India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணல் குவாரி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், திருச்சி, தஞ்சை, வேலூர், கரூர், அரியலூர் ஆட்சியர்களுக்கு E.D. மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் 5 ஆட்சியர்களுக்கும் E.D. கடந்த நவம்பரில் சம்மன் அனுப்பியது. உச்சநீதிமன்றமும் விசாரணையில் ஆஜராக உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து E.D. மீண்டும் சம்மன் அனுப்பியது. அதையேற்று 5 பேரும் இன்று நேரில் ஆஜராவார்கள் என கூறப்படுகிறது.
நேற்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை, வெயில் போன்ற காரணங்களால் பள்ளித் திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் ஜூன் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதே நாளில் தான் மற்ற மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்தில் இன்று நடைபெறும் 41ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியுடன், பெங்களூரு அணி மோதுகிறது. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவிப்பில் தொடர் சாதனை படைத்து வரும் ஹைதராபாத் அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் வலுவாக உள்ளது. ஏற்கெனவே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள பெங்களூரு அணி இன்றைய போட்டியிலும் சறுக்கினால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பு இல்லை.
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று, சில இடங்களில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கோடைக்காலம் தொடங்கியது முதலே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வேலூர், கரூர், ஈரோடு உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இயல்பை விட அதிக வெப்பம் பதிவாகும். தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
▶ஏப்ரல் – 25 | ▶ சித்திரை – 12 ▶கிழமை: வியாழன்| ▶திதி: பிரதமை ▶நல்ல நேரம்: காலை 10:30 – 11:30 வரை ▶கெளரி நேரம்: காலை 12:30 – 01:30 வரை, மாலை 06:30 – 07:30 வரை ▶ராகு காலம்: 01:30 – 03:00 வரை ▶எமகண்டம்: காலை 06:30 – 07:30 வரை ▶குளிகை: காலை 09:00 – 10:30 வரை ▶சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து விட்டாலும், தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் உள்ளன. இந்நிலையில், தொழிலாளர் தினமான வரும் மே 1ஆம் தேதி நிகழ்ச்சிகளை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அனுமதி கோரப்பட்டது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, மே தின நிகழ்ச்சிகள் தொடர்பான அனுமதிகளை, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வழங்குவார்களென தெரிவித்துள்ளார்.
கிரீஸ் நாட்டின் தலைநகரமான ஏதென்ஸ் நகரின் வானம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறத்தில் மாறியது. தொன்மையான நகரம் திடீரென நிறம் மாறியதால், சுற்றுலாப் பயணிகளுடன் உள்ளூர் மக்களும் பீதியடைந்தனர். இது குறித்து நாசா, மேகக் கூட்டத்துடன் சஹாரா பாலைவனத்தின் மண் துகள்கள் கலந்ததால் இது போன்று ஆரஞ்சு நிற போர்வை போர்த்தியது போல் மாறியதாகவும், மேலும் 2 நாட்களுக்கு இதுபோன்ற நிலை தொடருமெனவும் விளக்கமளித்துள்ளது.
ராஜஸ்தானின் பன்ஸ்வாரா-துங்கர்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாமென காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறது. காங்கிரஸ், பாரத் ஆதிவாசி கட்சியுடன் திடீரென கூட்டணி அமைத்த நிலையில், முன்னர் அறிவித்த வேட்பாளரான அரவிந்த் தாமோர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற மறுத்துவிட்டார். இதனால், கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டாமென பிரசாரம் செய்யும் சூழலுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை வில்வித்தை இறுதிப்போட்டிக்கு இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி முன்னேறி அசத்தியுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் காம்பவுண்ட் அணிகள் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்திய ஆண்கள் அணி 235-233 என்ற புள்ளி கணக்கில் தென்கொரிய அணியை வீழ்த்தியது. இதேபோன்று, மற்றொரு அரையிறுதி சுற்றில், இந்திய பெண்கள் அணி 235 – 230 என்ற புள்ளி கணக்கில் எஸ்தோனியா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மே.வங்கத்தில் பாஜகவை சேர்ந்த 10 முக்கியத் தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸில் இணைய காத்திருப்பதாக திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவரான அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். முர்ஷிதாபாதில் ரோடு ஷோவில் பங்கேற்று பேசிய அவர், கட்சிகளை உடைக்கும் விளையாட்டில் பாஜக தற்போது ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். ஆனால் இதனை மறுத்துள்ள பாஜக, தேர்தலுக்கு பின் திரிணாமுல் கட்சி சீட்டுக்கட்டு போல சரியுமென கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.