India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குரூப் 1 முதல் குரூப் 4 தேர்வுக்கான கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதன்படி 6,244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதி, 2,030 பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு செப்.28ஆம் தேதி, 90 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி, 29 பணியிடங்களுக்கான குரூப் 1 பி, குரூப் 1 சி தேர்வுகள் ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள PVR-INOX திரையரங்குகளில், இனிமேல் விளம்பரங்கள் திரையிடப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பட இடைவேளையின் போது விளம்பரங்கள் இருக்காது. படங்களின் டிரைலர்கள் மட்டுமே திரையிடப்படும். படம் தொடங்குவதற்கு முன்பு திரையிடப்படும் விளம்பர நேரத்தை, 10 நிமிடங்களாகக் குறைப்பதன் மூலம் கூடுதல் காட்சிகளைத் திரையிட்டு விளம்பர வருவாய் இழப்பை ஈடுகட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பத்தாண்டு காலம் மத்தியில் தான்தோன்றித்தனமான ஒரு கொடுங்கோல் ஆட்சி நடந்தது என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய அவர்,
பிரதமர் மோடிக்கு இன்னும் 5 ஆண்டுகள் நாட்டை ஆளும் வாய்ப்பைக் கொடுத்தால் சவக்குழி தோண்டி, நம்மைப் புதைத்து மூடிவிட்டுப் போய்விடுவார். மதத்தை வைத்து ஆட்சியைப் பிடித்தவர்கள் மக்களைப் பற்றி எப்படிச் சிந்திப்பார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் உள்ள கடன் அட்டைகளின் (கிரெடிட் கார்டு) எண்ணிக்கை 10.2 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2023 மார்ச் மாதம் நாட்டு மக்களிடம் இருந்த கடன் அட்டைகள் எண்ணிக்கை 8.5 கோடியாக இருந்தது. இது 2024 பிப்ரவரி மாதம் 10 கோடியாக அதிகரித்தது. இந்நிலையில் 2024 மார்ச்சில் அந்த எண்ணிக்கை 10.2 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் எச்டிஎப்சி 20%, எஸ்பிஐ 18.5%, ஐசிஐசிஐ 16.6% பங்களிப்பு செய்கின்றன.
மனைவியின் சொத்து மீது கணவருக்கு உரிமை கிடையாதென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரள பெண் ஒருவர், முன்னாள் கணவரிடம் இருக்கும் தனது ஆபரணங்களைத் திருப்பி அளிக்கக்கோரி தொடுத்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனைவியின் சொத்து 2 பேரின் கூட்டு சொத்து கிடையாது என்றும், பிரச்னையான நேரத்தில் பயன்படுத்தலாம், ஆனால் திருப்பியளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
லலிதாம்பிகையின் ஆபரணத்திலிருந்து கலை & ஞானத்தின் குழந்தை வடிவமாக அவதரித்தவள் மனோன்மணி ஸ்ரீபாலாம்பிகை. சாக்த வழிபாட்டில் வாலையாக போற்றப்படும் இவருக்கு வெள்ளிக்கிழமைகளில் மல்லிகை மலர்கள் சமர்ப்பித்து, கற்கண்டு சாதம் நைவேத்தியம் செய்து வழிபட திடீர் பண வரவால், தீராத கடன் பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்றும் வாழ்க்கையில் நல்வழி பிறக்கும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது.
குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். தொடக்கம் முதலே சிக்சர், பவுண்டரி என விளாசிய அவர், 88*(43) ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்தவர்களுக்கான (ஆரஞ்சு கேப்) தரவரிசையில் (342 ரன்களுடன்) 3ஆவது இடத்திற்கும், அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பருக்கான தரவரிசையில் முதலிடத்திற்கும் முன்னேறியுள்ளார்.
முதல் முறையாக முழுக்க முழுக்க கோதுமையில் தயாரிக்கப்பட்ட ‘100% வீட் பீர்’ என்ற புதிய பீர் டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதேபோல், பிரபல பிராண்ட் ஆன ‘காப்டர்’ தயாரிப்பில், ‘செலக்ட் சூப்பர் ஸ்ட்ராங், செலக்ட் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்மூத் லெஹர் பீர்’ வகைகள் விற்பனைக்கு வரவுள்ளது. வீட் பீர் ₹190, காப்டர் வகை பீர்கள் ₹160 – ₹170 விலையில் கிடைக்கும்.
கடந்த மார்ச்சில் கடன் அட்டைகள் (கிரெடிட் கார்டு) மூலம் ₹1.64 லட்சம் கோடியை மக்கள் செலவிட்டுள்ளனர். 2023 மார்ச்சில் கடன் அட்டைகள் மூலம் மக்கள், ₹1.37 லட்சம் கோடியை செலவிட்டிருந்தனர். அதை விஞ்சும் வகையில், இந்த ஆண்டு மார்ச்சில் ₹1.64 லட்சம் கோடிக்கு செலவிட்டுள்ளனர். இதில் ஆன்லைனில் மட்டும் ₹1.04 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இது 2023 மார்ச்சுடன் ஒப்பிடுகையில் 20% அதிகமாகும்.
தமிழக மின்சார வாரியத்தில் ரூ.397 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அறப்போர் இயக்கம் தனது மனுவில், 2021-23ஆம் ஆண்டுக்கு இடையில் 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ரூ.1,182.88 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டது. இதில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.