 2024

வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

image

*வெயில் நேரத்தில் தீவிர உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
*அடிக்கடி கை, கால்கள் மற்றும் முகத்தைக் கழுவ வேண்டும். நைலான், பாலிஸ்டர் உடைகளைத் தவிர்த்து பருத்தி உடைகளை அணியலாம்.
*உடல் சூட்டை அதிகரிக்கும் கோழி, நண்டு ஆகியவற்றைத் தவிர்த்து, நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை அதிகம் சாப்பிடலாம்.
*வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து எண்ணெய் குளியல் போடலாம்.

News April 25, 2024

வெற்றிக்கு போராடும் காங்கிரஸ்…

image

காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளில் முற்றிலுமாகச் சிதைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடி வரும் காங்கிரஸ், வெற்றிக்கு மாநிலக் கட்சிகளையே அதிகம் நம்பியுள்ளது. காங்கிரஸ் தனது வெற்றி இலக்கை குறைவாகவே வைத்துள்ளது. அதே நேரம், மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஆதரவு எந்த அளவில் இருக்கும் என்பதைக் காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.

News April 25, 2024

பாஜக சிறுபான்மை அணித் தலைவர் நீக்கம்

image

ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் இஸ்லாமியர்கள் குறித்த பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த ஜெய்ப்பூர் பாஜக சிறுபான்மை அணித் தலைவர் உஸ்மான் கனி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் 3-4 இடங்களை பாஜக இழக்க உள்ளதாகவும், வாக்குச் சேகரிக்கும் போது மக்கள் அவரது பேச்சு குறித்து கேள்வி எழுப்புவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

News April 25, 2024

புரட்சி செய்வதாக கனவு காணும் ராகுல்

image

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை ஜே.டி.எஸ் தலைவர் தேவகவுடா கடுமையாக விமர்சித்துள்ளார். பெங்களூருவில் பேசிய அவர், சொத்து கணக்கெடுப்பு நடத்தி பகிர்ந்து கொடுக்க ராகுல் விரும்புகிறார். தன்னை மாவோயிஸ்ட் தலைவர் என்று ராகுல் நினைக்கிறாரா? புரட்சி செய்வதாக அவர் கனவு காண்கிறார். நாட்டை தலைகீழாக மாற்ற காங்கிரஸ் விரும்புகிறது. இதனை தேர்தல் அறிக்கை குழு தலைவர் சிதம்பரம் ஏற்கிறாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

News April 25, 2024

பங்குச்சந்தையில் எவ்வளவு முதலீடு செய்யலாம்

image

பங்குச்சந்தையில் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. அவர்கள் 100 வயது விதியை பயன்படுத்த வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது 100இல் உங்கள் வயதை கழித்தால் மீதம் கிடைக்கும் எண்ணின் விகிதத்தில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். உதாரணமாக 20 வயதுடையவர்கள் 80% பங்குச்சந்தையிலும், மீதி 20%ஐ தங்கம், கடன் பத்திரம், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.

error: Content is protected !!