India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (ஏப்ரல் 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
கடந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த ஏற்றுமதி 3% சரிந்த நிலையில், மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதி 9.67% அதிகரித்து 2,700 கோடி டாலராக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் மருந்து ஏற்றுமதி 2,540 கோடி டாலராக இருந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அதிகப்படியான மருந்துகள் ஏற்றுமதியாகியுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் துஷார் தேஷ்பாண்டே, நடிகர் அஜித்குமாருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் அதில், ‘புத்திசாலித்தனமும், எளிமையும் நிறைந்தவர் அஜித்’ என புகழாரம் சூட்டியிருந்தார். நடிகர் அஜித் இன்று தனது 24ஆவது திருமண நாளை கொண்டாடும் வேளையில், அவருடன் துஷார் தேஷ்பாண்டே எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 224/4 ரன்கள் குவித்தது. 225 ரன்கள் என்ற இலக்கை துரத்திய குஜராத் அணி, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
மீன ராசியில் புதன் பகவான் நேரடியாக வருகின்ற காரணத்தினால் ரிஷபம், கடகம், மிதுனம் ஆகிய ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பலன்களை பெற போகின்றார். நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். பணம் சம்பாதிப்பதற்கான பல்வேறு விதமான வாய்ப்புகள் கிடைக்கும். நிதிநிலை மிக முன்னேற்றமாக இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல பலன்களை பெற்று தரும். பணத்தை சேமிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும்.
மக்களுக்காக நான் பாடுபட்டிருக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால், என்னுடைய இறுதிச்சடங்குக்கு வாருங்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். கலபுர்கியில் நடந்த கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட
நிலையில் பேசிய அவர், நீங்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கிறீர்களோ இல்லையோ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன். அதுவரை ஓயமாட்டேன் என்றார்.
பிராய்லர் கோழியை அதிகமாகச் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக சில மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதே நேரம், பிராய்லர் கோழிகளுக்கு ஹார்மோன் ஊசிச் செலுத்துவதில்லை எனக் கூறும் மருத்துவர்கள், நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது என்கிறார்கள். அந்தத் தடுப்பூசியும் மனிதர்களில் நேரடி பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை எனக் கூறுகின்றனர்.
சில அமெரிக்க மாகாணங்களில் நடைமுறையில் உள்ள ‘பரம்பரை வரி’ என்பது ஒரு தனி நபர் தனது மூதாதையர் மறைவுக்கு பின், பெறப்படும் பரம்பரை சொத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை வரியாக செலுத்துவதாகும். மூதாதையர் மறைவுக்கு பின், அவரது சொத்துக்களை வாரிசுகள் முழுமையாக பெற முடியாது. அமெரிக்காவில், வரி செலுத்துவோரில் 2% பேரே இந்த வரியை செலுத்துகின்றனர். இந்தியாவில் இதனை 1985இல் ராஜிவ் காந்தி நீக்கியது குறிப்பிடத்தக்கது.
DC அணிக்கு எதிரான 40ஆவது லீக் போட்டியில் GT அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா மிக மோசமான சாதனை படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் வரலாற்றில் எதிரணிக்கு அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த பவுலர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். DC-க்கு எதிரான இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசிய மோஹித் விக்கெட் எதுவும் எடுக்காமல் 73 ரன்களை DC அணிக்கு வழங்கியுள்ளார். அவருக்கு அடுத்ததாக RCB அணியின் பசில் தம்பி (70) உள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் புதிய அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது X பக்கத்தில், ‘தங்கலான் படம் தனித்துவமிக்க, மிகவும் ஸ்பெஷலான படமாக இருக்கும். புதிய பாணியில் குரல் பதிவு செய்துள்ளோம். விரைவில் படத்தை திரையில் வெளியிட உற்சாகத்துடன் காத்திருக்கிறோம்’ என பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.