India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் உற்பத்தியாகும் வெள்ளை டீத்தூள் ஒரு கிலோ ரூ.1.5 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. அங்குள்ள உயர்ந்த மலைச்சிகரங்களில் வளரும் இளம் தேயிலையை பறித்து தயாரிக்கப்படும் இந்த டீத்தூள் ஆண்டுக்கு 15 முதல் 20 கிலோ அளவுக்கு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு முன்னர், 2022ஆம் ஆண்டு அசாம் டீத்தூள் ஒரு கிலோ ரூ.1.15 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது.
➤ 1792 – கில்லட்டின் கருவி மூலம் முதலாவது மரண தண்டனை பாரிசில் நிறைவேற்றப்பட்டது. ➤ 1945 – ஐக்கிய நாடுகள் அவையை நிறுவுவதற்கான ஆலோசனைகள் சான் பிரான்சிஸ்கோவில் 50 நாடுகளின் பங்களிப்போடு தொடங்கின ➤ 1974 – போர்ச்சுகலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது. ➤ 2015 – நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 9,100 பேர் உயிரிழந்தனர்.
மக்களவை இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, 89 தொகுதிகளில் நாளை (ஏப்.26) நடைபெறுகிறது. இதனையொட்டி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடைபெற்று வந்த தீவிர பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. ராகுல், சசிதரூர், எச்.டி குமாரசாமி, டி.கே.சுரேஷ், தேஜஸ்வி சூர்யா, ஹேமமாலினி, அருண் கோயில் ஆகியோர் 2ஆம் கட்டத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
தோல்வி பயத்தால் கலவரத்தை ஏற்படுத்தவும், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவும் மோடி நாகரிகமற்ற முறையில் பேசி வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை சாடியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், வடமாநிலங்களில் 100 இடங்களில் பாஜக வெற்றி பெறாதென வடநாட்டு பத்திரிகையாளர்கள் கூறுவதாகவும், வயநாடு தொகுதியில் ராகுல் 5 1/2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாரென்றும் தெரிவித்தார்.
கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள சாலைகள் ஆறாக மாறியுள்ளன. ஐ.நா வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, கென்யாவில் கனமழைக்கு இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். மழை, வெள்ளத்தால் மோசமான பாதிக்கப்பட்ட தலைநகர் நைரோபியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். துபாய், சீனாவை தொடர்ந்து, கென்யாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: வான் சிறப்பு
▶குறள் எண்: 12
▶குறள்: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.
▶பொருள்: உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
நமது உடல் உறுப்புகள் சீராக இயங்க ரத்த ஓட்டம் மிகவும் அவசியம். ரத்தம் மூலமாக தான் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எடுத்து செல்லப்படுகிறது. வைட்டமின் B12 குறைபாடு இருந்தால் கால்கள் மரத்து போவது, கை, கால்கள் குளிர்ந்து போகலாம். இதற்கு உணவில் மீன், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, முந்திரி, பாதாம், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை அதிகளவில் சேர்த்துக் கொள்வது ரத்த ஓட்டம் சீராக உதவும்.
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேர ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுக்கு இருமுறை நடக்கும் இந்த தேர்வில், ஜனவரியில் 23 பேரும், ஏப்ரலில் 33 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதனால், 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண் அதிகரித்துள்ளது.
இன்று (ஏப்ரல் 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
மேற்கு வங்க முதல்வர் பதவியை மம்தா ராஜினாமா செய்ய வேண்டுமென பாஜக வலியுறுத்தி உள்ளது. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 24,000 பேரின் பணி நியமனத்தை ஒரே உத்தரவில் அதிரடியாக ரத்து செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை வரவேற்றுள்ள பாஜக, மம்தா தலைமையிலான திரிணாமுல் அரசின் வெட்கக்கேடான ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.