India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எல்ஐசி பெயரில் சமூக ஊடகங்களில் மோசடியான விளம்பரங்கள் வலம் வருவதாகத் தனது பாலிசிதாரர்களுக்கு அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கீகாரம் இன்றித் தங்கள் நிறுவனத்தின் பெயர், லோகோவை பயன்படுத்தி மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்கள், நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ள எல்ஐசி நிர்வாகம், இதுபோன்ற மோசடி விளம்பரங்கள் குறித்துத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
திரவ நைட்ரஜனை பிஸ்கெட் உடன் சேர்த்து சாப்பிட்டு வாய், மூக்கில் இருந்து புகை விடுவது இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் துடிதுடிக்கும் வீடியோ பரவி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நைட்ரஜன் பிஸ்கெட்டுக்கு எதிராகப் பலரும் குரல் எழுப்பி வரும் சூழலில், பஞ்சு மிட்டாய் போல இதற்கும் தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ‘பில்லா’ திரைப்படம் மே 1 ஆம் தேதி ரீரிலீஸாகிறது. 2007ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் நயன்தாரா, நமீதா, பிரபு, ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அஜித் இரட்டை வேடத்தில் அசத்தியிருந்த இப்படம் அவரது திரைப் பயணத்தில் மெகாஹிட் கொடுத்தது. இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 150 திரையரங்குகளில் இப்படம் ரீரிலீஸ் செய்யப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. டி20 பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடருகிறார். 2வது இடத்தில் பில் சால்ட்டும் (ENG), 3வது இடத்தில் முகமது ரிஸ்வானும் (PAK) உள்ளனர். டி20 பவுலர்கள் தரவரிசையில் அடில் ரஷித் (ENG) முதலிடத்தில் தொடருகிறார். வனிந்து ஹசரங்கா (SL) 2வது இடத்தில் உள்ளார்.
சென்னையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ஹேமசந்திரன் (26), 150 கிலோவுக்கு மேல் உடல் எடை இருத்ததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
ராஜஸ்தானில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சொத்துகள் மறுபங்கீடு செய்யப்பட்டு இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் என பேசியது சர்ச்சையானது. பிரதமரின் வெறுப்புப் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் பலர் புகாரும் அளித்தனர். இந்நிலையில், இந்தப் புகார் மனுக்கள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது. அக்சர் படேல் (66) அரைசதம் அடிக்க, அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 43 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். அதுவும் கடைசி ஓவரில் 2, Wd, 6, 4, 6, 6, 6 என அடித்து அசத்திய அவர், அணிக்கு அதிக ரன்களை பெற்று தந்தார். குஜராத் அணி பந்துவீச்சாளர்களில் சந்தீப் வாரியர் 3 விக்கெட்டும், நூர் அகமது ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்திய மக்களிடமிருந்து வாழும்போதும் சரி இறந்த பின்னரும் சரி கொள்ளையடிக்க காங்கிரஸிடம் ஒரு மந்திரமுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். சத்தீஷ்கரில் பேசிய அவர், பரம்பரை வரி விதிக்கப்போவதாக காங்கிரஸ் கூறுகிறது. பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட பரம்பரை சொத்து மீதும் வரி விதிக்கும். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், காங்கிரஸ் பறித்துவிடும் எனத் தெரிவித்தார்.
கடந்த நிதியாண்டில், 185 புதிய நிதிச் சலுகைகள் மூலம் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் ₹66,364 கோடி திரட்டியுள்ளதாக பங்கு தரகு நிறுவனமான ‘பையர்ஸ்’ தெரிவித்துள்ளது. அதன் ஆய்வறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சி குறித்த கருத்துகள் வேகமாக பரவி வரும் நிலையில், முதலீட்டு வாய்ப்புகள் விரிவடைந்து வருகின்றன. இதனை, மூலதனச் சந்தையில் வளர்ச்சியை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் வாய்ப்பாக கருதுவதாக கூறப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் போதைப்பழக்கம், வெடிகுண்டு கலாச்சாரம் தலைவிரித்தாடுவதாக இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி அருகே ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்டவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக கூறிய அவர், மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக ஸ்டாலின் இருப்பதாக சாடினார். மேலும், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கவும் அவர் வலியுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.